இன்போசிஸ் ஊழியர்கள் எண்ணிக்கை இரட்டிப்பு.. அயர்லாந்தில் புதிய ஆராய்ச்சி மையம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: நாட்டின் 2வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் இந்தியா மட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகளில் தனது மென்பொருள் சேவையை வெற்றிகரமாக வழங்கி வருகிறது.

இந்நிலையில் அயர்லாந்தில் உள்ள இன்போசிஸ் கிளையில் ஊழியர்களை எண்ணிக்கையை இரட்டிப்பாக இன்போசிஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் முதல் முறையாக இந்தியாவை விடுத்து வெளிநாட்டில் துவங்கப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அயர்லாந்தில் அமைய உள்ளதாக இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

என்டா கென்னி

என்டா கென்னி

இன்போசிஸ் நிறுவனத்தில் புதிதாக இணைய உள்ள 250 புதிய ஊழியர்களை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தொழில்நுட்பத்திற்கும், புதுமைக்கும் எங்களது நாடும் நாட்டு மக்களும் மையப் புள்ளியாக இருக்கும். இதுவே அயர்லாந்து நாட்டின் சக்தி என ஆயர்லாந்து நாட்டின் பிரதமர் என்டா கென்னி தெரிவித்தார்.

உதவி

உதவி

இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் அயர்லாந்தில் அலுவலகத்தை அமைக்கவும், விரிவாக்கம் செய்யவும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் அரசு முழுமையான ஒத்துழைப்பை அளித்து வருகிறது எனவும் என்டா குறிப்பிட்டார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்

முதலில் இன்போசில் நிறுவனத்தில் 95 ஊழியர்கள் கொண்டு பெங்களூரில் முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் துவங்கப்பட்டுள்ளது. இதன் பின் தற்போது அயர்லாந்தில் சுமார் 155 ஊழியர்களைக் கொண்டு இயங்க உள்ளதாக இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் எண்ணிக்கை

ஊழியர்கள் எண்ணிக்கை

மேலும் 250 ஊழியர்களைக் கொண்டு இயங்கி வந்த அயர்லாந்து இன்போசிஸ் வர்த்தகம் இனி 500 ஊழியர்கள் கொண்டு விரிவாக்கம் அடைய உள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விஷால் சிக்கா

விஷால் சிக்கா

ஆயர்லாந்து சந்தையில் இன்போசிஸ் புதுமையான தொழில்நுட்பம் மற்றும் கல்வி மற்றும் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய அளவில் தனது மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருகிறது. மேலும் அயர்லாந்து சந்தையில் புதிய வாடிக்கையாளர்களைப் பெறும் பணியில் இன்போசிஸ் நிர்வாகம் தற்போது செயல்பட்டு வருகிறது என இந்நிறுவனத்தின் சீஇஓ விஷால் சிக்கா தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys to expand operations in Ireland, create 250 new jobs

Software services giant Infosys will expand its operations in Ireland, doubling the number of staff in the country to 500 in three years and setting up its first product-centric research and development centre outside India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X