வங்கிகளின் லாபத்தைப் பதம் பார்க்க வரும் புதிய வட்டி கணக்கீட்டு முறை

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ரிசர்வ் வங்கி அடுத்தச் சில நாட்களில் அறிவிக்க உள்ள புதிய வட்டி கணக்கீட்டு முறை வங்கிகளின் லாபத்தைப் பதம்பார்க்க உள்ளது.

 

புதிய கணக்கீட்டு முறையால் பொது மற்றும் தனியார் வங்கிகளின் மொத்த வட்டி அளவீடுகளைக் குறையும். இதனால் வங்கிகளின் வட்டி வருமானம் மற்றும் லாப அளவுகள் பாதிக்கப்படும் என வங்கித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டும் அல்லாமல் காப்பரேட் கடன்களை அதிகளவில் கொடுத்துள்ள வங்கிகள் இதில் அதிகளவில் பாதிக்கப்படும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

கடந்த ஒரு வருடத்தில் ரிசர்வ் வங்கி 125 புள்ளிகள் வட்டி விகிதத்தைக் குறைத்தும், வணிக வங்கிகள் வெறும் 60 புள்ளிகள் வரை மட்டுமே குறைந்துள்ளது. இதனால் வங்கிகளின் லாபம் அதிகரித்தாலும் நாட்டின் வளர்ச்சி பின்தங்கியுள்ளது.

இத்தகைய நிலையை மாற்றவும், வங்கிகளில் கார்பரேட் கடன் அளவுகளைக் குறைத்து நாட்டு மக்களுக்குப் பயன்படும் வகையில் கடன் அளிக்கவும் ரிசர்வ் வங்கி இப்புதிய வட்டி கணக்கீட்டு முறையை அறிவித்துள்ளது.

வட்டி வருமானம்

வட்டி வருமானம்

இந்திய வங்கிகளில் காப்பரேட் கடன்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ள இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் புதிய வட்டி கணக்கீட்டு முறை வங்கிகளின் வட்டி வருமானத்தை 0.10-0.30 சதவீதம் வரை குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதன் அளவுகள் குறைவாகத் தெரிந்தாலும் அடுத்தச் சில வருடங்களின் இதன் பாதிப்பு அதிகளவில் இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரகுராம் ராஜன்
 

ரகுராம் ராஜன்

அடுத்தச் சில நாட்களில் வட்டி கணக்கீட்டு முறைக்கான வழிமுறைகள் மற்றும் அமலாக்கம் குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அறிவிக்கும் என ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

கார்பரேட் கடன்

கார்பரேட் கடன்

இந்நிலையில் இந்தியாவில் அதிகளவில் கார்பரேட் கடன்களைக் கொடுத்த வங்கிகளில் ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஆகியவை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இழப்பு

இழப்பு

மேலும் புதிய வட்டி கணக்கீட்டு முறையின் மூலம் இந்திய வங்கிகள் சுமார் 15,000 கோடி ரூபாய் வட்டி வருமானத்தை இழக்க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI, Axis & others to be hit by new lending rate norm

The use of a new method for lending rate calculation is going to squeeze banks' net interest margin (NIM), depress interest income and hit their profits, especially those with high concentration of corporate loans.
Story first published: Wednesday, December 2, 2015, 12:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X