முறைகேடாகப் பெற்ற ரூ.900 கோடி கடன்.. விஜய் மல்லையாவிடம் சிபிஐ விசாரணை..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய வங்கித்துறையில் முக்கியப் பொதுத்துறை வங்கியாகத் திகழும் ஐடிபிஐ வங்கியில் அளித்த ரூ.900 கோடி கடன் மோசடி தொடர்பாக யுபி குழுமத்தின் தலைவர் விஜய் மல்லையாவிடம் வெள்ளிக்கிழமை, வங்கி அதிகாரிகளுடன் சிபிஐ விசாரணை நடத்தியது.

 
முறைகேடாகப் பெற்ற ரூ.900 கோடி கடன்.. விஜய் மல்லையாவிடம் சிபிஐ விசாரணை..!

ஐடிபிஐ வங்கி, விஜய் மல்லையா தலைமை வகிக்கும் கிங்பிஷர் நிறுவனத்திற்குக் கடன் வரம்பை மீறியும், விதிமுறைகளை மீறியும் கடன் கொடுத்துள்ளது. இதனை எதிர்த்து விஜய் மல்லையா மற்றும் கிங்பஷர் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி ரகுநந்தன் மற்றும் ஐடிபிஐ வங்கியின் சில முக்கிய வங்கி அதிகாரிகளின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கிங்பிஷர் விமான நிறுவன பெயரில் கொடுத்துள்ள சுமார் 7,000 கோடி ரூபாய் கடனில் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருக்கும் போது, வரம்பை மீறியும், விதிமுறைகளுக்கும் மீறி ஐடிபிஐ வங்கிக் கடன் கொடுத்திருக்கிறது.

முறைகேடாகப் பெற்ற ரூ.900 கோடி கடன்.. விஜய் மல்லையாவிடம் சிபிஐ விசாரணை..!

முதல் முறையாக இவ்வங்கியின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் இந்த வழக்கு மற்றும் விசாரணை வங்கி, மல்லையா மற்றும் சிபஐ தரப்புகளுக்கு மட்டும் நடுவில் இருக்கட்டும் என வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இக்கடனில் நிபுணர் குழு கடன் அளிக்க வேண்டாம் என அறிவுறுத்தி கிங்பிஷர் விமான நிறுவனத்துக்குக் கடனை நீட்டித்ததற்கான காரணத்தை வங்கி அதிகாரிகள் விளக்க வேண்டும் எனச் சிபிஐ கோரியுள்ளது.

2013ஆம் ஆண்டில் மட்டும் பல்வேறு பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் தொடர்பாகக் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது சுமார் 27 வழக்குகளைச் சிபிஐ பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CBI questions Vijay Mallya in alleged loan default case

CBI has registered a case against Mallya, Director of defunct Kingfisher Airlines; the company; A Raghunathan, Chief Financial Officer of the Airlines; and unknown officials of IDBI Bank.
Story first published: Friday, December 11, 2015, 13:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X