'காக்னிசன்ட்' நிறுவனத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: 2015ஆம் ஆண்டு இந்திய ஐடி நிறுவனங்களுக்கு லாபகரமாக இல்லை என்றாலும், அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள காக்னிசன்ட் நிறுவனத்திற்கு மிகவும் லாபகரமான அமைந்துள்ளது.

146 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஐடி சந்தையைக் கட்டியாளும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களின் ஒட்டுமொத்த வர்த்தகத்தை விடவும் காக்னிசன்ட், அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று இந்திய ஐடி சந்தையைக் கலக்கியுள்ளது.

காக்னிசன்ட்

காக்னிசன்ட்

2014ஆம் ஆண்டில் இந்த அமெரிக்க நிறுவனம் 10.26 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் மதிப்புள்ள வர்த்தகத்தைப் பெற்றுள்ள நிலையில், 2015ஆம் ஆண்டில் கூடுதலாக 2.15 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைப் பெற்று அசத்தியுள்ளது.

12.41 பில்லியன் டாலர்

12.41 பில்லியன் டாலர்

2015ஆம் ஆண்டில் இந்நிறுவனம் மட்டும் சுமார் 12.41 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தைப் பெற்று , இந்திய ஐடி சந்தையைக் கட்டியாளும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ நிலை என்ன..?

டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ நிலை என்ன..?

2015ஆம் ஆண்டில் டிசிஎஸ் 1.18 பில்லியன் டாலரும், இன்போசிஸ் 570 மில்லியன் டாலரும், விப்ரோ 211.5 மில்லியன் டாலர் அளவிலான கூடுதல் வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

வித்தியாசம்

வித்தியாசம்

டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய மூன்று நிறுவனங்களின் கூடுதல் வருவாயைச் சேர்த்தால் மொத்தம் 1.96 பில்லியன் டாலர் தான். காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த ஒரு வருட வர்த்தகம் 2.15 பில்லியன் டாலராகும்.

ஊழியர்கள் எண்ணிக்கை

ஊழியர்கள் எண்ணிக்கை

காக்னிசன்ட் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கினாலும் இந்நிறுவனத்தின் 2.2 லட்சம் ஊழியர்கள் எண்ணிக்கையில் 1.5 லட்சம் ஊழியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டன் அண்ட் பிராட்ஸ்டிரீட் கார்ப்

டன் அண்ட் பிராட்ஸ்டிரீட் கார்ப்

1994ஆம் ஆண்டு டன் அண்ட் பிராட்ஸ்டிரீட் கார்ப் குழுமத்தின் ஐடி கிளை நிறுவனமாகக் காக்னிசன்ட் உருவாக்கப்பட்டது. இதன் பின் 1996ஆம் ஆண்டுத் தனி நிறுவனமாக இயங்கத் துவங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் டிசிஎஸ் 1968ஆம் ஆண்டு டிசிஎஸ் துவங்கப்பட்டது, 1981ஆம் ஆண்டில் இன்போசிஸ் நிறுவனம் அதன் நிறுவனர்களால் அமைக்கப்பட்டது. இதே வருடத்தில் தான் விப்ரோ நிறுவனம் தனது கம்பியூட்டர் வர்த்தகத்தைத் துவங்கியது.

 

இந்திய சந்தை

இந்திய சந்தை

2015ஆம் ஆண்டில் இந்தியாவில் செயல்படும் ஐடி நிறுவனங்களைப் பார்க்கும் போது, டிசிஎஸ் (8%), இன்போசிஸ் (6.6%), விப்ரோ (3%) காச்னிசென்ட் நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடர் வளர்ச்சியின் மூலம் 2015ஆம் ஆண்டில் 21 சதவீத வருவாய் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

வங்கி மற்றும் நிதிச் சேவை

வங்கி மற்றும் நிதிச் சேவை

மேலும் பிற இந்திய நிறுவனங்களைக் காட்டிலும் காக்னிசன்ட் நிறுவனம் வங்கி மக்கும் நிதிச் சேவைத்துறையில் மிகப்பெரிய வருமானத்தைப் பெறும் வர்த்தகம் செய்யத் திறன் உண்டு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cognizant Technology Solutions Corp. did more business, or added more incremental revenue, in calendar year 2015 than Tata Consultancy Services Ltd (TCS), Infosys Ltd and Wipro Ltd, put together—a fact that of India’s $146 billion IT outsourcing sector.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X