பிஎப் கணக்கு மீதான புதிய கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 1 வரை ஒத்திவைப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: மத்திய அரசு பிஎப் கணக்கில் உள்ள பணத்தைத் திரும்பப்பெற விதித்த புதிய விதிமுறைகளை எதிர்த்து நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இன்று பெங்களுரின் முக்கியப் பகுதியான சில்க் போர்டில், கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. பேருந்துகள் தீக்கிரையாக்கின. தமிழகம் செல்லும் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

பிஎப் கணக்காளர்களின் போராட்டத்தையும், கலவரத்தையும் பெங்களூரு போரலீசார் சில மணி நேரப் போராட்டத்திற்குப் பின் முழுமையாகக் களைத்தனர்.

EPFO அமைப்பு

EPFO அமைப்பு

இந்நிலையில் மத்திய அரசின் ஓய்வூதிய அமைப்பான EPFO அமைப்பு பிஎப் கணக்காளர்களின் கடுமையான எதிர்ப்புகளைக் கண்டு பிஎப் கணக்கின் மீது விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளின் அமலாக்கத்தை ஆகஸ்ட் 1 வரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

3 மாதம்

3 மாதம்

ஆகஸ்ட் 1 வரை பழைய விதிமுறைகளின் படியே ஊழியர்கள் தங்கள் பிஎப் கணக்கில் உள்ள பணத்தை முழுமையாக எடுத்தக்கொள்ளலாம் எனவும் EPFO அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய விதிமுறைகள்

புதிய விதிமுறைகள்

மத்திய அரசு அறிவித்த புதிய விதிமுறையின் படி, பிஎப் கணக்கில் வைப்பு வைக்கப்பட்டுள்ள தொகையைக் கணக்காளர்கள் முழுமையாகத் திரும்பப்பெற முடியாது.

ஏப்ரல் 30

ஏப்ரல் 30

ஈபிஎப்ஓ அமைப்பின் முந்தைய அறிவிப்பின் படி, ஏப்ரல் 30ஆம் தேதிக்குப் பின் பிஎப் கணக்காளர்கள் ஒரு தனது பிஎப் கணக்கில் உள்ள தொகையை முழுமையாகத் திரும்பப்பெற நினைத்தால் மத்திய அரசு அனுமதிக்காது. ஒரு பகுதி தொகையை மட்டுமே பெறும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது.

அதற்கும் பல விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் உள்ளது.

 

2 மாதம் காலம்

2 மாதம் காலம்

ஏப்ரல் 30ஆம் தேதிக்குப் பின் உங்கள் பிஎப் கணக்கில் உள்ள பணத்தைப் பெற, நீங்கள் குறைந்தது 2 மாதம் அல்லது அதற்கு மேல் வேலை இல்லாமல் இருந்திருக்க வேண்டும், அப்படியானால் உங்கள் கணக்கில் நிறுவனம் வைப்பு வைக்கப்பட்ட தொகை மற்றும் அதற்கான வட்டி தொகையை மட்டுமே மத்திய அரசு அளிக்கும்.

ஊழியர் மூலம் பிஎப் கணக்கில் வைப்பு வைக்கப்பட்ட தொகை மற்றும் அதற்கான வட்டியை 58 வயதுக்குப் பின்னரே அரசு உங்களுக்கு அளிக்கும்.

 

ஒத்திவைப்பு

ஒத்திவைப்பு

தற்போது இந்தப் புதிய விதிமுறை அமலாக்கத்தை ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் தங்களது பிஎப் கணக்கில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால் அடுத்த 3 மாதத்திற்குள் எடுத்துக்கொள்ளவும். இல்லையெனில் 58 வயது வரை காத்திருக்கவும்.

ஆகஸ்ட் 1

ஆகஸ்ட் 1

<strong><em>ஆகஸ்ட் 1 தான் கடைசி.. இல்லையென்றால் 58 வயது வரை காத்திருக்க வேண்டும்: பிஎப் பணம்</em></strong>ஆகஸ்ட் 1 தான் கடைசி.. இல்லையென்றால் 58 வயது வரை காத்திருக்க வேண்டும்: பிஎப் பணம்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Happy News: Restrictions on EPF accounts come into effect on August 1

The central retirement fund body, Employees' Provident Fund Organisation (EPFO), has deferred the implementation of the new norms till August 1, giving eligible members more time to withdraw 100 per cent of their provident fund (PF) under the old norms.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X