ஆயுத உற்பத்தியே 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் முக்கியக் குறிக்கோள்.. மோடி அதிரடி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தும்கூர்: இந்திய நாட்டின் பாதுகாப்பில் பிற நாடுகளின் ஆயத்தங்களை மட்டும் நம்பி இருக்க முடியாது. நமக்குத் தேவையான ஆயுதங்களை நாமே தயாரிக்க வேண்டும், இதனை அடையவே மேக் இன் இந்தியா திட்டம் உருவாக்கப்பட்டது எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தும்கூர் மாவட்டம்

தும்கூர் மாவட்டம்

கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் ஹெச்.ஏ.எல் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தயாரிப்பு தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இவ்விழாவில் மோடி மேக் இன் இந்தியா குறித்தும், ஆயுத உற்பத்தி குறித்து மத்திய அரசின் உண்மையான நோக்கத்தைத் தெரிவித்தார்.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

இவ்விழாவில் பேசிய மோடி, இந்தியாவின் பாதுகாப்பில் எப்போதும் பிற நாடுகளை நம்பியிருக்க முடியாது, இந்திய ஆயுத படைக்கு நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் ஆயுதங்கள் தேவை. இதனை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என மோடி கூறினார்.

ஆயுத இறக்குமதி

ஆயுத இறக்குமதி

வெளிநாடுகளில் அதிகப் பணத்திற்கு ஆயுதங்களை இறக்குமதி செய்வதை விட இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம். இதனை அடிப்படையாகக் கொண்டு தான் மேக் இன் இந்தியா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் முதுகெலும்பே ஆயுத உற்பத்தி தான் எனவும் மோடி தெரிவித்தார்.

 

கோடிகளும்.. காலதாமதமும்..

கோடிகளும்.. காலதாமதமும்..

ஆயுத இறக்குமதியில் இந்தியா பல ஆயிரம் கோடிகளை இறக்குமதி செய்தாலும், பழைய தொழில்நுட்பத்தில் செய்யப்பட்ட ஆயுதங்கள் மட்டுமே இந்தியா பெறுகிறது. இது இந்திய பாதுகாப்பிற்குப் பாதகமான நிலை தான்.

அதுமட்டும் அல்லாமல் 2016இல் ஆயுதங்களுக்கு நாம் ஆர்ட்ர் செய்தால் 2020ஆம் ஆண்டே நம் கைகளுக்குக் கிடைக்கிறது.

 

புதிய உத்தரவும்

புதிய உத்தரவும்

இனி எந்த ஒரு ஆயுத இறக்குமதிக்கான ஆர்டர் கையெழுத்திடப்பட்டாலும், இந்தியாவில் உற்பத்திக்கான சாத்தியகூறுகள் ஆராய்ந்த பின்னரே அதற்கான பணிகளைச் செய்ய அனுமதி அளிக்கப்படும் எனப் புதிய உத்தரவை மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய தொழிற்சாலை

புதிய தொழிற்சாலை

ஹெச்.ஏ.எல் நிறுவனத்தின் புதிய ஹெலிகாப்டர் தயாரிப்பு தொழிற்சாலையை அமைப்பதற்குக் கர்நாடக அரசு சுமாக் 1 லட்சம் ஏக்கர் நிலத்தை அளித்துள்ளது.

மேலும் இப்புதிய தொழிற்சாலையில் பணிகள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் ஆகிய இரண்டும் செய்யப்படும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

 

முதலீடு

முதலீடு

இத்தொழிற்சாலையில் சுமார் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது, இதன் மூலம் 600 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்புதிய தொழிற்சாலையின் மூலம் 4,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

 

முக்கியத் தலைவர்கள்

முக்கியத் தலைவர்கள்

இத்துவக்க விழாவில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Weapons manufacture is backbone of ‘Make in India' programme: Modi

"Self-reliance in the area of security needs is crucial. We have to make our own weapons and ‘Make in India' is a step towards achieving it," Prime Minister Narendra Modi said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X