இருசக்கர வாகன விற்பனையில் இறங்கியது 'பிளிப்கார்ட்'.. டிவிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் நிறுவனம், ஜட்டி முதல் ஹேர்ஸ்பிரே வரை விற்பனை செய்தது போதாது என்று தற்போது இரு சக்கர வாகனங்களைத் தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள தனது வாடிக்கையாள்களுக்கு இனி பிளிப்கார்ட் இரு சக்கர வாகனங்களை விற்கும் சேவையை வருகிற மே மாதம் முதல் துவங்குகிறது.

டிவிஎஸ் மோட்டார்ஸ்

டிவிஎஸ் மோட்டார்ஸ்

பிளிப்கார்ட் நிறுவனம் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சோதனை திட்டமாகப் பெங்களூரு பகுதியில் இந்நிறுவனத்தின் அனைத்து வாகனங்களையும் மார்ச் மாதம் முழுவதும் விற்பனை செய்தது.

இச்சோதனை திட்டம் வெற்றிபெற்றுள்ள நிலையில், இத்திட்டத்தை மே மாதத்தில் இந்தியா முழுவதும் விரிவாக்கச் செய்யப் பிளிப்கார்ட் முடிவு செய்துள்ளது.

 

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

இந்நிலையில் அடுத்த 2-3 மாதங்களில் பிளிப்கார்ட் இணையத் தளத்தில் நாட்டில் உள்ள அனைத்து இருசக்கர வாகன பிராண்டுகளையும் விற்பனை பட்டியலில் சேர்க்க ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள்

ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள்

கடந்த ஏப்ரல் 2015ஆம் ஆண்டுப் பிளிப்கார்ட் இணையதளத்தில் ஆட்டோமோசடிவ் பிரிவு இணைக்கப்பட்டது, இப்பிரிவில் பல வகையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

600 சதவீத உயர்வு
 

600 சதவீத உயர்வு

இப்பிரிவு சார்ந்த விற்பனை மட்டும் சுமார் 600 சதவீத உயர்வடைந்துள்ளது எனப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பிரிவின் துணைத் தலைவர் ஆதர்ஷ் மேனன் தெரிவித்தார்.

இரு சக்கர வாகன விற்பனை

இரு சக்கர வாகன விற்பனை

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து வாகனங்களின் விற்பனையில் சோதனை திட்டம் நிறைவேறிய நிலையில், அடுத்த மாதம் முதல் இந்தியாவில் இதன் விற்பனை துவங்கும், அதுமட்டும் அல்லாமல் அடுத்த 3 மாத காலகட்டத்தில் நாட்டின் முன்னணி பிராண்ட் வாகனங்கள் அனைத்தும் பட்டியலிடப்படும்.

KUV100 கார் விற்பனை

KUV100 கார் விற்பனை

கடந்த ஜனவரி மாதம் பிளிப்கார்ட் மூலம் மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான் KUV100 வாகனத்தை அன்லைன் விற்பனைக்காக அறிமுகம் செய்யது.

மகிழ்ச்சியில் மஹிந்திரா..

மகிழ்ச்சியில் மஹிந்திரா..

இதன் விற்பனை எண்ணிக்கை மஹிந்திரா நிறுவனத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதால், இனி மஹிந்திரா நிறுவனத்தில் அறிமுகப்படுத்தப்படும் அனைத்துப் பயணிகள் வாகனங்களும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் என மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

எண்ணிக்கை

எண்ணிக்கை

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் எத்தனை KUV100 கார்களைப் பிளிப்கார்ட் விற்பனை செய்தது என்று இரு நிறுவனங்களும் தகவல்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

இலக்கு..

இலக்கு..

இந்நிலையில் அடுத்த 8 மாதத்தில் இந்தியா முழுவதும் சுமார் 3,30,000 வாகனங்களை விற்பனை செய்ய இலக்காகக் கொண்டுள்ளது பிளிப்கார்ட்.

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

இந்நிலையில் ஸ்னாப்டீல் தனது ஆன்லைன் விற்பனை தளத்தில் ஹீரோமோட்டோ கார்ப், ஹீரோ எலக்ட்ரிக், சுசூகி மோட்டார்சைக்கிள்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் போலாரீஸ் ஆகிய நிறுவனங்களின் வாகனங்களைக் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்து விற்பனை செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Online retailer Flipkart, which forayed into the automotive space a year back, will commence nationwide sales of two-wheelers starting next month.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X