விற்பனையில் 48% உயர்வு.. ஏற்றுமதியில் மந்தம்.. ராயல் என்ஃபீல்டு

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, தனது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட புல்லட் வாகன அறிமுகத்தால் கடந்த 6 மாதங்களாகத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் விற்பனை அதிகரித்து வருகிறது.

 

2015ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சுமார் 40,769 வாகனங்களை விற்று விற்பனையில் 48 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலக்கட்டத்தில் இதன் அளவு வெறும் 27,542 ஆக மட்டுமே இருந்தது.

புடு புடு வண்டி.. சுடச்சுட விற்பனை..: ராயல் என்ஃபீல்டு

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் 350சிசி ரக வாகன விற்பனையில் 52 சதவீத உயர்வையும், 350சிசிக்கும் அதிகமான என்ஜின் சக்தி கொண்ட வாகன விற்பனையில் 13 சதவீத உயர்வைச் சந்தித்துள்ளதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய சந்தையில் இந்நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், வெளிநாட்டுச் சந்தைகளில் மந்தமான விற்பனை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனால் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி வாகன எண்ணிக்கை 457 ஆக மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதன் அளவு 344ஆக இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Royal Enfield sales jump 48% in November

Royal Enfield today reported 48 per cent jump in total motorcycles sales to 40,769 units in November as against 27,542 units sold in the same month last year.
Story first published: Wednesday, December 2, 2015, 14:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X