பிராவிடண்ட் ஃபண்ட் மீதான வட்டி விகிதத்தை உயர்த்த மத்திய அரசுக்குப் பரிந்துரை: ஈபிஎஃப்ஓ

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஊழியர் சேமலாப நிதி அமைப்பு, பிராவிடண்ட் நிதி திட்டத்தின் வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை 8.75 சதவீதத்தில் இருந்து 8.95 சதவீதமாக உயர்த்தப் பரிந்துரை செய்துள்ளது.

இப்பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதன் மூலம் ஈபிஎஃப்ஓ அமைப்பில் இருக்கும் 5 கோடி வாடிக்கையாளர்கள் பலன் அடைவார்கள்.

2010-11க்குப் பின்..

2010-11க்குப் பின்..

ஈபிஎஃப்ஓ அமைப்பின் 8.95 சதவீத வட்டி உயர்வு பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் 2010-11ஆம் ஆண்டுக்குப் பின் பிராவிடண்ட் ஃபண்ட் திட்டத்திற்கு அதிக வட்டி விகிதம் அளிக்கப்படுவது இதுவே.

2010-11ஆம் ஆண்டில் மத்திய அரசு பிராவிடண்ட் நிதி திட்டத்திற்கு 9.5 சதவீத வட்டி விகிதத்தை அளித்தது குறிப்பிடத்தக்கது.

 

8.95 சதவீத வட்டி

8.95 சதவீத வட்டி

நடைமுறையில் பிராவிடண்ட் கணக்குகளுக்கு 8.95 சதவீத வட்டி அளிக்கப்பட்டால் உயர் மட்டத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு 12 சதவீதம் வரையிலான வட்டி வருவானம் கிடைக்கும்.

நிதி திட்டத்தில் இருக்கும் பணத்தைத் திரும்பப்பெறும் போது வட்டி வருமானத்திற்கு எவ்விதமான வட்டியும் விதிக்கப்படுவதில்லை என்பது கூடுதல் நன்மை.

 

மத்திய அரசின் திட்டம்

மத்திய அரசின் திட்டம்

ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் இணைத்து வங்கி வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிடும் இவ்வேளையில், பிராவிடண்ட் வைப்புகளுக்கு வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம் வங்கி வைப்பு மற்றும் சிறு சேமிப்புத் திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டு பிரிந்து (உண்மையில் குறைந்து) ஈபிஎஃப் திட்டத்தில் முதலீடு கவர முடியும் என மத்திய அரசு திட்டமிடுகிறது.

நிதியமைச்சகம்

நிதியமைச்சகம்

நிதியமைச்சகம் அடுத்தச் சில வாரங்களில் பிபிஎஃப் (public provident fund) மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரங்களுக்கான வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்புகள் அடுத்தச் சில வாரங்களுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வட்டி உயர்வு

வட்டி உயர்வு

இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசின் பிராவிடண்ட் ஃபண்ட் நிதி திட்டத்திற்கான வட்டி விகித முடிவுகள் ஊழியர்களுக்குச் சாதகமாக உள்ளதால் நடுத்தர ஊழியர்களுக்குப் பிராவிடண்ட் ஃபண்ட் மீதான முதலீடு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Your PF may earn 8.95% interest this fiscal: EFPO talks with Govt

The Employees Provident Fund Organisation's (EPFO) finance panel has recommended raising the interest rate on statutory savings of over 5 crore subscribers from 8.75% to 8.95% during the current fiscal.
Story first published: Friday, January 22, 2016, 11:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X