சென்னை: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டெலிகாம் சந்தையில் ஏர்டெல் நிறுவனத்திற்கு இணையாக வளர்ச்சி அடையவும், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக உருவெடுக்கவும் திட்டமிட்டு கடந்த சில மாதங்களாகப் பல பணிகளைச் செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாகச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் இயங்கி வரும் ஏர்செல் நிறுவனத்தைக் கைப்பற்ற பேச்சுவார்த்தையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் துவங்கியுள்ளது.
(வாழ்வில் வெற்றி பெற, இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க போது..)

அனில் அம்பானி
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரான அனில் அம்பானி கடந்த சில நாட்களாகத் தனது டெலிகாம் வர்த்தகத்தை அனைத்து வழிகளிலும் விரிவாக்கம் செய்து வருகிறார்.
சமீபத்தில் ரஷ்ய சிஸ்டமா நிறுவனத்தின் இந்திய கிளை வர்த்தக நிறுவனமான எம்டிஎஸ் நிறுவனத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 4,500 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இந்நிறுவனத்தை வாங்கி 2 மாதங்கள் கூட முழுமையாக முடியாத நிலையில் தற்போது ஏர்செல் நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்-ஏர்செல்
இந்தக் கூட்டணி மூலம் இந்திய டெலிகாம் சந்தையில் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் ஏர்டெல் நிறுவனத்திற்கு இணையாக உயர முடியும். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்-ஏர்செல் கூட்டணியின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 200 மில்லியன், ஏர்டெலின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 230 மில்லியன் மட்டுமே. இதனால் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உருவெடுக்கும்.

ஸ்பெக்டரம் கையிருப்பு
அதுமட்டும் அல்லாமல் இக்கூட்டணி நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் கையிருப்பு அளவு மொத்த ஸ்பெக்டரம் அளவீடுகளில் 19 சதவீதமாக உயரும். இதனால் இந்தியாவில் அதிக ஸ்பெக்ட்ரம் கொண்டது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தான்.

ஐடியா உடன் போட்டி
அதேபோல் வருவாய் அளவுகளில் இக்கூட்டணி ஐடியா செல்லுலார் நிறுவனத்திற்கு இணையாக உயர உள்ளது. 2014ஆம் நிதியாண்டில் ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவுகள் 31,555 கோடி ரூபாய், ஆர்காம்-ஏர்செல் கூட்டணியின் மொத்த வருவாய் 31,000 கோடி ரூபாய் வெறும் 555 கோடி ரூபாய் தான் வித்தியாசம்.

3 மாத காலம்
இந்நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்-ஏர்செல் 3 மாத பேச்சுவார்த்தைக்குள் இறங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்தைக் கைப்பற்றுவது குறித்து மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் (74 சதவீத பங்குகள்) மற்றும் பிரதாப் ரெட்டி குடும்பத்தின் (அப்பலோ மருத்துவமனை) சிந்தியா செக்கூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பேச்சுலவார்த்தையைத் துவங்கியுள்ளது.

ஏர்செல்
1999ஆம் ஆண்டுச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் சிந்தியா செக்கூரிட்டீஸ் நிறுவனங்களின் முதலீட்டில் சி.சிவசங்கரன் தலைமையில் ஏர்செல் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 83 மில்லியனாக உயர்ந்து நாட்டின் 5 வது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாகத் திகழ்கிறது.

டவர் விற்பனை
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 38,000 கோடி ரூபாய் கடனை தீர்க்க இந்நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் 96 சதவீத ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவனப் பங்குகளையும் மீதமுள்ள 4 சதவீத பங்குகளையும் விற்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த விற்பனையின் மூலம் 22,000 கோடி ரூபாய் நிதியைத் திரட்டவும், திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு இந்நிறுவன கடனை பெருமளவில் குறைக்கவும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

எம்டிஎஸ் நிறுவனம்
எம்டிஎஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தை முழுமையாகக் கைப்பற்றியது ரிலையன்ஸ்..!

ஏர்டெல்
இந்நிலையில் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாகத் திகழும் ஏர்டெல் தனது 4ஜி மற்றும் பிற வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யக் கடுமையான முயற்சிகள் செய்து வரும் நிலையில் RCOM நிறுவனத்தின் இந்தத் திடீர் வளர்ச்சி கண்டு பொறாமையில் பொங்கி வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ உடன் அனில் அம்பானி
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தன்வசம் உள்ள ஸ்பெக்டரத்தை ‘trading and sharing' முறையில் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் 4ஜி சேவைக்காகப் பிகிர திட்டமிடப்பட்டுள்ளது.

டீல் என்ன ஆகும்..
ஏர்செல் நிறுவனத்திற்குத் தற்போது உள்ள ஸ்பெக்டரம் பிரச்சனை, பங்கு கைமாற்றுதல் பிரச்சனையில் இருந்து தப்பிக்க அனில் அம்பானி நிறுவனத்துடன் இணைய ஒப்புக்கொள்ளும் எனக் கணிக்கப்படுகிறது.

"மாஸ்டர் பிளான்"
பேஸ்புக் கைபற்றிய டாப் 10 நிறுவனங்கள்.. "மாஸ்டர் பிளான்" மிஸ்டர்.மார்க்..!