ஜனவரிக்குள் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்யப்படும்.. டிராய் அறிவிப்பு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான ஏல விலையை நிர்ணயம் செய்யும் பணியில் இறங்கியுள்ளது. இதற்கான முடிவை ஜனவரி மாத இறுதிக்குள்ள எட்டுக்க உள்ளதாக டிராய் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

தற்போது அறிவிக்க விலை நிலை யாவும் Net neutrality பிரச்சனையைத் தீர்க்கும் வண்ணம் டிராய் அமைப்பு விலையை நிர்ணயம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

ஜனவரிக்குள் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்யப்படும்.. டிராய் அறிவிப்பு..!

 

தொலைத் தொடர்பு சேவையை அளிக்கப் பயன்படும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளைத் தொகுதி (Band) வாரியாகவும், பிராந்திய வாரியாகவும் பிரித்து விலையை நிர்ணயம் செய்து மத்திய அரசின் ஆலோசனைக்கு அனுப்பியுள்ளது டிராய்.

இந்நிலையில் ஜனவரி மாத இறுதிக்குள் டிராய் மற்றும் மத்திய அரசு இணைந்து முழுமையான விலை பட்டியலை தயாரிக்கப்பட உள்ளது தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா தெரிவித்தார்.

ஜனவரிக்குள் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்யப்படும்.. டிராய் அறிவிப்பு..!

நடப்பு நிதி ஆண்டில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனை, சேவைதக்கான உரிமம் வழங்குதல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை மூலம் மத்திய அரசு 42,865 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறையைத் தீர்க்கும் வண்ணம் மார்ச் மாதத்துக்குள் இந்த ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TRAI to finalise take on spectrum price by January-end

Telecom regulator TRAI will firm up its view on spectrum price for the next round of auction and differential pricing of data, which is central to the Net neutrality issue, by the end of this month.
Story first published: Thursday, January 21, 2016, 15:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?