ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றிக்கொள்வது எப்படி?

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மொபைல் போன்களை ஒரு சேவை நிறுவனத்திடமிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்வது போல் நாம் இப்பொழுது இந்தியாவில் நம்முடைய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களையும் மாற்றிக்கொள்ளலாம்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவையில் திருப்தி அடையவில்லை எனில், நீங்கள் ஒரு முற்றிலும் புதிய காப்பீட்டு நிறுவனத்திற்கு உங்களுடைய ஹெல்த் காப்பீடு திட்டத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு உங்களுடைய க்ளெய்ம் தமதமானலோ, அந்த நிறுவனத்தின் சேவையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றாலோ, நீங்கள் இப்போது உங்களுடைய காப்பீட்டு நிறுவனத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

இப்படிச் சேவை நிறுவனங்களை மாற்றிக்கொள்ளும் போது நாம் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

உங்களுடைய காப்பீட்டுத் தொகையில் மாற்றம் வருமா?

உங்களுடைய காப்பீட்டுத் தொகையில் மாற்றம் வருமா?

இதனுடைய பதில் வராது. உங்களுடைய புதிய காப்பீட்டு நிறுவனம் முந்தைய நிறுவனம் வழங்கிய காப்பீட்டு தொகையைக் குறைக்க முடியாது. எனவே இப்போது உங்களுக்குப் போதுமான ஹெல்த் பாதுகாப்பு கிடைக்கும். இது காப்பீடு நிறுவனத்தை மாற்ற நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும்.

இது ஒரு சில குறிப்பிட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்துமா ?

இது ஒரு சில குறிப்பிட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்துமா ?

இல்லை, நீங்கள் உங்களுடைய தனி நபர் பாலிசி மற்றும் உங்களுடைய குடும்ப ஹெல்த் பாலிசி போன்றவற்றையும் மாற்றிக் கொள்ள முடியும்.

உங்களுடைய முன் இருக்கும் நோய்களுக்கான காத்திருக்கும் காலம் மீண்டும் ஆரம்பிக்குமா?

உங்களுடைய முன் இருக்கும் நோய்களுக்கான காத்திருக்கும் காலம் மீண்டும் ஆரம்பிக்குமா?

சத்தியமா இல்லை. பலரின் மனத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் கேள்வி இது. எடுத்துக்காட்டாக, உங்கள் ஹெல்த் காப்பீடு திட்டத்தின் படி குடலிறக்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது என வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது, நீங்கள் ஏற்கனவே உங்களுடைய பழைய காப்பிடு திட்டத்தில் 1 ஆண்டுக் காத்திருக்கும் காலத்தை நிறைவு செய்து விட்டீர்கள் என்றால், நீங்கள் உங்களுடைய புதிய பாலிசியின் கீழ் மற்றொரு ஆண்டு மட்டுமே காத்திருக்க வேண்டும்.

காப்பீடு பரிமாற்றத்தை முடிக்கக் கால அவகாசம் இருக்கிறதா?

காப்பீடு பரிமாற்றத்தை முடிக்கக் கால அவகாசம் இருக்கிறதா?

ஆம் இருக்கின்றது. காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்தால் வகுக்கப்பட்ட வழிமுறைகள் உள்ளன. இதை அனைத்துக் காப்பீடு நிறுவனங்களும் பின்பற்றப்பட வேண்டும்.

உங்களுடைய அனைத்துச் சலுகைகளும் மாற்றப்படுமா?

உங்களுடைய அனைத்துச் சலுகைகளும் மாற்றப்படுமா?

ஆம் அனைத்தும். உங்களுக்கு முந்தைய பாலிசியில் ஏதேனும் சலுகைகள் இருந்தால், அவை அனைத்தும் மாற்றப்படும். உதாரணமாக, சில ஹெல்த் காப்பீட்டு நிறுவனங்கள், முந்தைய ஆண்டில் நீங்கள் ஏதேனும் க்ளெய்ம் செய்யவில்லை எனில் உங்களுக்கு 5 சதவீத போனஸ் அளிக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில் அந்தப் போனஸும் உங்களுடைய புதிய புதிய காப்பீடு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுவிடும்.

நினைவில் கொள்ள வேண்டும்

நினைவில் கொள்ள வேண்டும்

உங்களுடைய ஹெல்த் பாலிசியை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றும் முன் நினைவில் கொள்ள வேண்டியவை.

நீங்கள் உங்களுடைய ஹெல்த் பாலிசியை மாற்றும் போது பின்வருவனவற்றை நினைவில் கொள்ள வேண்டும்:

 

காப்பீட்டை மாற்றும் தருணம்..

காப்பீட்டை மாற்றும் தருணம்..

புதுப்பிக்கும் போது மட்டுமே காப்பீடு நிறுவனத்தை மாற்ற வேண்டும்

நீங்கள் உங்களுடைய ஹெல்த் பாலிசியை அதன் மத்தியில் மாற்றிக் கொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக, உங்கள் இன்சூரன்ஸ் பாலிஸி ஜூலை 1, 2016 அன்று காலாவதியாகின்றது என்றால், நீங்கள் அதைப் புதுப்பிக்கும் நேரத்தில் மட்டுமே காப்பீடு நிறுவனத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

 

45 நாட்கள்

45 நாட்கள்

உங்களுடைய பாலிசி காலாவதியாவதற்குக் குறைந்தது 45 நாட்கள் முன்பு பாலிசி மாற்றும் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். நீங்கள் செய்யவேண்டியது:

i) நீங்கள் உங்களுடைய பாலிசியை மாற்ற விரும்புகிறேன் என்று சொல்லி, உங்களுடைய பழைய நிறுவனத்திற்கு ஒரு கடிதத்தைக் கொடுக்க வேண்டும் .

ii) நீங்கள் எந்த நிறுவனத்திற்கு மாற விரும்புகின்றீர்களோ அந்த நிறுவனத்தைக் குறிப்பிட்டு விண்ணப்பத்தை அளித்திடுங்கள்.

 

இறுதியாக

இறுதியாக

காப்பிடு நிறுவனத்தை மாற்றச் சிறிது நேரம் ஆனாலும், இந்தியாவில் தற்பொழுது ஹெல்த் காப்பிடு நிறுவனத்தை மாற்றிக்கொள்வது மிகவும் எளிதாக உள்ளது. நீங்கள் உங்களுடைய பழைய காப்பிடு நிறுவனத்தின் செயல்பாடுகளில் திருப்தி அடையவில்லை எனில் உங்களுடைய காப்பிடு நிறுவனத்தை மாற்ற இதுவே சரியான தருணம்.

இணையத் தளம்

இணையத் தளம்

ஐஆர்டிஏ இணையத்தளத்தில் பாலிசி வழங்கும் நிறுவனம் மற்றும் அதனுடைய பாலிசி பற்றிய விபரங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. அது மிகவும் வெளிப்படையாக அனைத்து விபரங்களையும் அளிக்கின்றது. எனவே அது நுகர்வோருக்கும், நிறுவனத்திற்கும் நன்மைகளை வழங்குகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How To Port Or Transfer Health Insurance Policy In India?

Like mobile portability, we also have health insurance portability in India. What this means is that if you are unhappy with a particular health insurance company, you can now move to an altogether new insurance company.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X