கேமிங் நிறுவனங்களில் ஆர்வம் காட்டும் பிளிப்கார்ட்.. பெங்களூரு நிறுவனத்தில் ரகசிய முதலீடு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: நாட்டின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் நடத்திய முதல் பிக் பில்லியன் டே தள்ளுபடி விற்பனையில் இந்நிறுவனம் 2,000 ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்தது.

இதில் சற்றும் தளராமல் முதலீட்டாளர்களின் தொடர் ஊக்கத்தின் (பணம்) காரணமாகக் கேமிங் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறது பிளிப்கார்ட்.

('ஏர்செல்' நிறுவனத்தைக் கைப்பற்ற அனில் அம்பானி திட்டம்.. சோகத்தில் ஏர்டெல்..!)('ஏர்செல்' நிறுவனத்தைக் கைப்பற்ற அனில் அம்பானி திட்டம்.. சோகத்தில் ஏர்டெல்..!)

முதல் நிறுவனம்

முதல் நிறுவனம்

பிளிப்கார்ட் நிறுவன தலைவர்கள் ஈகாமர்ஸ் துறையை மட்டும் நம்பி இருக்காமல் தங்களது லாப அளவுகளை மேம்படுத்த கேமிங் நிறுவனங்களில் முதலீடு செய்த திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி 2014ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் மேட்ராட் கேம்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தது.

 

2வது நிறுவனம்

2வது நிறுவனம்

தற்போது இதே துறையில் பெங்களூரைச் சேர்ந்த நிறுவனமான மெக் மோச்சா நிறுவனத்தில் ப்ளூம் வென்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அறிவிக்கப்படாத ஒரு மிகப்பெரிய முதலீட்டை பிளிப்கார்ட் முதலீடு செய்துள்ளது.

மெக் மோச்சா

மெக் மோச்சா

இந்தப் பெங்களூரு நிறுவனம் தனது வர்த்தக விரிவாக்கத்திற்கு ஏற்ப ஊழியர்கள், புதிய கேம்கள், மற்றும் சமுக மற்றும் பேமென்ட் சொல்யூஷன்களை உருவாக்க நிதி திரட்ட திட்டமிட்டது.

இதன் படி பிளிப்கார்ட் மற்றும் ப்ளூம் வென்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து மிகப்பெரிய அளவிலான முதலீட்டைப் பெற்றது.

 

கேம்கள்

கேம்கள்

இந்நிறுவனம் இதுவரை பப்பெட் பன்ஞ்ச் மற்றும் சோட்டா பீம்- ஹிமாலையன் அட்வென்சர்ஸ் என்னும் 2 கேம்களை வெளியிட்டுள்ளது. இதுவரை 4,00,000 முறை இந்நிறுவன கேம்கள் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.

கேமிங் துறை

கேமிங் துறை

இந்தியாவில் 2018ஆம் ஆண்டுக்குள் கேமிங் துறையின் வர்த்தகம் மற்றும் சந்தை 3 பில்லியன் டாலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதன் அளவு வெறும் 1 பில்லியன் டாலர் தான். இத்தகைய சந்தையை அடையவே பிளிப்கார்ட் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

இனி எமகண்டம் தான்..!

இனி எமகண்டம் தான்..!

பிளிப்கார்ட் பங்குகளை விற்கும் முதலீட்டாளர்கள்.. சுக்கிரன் திசை முடிந்தது.. இனி எமகண்டம்..!பிளிப்கார்ட் பங்குகளை விற்கும் முதலீட்டாளர்கள்.. சுக்கிரன் திசை முடிந்தது.. இனி எமகண்டம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart backs mobile gaming startup

Mobile gaming firm Mech Mocha has raised an undisclosed amount of seed funding from e-commerce major Flipkart and seed-stage investor Blume Ventures.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X