ஃபோர்ப்ஸ்: 30 வயது இளம் சாதனையாளர்கள் பட்டியலில் '45 இந்தியர்கள்'..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: உலகின் முன்னணி வர்த்தகப் பத்திரிக்கை நிறுவனமாகத் திகழும் ஃபோர்ப்ஸ் 5வது முறையாக 30 வயதுக்குட்பட்ட இளம் சாதனையாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 20 துறைகளைச் சேர்ந்த 600 பேர் கொண்ட இப்பட்டியலில் எப்போது இல்லாத வகையில் இந்த வருடம் 45 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பட்டியலுக்காக உலகம் முழுவதும் சுமார் 15,000க்கும் அதிகமானோரை போர்பஸ் நிறுவனம் தேர்ந்தெடுத்தது. இந்நிலையில் பலகட்ட ஆலோசனை மற்றும் தேர்வுகளில் 600 கொண்ட இப்பட்டியலில் 45 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ரிதிஷ் அகர்வால்

ரிதிஷ் அகர்வால்

இந்தியாவில் இருந்து, 22 வயதான OYO ரூம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ரிதிஷ் அகர்வால் முதல் இடத்தைத் தட்டிச்சென்றுள்ளார். இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் 2,200 சிறிய ஹோட்டல்களை ஒருங்கிணைத்துள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

வழக்கம் போல் இந்த முறையும் 600 பேர் கொண்ட இப்பட்டியலில் அமெரிக்கர்கள் ஆதிக்கம் செலுத்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக அமெரிக்காவிலிருந்து அதிக அளவிலான இளம் தொழில்முனைவர்கள் உருவாகியுள்ளனர்.

20 துறைகள்

20 துறைகள்

கல்வி, நுகர்வோர் தொழில்நுட்பம், உற்பத்தி, தொழில்துறை, விளையாட்டு, கலை போன்ற 20 துறைகளைச் சேர்ந்தவர்களை ஃபோர்ப்ஸ் பட்டியலிட்டுள்ளது. சரி வாங்க இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற இந்தியர்கள் பார்த்து பெருமைப்படுவோம்.

இந்தியர்கள்..

இந்தியர்கள்..

மொபைல் செயலியான ஸ்பிரிங் (Sprig) நிறுவனர், 28 வயதான கங்கன் பியானி, நீரஜ் பியானி இடம் பிடித்துள்ளனர்.

கூகிள் அல்பபெட்

கூகிள் அல்பபெட்

மூன்ஷாட் பேக்ட்ரி எனப்படும் கூகிள் எக்ஸ் பிரிவில் பணியில் அமர்த்தப்பட்ட 25 வயதான கரிஷ்மா ஷா-வும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஆல்பபெட் நிறுவனத்தில் பணியில் உள்ள மிகக் குறைந்த வயதுடைய ஊழியர் என்றால் அது கரிஷ்மா தான்.

லில்லி சிங்

லில்லி சிங்

27 வயதான எழுத்தாளர் மற்றும் நகைச்சுவை நடிகையான லில்லி சிங் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவர் கனடாவை சேர்ந்த 27 வயது பெண்.

சிட்டி வங்கி

சிட்டி வங்கி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிட்டி வங்கியியல் குழும துணைத் தலைவர் நிலா தாஸ் (27) இந்தப் பட்டியலில் உள்ளார்.

வைகிங் குளோபல்

வைகிங் குளோபல்

வைகிங் குளோபல் இன்வெஸ்ட்டார்ஸ் நிறுவன ஆலோசகர் திவ்யா நித்திமி (29) உள்ளிட்ட இந்திய வம்சாவளியினர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

45 இந்தியர்கள்

45 இந்தியர்கள்

அதபோல் ஹெட்ஜ் ஃபண்ட் மில்லினியம் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் உயர் ஆலோசகர் விகாஸ் பட்டேல், கேக்ஸ்டான் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு ஆலோசகர் நீல் ராய் ஆகியோர் உட்பட இந்தியா மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 45 பேர் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

குறிக்கோள்

குறிக்கோள்

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 64 சதவீதம் பேர் இந்த ஏதேனும் ஒரு வகையில் தங்களின் முயற்சியின் மூலம் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளனர்.

என் இஸ்டம்...

என் இஸ்டம்...

இவர்களின் ஃபோர்ப்ஸ் நிறுவனம் எது வெற்றி என்ற கேள்விக்கு, என் விருப்பம் போல் செய்வது எனக் கூறியுள்ளனர்.

முக்கியக் கல்லூரிகள்

முக்கியக் கல்லூரிகள்

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலானோர் ஸ்டான்போர்டு, பென்சில்வேனியா பல்கலைக்கழகம், கார்லெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள்

மிடில் கிளாஸ்

மிடில் கிளாஸ்

மேலும் 600 பேர் கொண்ட இப்பட்டியலில் 64 சதவீதம் பேர் நடுத்தரக் குடும்பத்தில் இருந்தே வந்துள்ளனர்.

வருப்பமான வழிகாட்டி

வருப்பமான வழிகாட்டி

இவரது விருப்பமான வழிகாட்டியாக ஈலன் மஸ்க் மற்றும் ஷெரில் ஸ்சான்பெர்க் ஆகியோர் உள்ளனர்.

கேஜெட்

கேஜெட்

மேலும் இவர்களது விருப்பமான கேஜெட் ஆக ஐபோன் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X