புத்தாண்டு பரிசாகப் புதிய 4ஜி சேவை.. மகிழ்ச்சியில் ரிலையன்ஸ் ஜியோ ஊழியர்கள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய டெலிகாம் துறையைப் புரட்டி போட காத்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவை வருகிற டிசம்பர் 27ஆம் தேதி துவங்க உள்ளது.

ஆனால் இத்துவக்கம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மட்டும் என ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு பரிசாக இதை ஊழியர்கள் கருதினாலும், சேவையைத் துவக்குவதில் நிலவும் காலதாமதத்தை மறைக்கும் விதமாக ரிலையன்ஸ் ஜியோ செயல்படுகிறது.

காலதாமதம்

காலதாமதம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 4ஜி சேவை அறிமுகத்தின் காலதாமதத்தால் பார்தி ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் தங்களது 4ஜி சேவையை விரிவாக்கம் செய்யவும் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றவும் ஏற்ற தருணமாக அமைந்துள்ளது.

இலவச 4ஜி சேவை

இலவச 4ஜி சேவை

நாட்டின் மிகப்பெரிய நிறுவன குழுமமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிளைகளில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இந்தியா முழுவதும் உள்ள தனது ஊழியர்களுக்கு இலவச 4ஜி சேவையை அளிக்க உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

83வது நினைவு தினம்

83வது நினைவு தினம்

மேலும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானி அவர்களின் 83வது நினைவு தினத்தின் ஒரு பகுதியாகவே இந்த 4ஜி சேவையை அறிமுகம் செய்யாவதாக ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

தள்ளுபடி
 

தள்ளுபடி

அதுமட்டும் அல்லாமல் திருபாய் அம்பானியின் 83வது நினைவு தினத்தையொட்டி ரிலையன்ஸ் ஜியோ ஊழியர்களுக் இலவச 4ஜி சேவை மட்டும் அல்லமல்ல 4ஜி சேவைக் கொண்ட மொபைல் போன்களையும் தள்ளுபடி விலை விற்கத் திட்டமிட்டுள்ளது.

ஏப்ரல்-மே

ஏப்ரல்-மே

இந்நிறுவனத்தின் முழுமையான சேவை வருகிற ஏப்ரல் - மே மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என ஜியோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதுவரை சந்தையில் பிற நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம் தான்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Jio to start free 4G service for employees from December 27

Reliance Jio Infocomm will start its 4G service on December 27 but only for group employees, indicating a further delay in the commercial launch and giving rivals Bharti Airtel, Vodafone and Idea more time to ramp up their own high-speed broadband offerings.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X