நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் முட்டை விலை 9 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், 406 காசுகளாக உள்ள முட்டை விலையில் 9 காசு உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஒரு முட்டையின் விலை 415 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. வட மாநிலங்களில் கடும் குளிர் காரணமாக முட்டை தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால், அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது என பண்ணையாளர்கள் தெரிவித்தனர். மற்ற மண்டலங்ளில் நேற்று நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை விலை விபரம் வருமாறு: ஹைதராபாத் 400, விஜயவாடா 388, பர்வாலா 428, மும்பை 435, மைசூர் 412, பெங்களூரு 412, கொல்கத்தா 422, டெல்லி 440 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை 9 காசு உயர்த்தி 4 ரூபாய் 15 காசாக நிர்ணயிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் முட்டையின் விலை 13 காசுகள் அதிகரித்துள்ளது. வடமாநிலங்களில் கடுங்குளிர் நிலவுவதால் அங்கு தேவை அதிகரித்துள்ளதாலும் சபரிமலை சீசன் முடிந்துவிட்டதாலும் தமிழகத்தில் தேவை அதிகரித்துள்ளதும் முட்டை விலை உயரக் காரணங்கள் என பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.