ஸ்மார்ட்போனை வங்கியாக மாற்றினார் ரகுராம் ராஜன்.. பணம் பரிமாற்றம் செய்ய அரசின் புதிய செயலி..!

By Justin Sahayaraj
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பொதுவாக ஸ்மாா்ட்போன்கள் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும், தற்படங்கள் (செல்பி) எடுப்பதற்கும் மற்றும் காணொளிகள் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

ஆனால் இப்போது அதே ஸ்மாா்ட்போன்கள் நமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் அத்தியாவசியமான தேவைகளை நிறைவு செய்யக்கூடிய வகையில் மாறி வருகின்றது. குறிப்பாக நமது பணப் பாிவா்த்தனைகளை மிக எளிதாகச் செய்து முடிக்கும் கருவிகளாக இந்த ஸ்மாா்ட்போன்கள் மாறி வருகின்றன.

ரிச்ர்வ் வங்கி

ரிச்ர்வ் வங்கி

இந்திய ரிசா்வ் வங்கியின் கீழ் இயங்கி வரும் இந்தியாவின் மிகப் பெரிய 10 வங்கிகள் சேர்ந்து யூனிபைட் பேமென்ட்ஸ் இன்டா்பேஸ் (யுபிஐ) என்ற ஒரு மென் செயலியை (சாப்ட்வோ் அப்ளிகேசன்) உருவாக்கியிருக்கின்றன.

இந்தச் செயலியை நமது ஸ்மாா்ட்போன்களில் பதிவிறக்கம் செய்துவிட்டால் போதும். இந்தச் செயலி மூலமாக மிக எளிதாக நமது பல்வகையான கட்டணங்களைச் செலுத்த முடியும்.

 

1 லட்சம் ரூபாய் வரை...

1 லட்சம் ரூபாய் வரை...

இதன் முக்கியச் சிறப்பு என்னவென்றால் ரூ. 50க்கும் குறைவானது முதல் ரூ. 1 லட்சம் வரையிலான கட்டணங்களை மிக எளிதாக மற்றும் விரைவாக இந்தச் செயலி மூலம் கட்ட முடியும். இதன் மூலம் நமது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த முடியும்.

பணப் பரிமாற்றம்
 

பணப் பரிமாற்றம்

இந்தப் புதிய செயலியின் இன்னுமொரு முக்கிய அம்சம் என்னெவென்றால் மூன்றாவது நபருக்கும் அதாவது புதியவருக்கும் பணத்தைக் பரிவர்த்தனை செய்ய முடியும்.

அதாவது ஒருவருக்கு நமது இணைய வங்கி கணக்கு மூலம் பணம் பரிமாற்றம் செய்ய வேண்டுமென்றால், முதலில் அவரை நமது இணைய வங்கி கணக்கில் பயனாளராக இணைக்க வேண்டும். பின் அவருடைய வங்கி கணக்கு எண், வங்கியின் கிளை மற்றும் ஐஎப்எஸ்சி குறியீடு ஆகியவற்றையும் இணைக்க வேண்டும். அதன் பின்புதான் நமது இணைய வங்கி கணக்கு மூலமாக அவருடைய வங்கி கணக்கிற்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்ய முடியும்.

 

UPI செயலி

UPI செயலி

ஆனால் இந்த யுபிஐ செயலியில் அவ்வளவு சிரமம் இருக்காது. யாருக்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்ய வேண்டுமோ அவருக்கு என்று ஒரு தனி அடையாளக்குறி (ஐடி) இருந்தால் போதும். பணத்தை எளிதாக அனுப்ப முடியும்.

எளிமையான வழிமுறை

எளிமையான வழிமுறை

இப்போது செயலியை இயக்கவும், எவ்வளவு பணத்தைப் பரிமாற்றம் செய்ய வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின் பயனாளரின் தனி அடையாளக் குறியை இணைத்துக் கொள்ள வேண்டும்.

அதனைத் தொடர்ந்து அனுப்புப் பட்டனை தட்டினால் போதும். இப்போது பணப் பரிமாற்றத்தை உறுதி செய்யச் செயலி மொபைல் பின்னைக் கேட்கும். அதை அளித்தவுடன் பணம் பயனாளரின் வங்கிக் கணக்கிற்குச் சென்றுவிடும்.

 

யாருக்கு வேண்டுமானாலும்...

யாருக்கு வேண்டுமானாலும்...

இந்தச் செயலி வழக்கமான கட்டணங்களைச் செலுத்துவதற்கு மட்டும் பயன்படுவதில்லை. மாறாக நண்பா்களுக்கிடையிலும் மிக எளிதாக இந்தச் செயலி மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம்.

டீ கடை முதல் கார்ப்பரேட் லோன் வரை..

டீ கடை முதல் கார்ப்பரேட் லோன் வரை..

உதாரணமாக நீங்கள் உங்கள் நண்பர்களோடு சேர்ந்து உணவகத்தில் உணவருந்திவிட்டு அதன் கட்டணத்தை நீங்கள் அனைவரும் சேர்ந்து செலுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

உங்கள் அனைவரின் சார்பாக ஒரு நண்பர் பணத்தைச் செலுத்திவிடுகிறாா். அவருக்கு நீங்கள் பணமாகச் செலுத்த தேவையில்லை. இந்தப் புதிய செயலி மூலம் அவருடைய வங்கிக் கணக்கிற்குப் பணத்தைச் செலுத்த முடியும்.

 

ஈ-ஷாப்பிங்

ஈ-ஷாப்பிங்

மேலும் இந்தச் செயலி மூலம் பணம் அனுப்புவது மிகவும் எளிது. இணையம் மூலமாகப் பொருள் வாங்க நீங்கள் விண்ணப்பித்திருந்தால், பொருளைப் பெற்ற பின்பு நீங்கள் இந்தச் செயலி மூலம் அந்த நிறுவனத்திற்குப் பணத்தை அனுப்ப முடியும்.

ஆனால் அதற்கு முன்பாக அந்த நிறுவனத்தின் தனி அடையாளக் குறியை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.

 

இணைய ஷாப்பிங்

இணைய ஷாப்பிங்

இணையம் மூலம் ஷாப்பிங் செய்யப்பட்ட பொருளை பெறுபவர், பொருளைக் கொண்டு வருபவரின் யுபிஐ செயிலியில் இருக்கும் க்யுஆா் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்ய முடியும். அல்லது பொருளைக் கொண்டு வருபவரின் தனி அடையாளக் குறிக்கே பணத்தைச் செலுத்த முடியும்.

யுபிஐ செயலியை எவ்வாறு பயன்படுத்துவது?

யுபிஐ செயலியை எவ்வாறு பயன்படுத்துவது?

1. ஒரு வங்கிக் கணக்கு மற்றும் ஒரு ஸ்மாா்ட்போன் வைத்திருக்க வேண்டும்.
2. பின்பு ப்ளேஸ்டோரிலிருந்து உங்கள் வங்கியின் யுபிஐ செயலியை ஸ்மாா்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
3. இப்போது யுபிஐ செயலியில் உங்கள் வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும்.
4. பின் தனி அடையாளக் குறியை (யுனிக் ஐடி) உருவாக்க வேண்டும்.
5. இப்போது மொபைல் பின்னை உருவாக்க வேண்டும்.
6. இறுதியாக உங்கள் ஆதாா் எண்ணையும் இதில் இணைக்க வேண்டும்.

10 வங்கிகள்

10 வங்கிகள்

தற்போது 10 வங்கிகள் மட்டுமே இந்தப் புதிய செயலி சேவையில் இணைந்திருக்கின்றன. மற்ற வங்கிகளும் இந்தச் சேவையில் விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்பிஐ, கனரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆஃ பரோடா, எச்எஸ்பிசி வங்கி மற்றும் சிட்டி வங்கி. தற்போது யெஸ் வங்கியும் இதில் இணைந்துள்ளதாக இவ்வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Raghuram Rajan has just turned your smartphone into a bank: UPI APP

Smartphones are not just useful for social media, videos and taking selfies. They will now become an important part of your daily life by doubling up as a portal for making payments, sending and receiving money etc.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X