'ஒற்றைக் கண் ராஜா' ஆன இந்திய பொருளாதாரம்.. ரகுராம் ராஜனின் புதிய பஞ்ச்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த சில மாதங்களாகவே ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அளிக்கும் பேட்டிகளில் இந்திய பொருளாதாரம், நாட்டின் வளர்ச்சி மற்றும் சந்தை முதலீட்டுக் குறித்த கேள்விகளுக்குச் சர்ச்சை கிளப்பும் வகையில் பதில் அளித்து வருகிறார்.

 

இதனால் நாட்டின் அரசியல் தலைவர்கள் உட்படப் பல தரப்பினர் நாட்டின் மத்திய வங்கி தலைவர் இந்திய பொருளாதாரத்தைப் பற்றி இப்படிப் பேசலாமா எனப் பொங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ரகுராம் ராஜன் தற்போது இந்திய பொருளாதாரத்தை ஒற்றைக் கண் ராஜா என விமர்சித்து உள்ளார்.

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

ரிசர்வ் வங்கி ரகுராம் ராஜன் ஒற்றைக் கண் ராஜா கருத்துக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பூசி மெழுகி பதில் அளித்தார். ஆனால் ராஜன் சொன்னது விமர்சிக்கத்தக்கது என எவ்விதமான கருத்தும் கூறவில்லை.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

ஆனால் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ராஜன் இனிவரும் பேட்டிகளில் தகுந்த சொற்களைக் கொண்டு பேச வேண்டும் என நேரடியாகத் தாக்கியுள்ளார்.

இந்திய பொருளாதாரம்
 

இந்திய பொருளாதாரம்

உலகப் பொருளாதார மத்தியில் இந்திய பொருளாதாரம் மிகவும் நம்பகதன்மை உடையதாக உள்ளது, இது எப்படி, இதன் ரகசியம் என்ன என்று பிற நாட்டு மத்திய வங்கி அதிகாரிகளும், நிதியமைச்சர்களும் கேட்கும்போது உங்களது பதில் என்னவாக இருக்கும்.?

இது தான் மார்கெட்வாட்ச் நிறுவனம் ஆர்பிஐ தலைவர் ரகுராம் ராஜனிடம் கேட்ட கேள்வி. இதற்கு அவர் சொன்ன அதிரி புதிரி பதிலை நீங்களே பாருங்கள்.

 

ஒற்றைக் கண் ராஜா

ஒற்றைக் கண் ராஜா

இன்றைய நிலையில் இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருந்தாலும், நாங்கள் நினைத்தவாறு இல்லை. நாங்கள் நிம்மதி பெருமூச்சு விட இன்னும் சிறப்பான இடத்தை அடைய வேண்டும். 'குருடர்கள் நாட்டில் ஒற்றைக் கண் உடையவன் தான் ராஜா' என்ற பழமொழி எங்கள் நாட்டில் உள்ளது அதுபோலத் தான் உள்ளது இன்றைய பொருளாதாரம்.

சர்வதேச நாடுகளின் பொருளாதார நிலையை ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் ஒரு படி மேல் என்பதையே ரகுராம் ராஜன் இப்படிக் கூறியுள்ளார்.

 

வளர்ச்சியும்.. முதலீடும்..

வளர்ச்சியும்.. முதலீடும்..

மேலும் அவர் குறைந்த கால வளர்ச்சி திட்டங்களில் நாட்டின் வளர்ச்சி சூழ்நிலை சிறப்பானதாக மாறி வருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் வாய்ப்புகள் இந்திய சந்தையை நாடி வருகிறது.

நாட்டின் முதலீட்டு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் நாட்டின் பொருளாதாரம் அதிகளவில் நிலைபெற்றுள்ளது.

 

வர்த்தகப் பற்றாக்குறை

வர்த்தகப் பற்றாக்குறை

இந்நிலையில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு எப்போதும் இல்லாத அளவில் தற்போது 1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அரசின் நிலையான வர்த்தகத் திட்டங்கள் மற்றும் ஸ்திரமான முடிவுகள் தான்.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

நாட்டின் பணவீக்க சரிவிற்கு ஏற்றவாறு வட்டி விகிதங்களும் அதிகளவில் சரிந்துள்ளது. அதேபோல் பணவீக்கம் - இலக்கு என்னும் புதிய வடிவு முறையை இந்திய சந்தையில் அமைத்துள்ளோம். இதனால் நாட்டின் வளர்ச்சியில் சில முக்கிய முன்னேற்றங்கள் நடைபெற்று வருகிறது.

மாற்றம்...

மாற்றம்...

ஆனாலும் இந்திய சந்தையில் இன்னமும் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. அதில் முக்கியமாக வங்கி மற்றும் பொருளாதார வளர்ச்சி சந்தையில் முக்கியக் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றது. அரசு புதிய தீவால் குறியீடுகளை வகுத்து வருகிறது, அதுமட்டும் அல்லாமல் GST-யை கூடிய விரைவில் அமலாக்கம் செய்யப்பட உள்ளது.

புதிய பரிமாற்ற முறை

புதிய பரிமாற்ற முறை

இந்திய ரிசா்வ் வங்கியின் கீழ் இயங்கி வரும் இந்தியாவின் மிகப் பெரிய 10 வங்கிகள் சேர்ந்து யூனிபைட் பேமென்ட்ஸ் இன்டா்பேஸ் (யுபிஐ) என்ற ஒரு மென் செயலியை (சாப்ட்வோ் அப்ளிகேசன்) உருவாக்கியிருக்கின்றன.

இந்தச் செயலியை நமது ஸ்மாா்ட்போன்களில் பதிவிறக்கம் செய்துவிட்டால் போதும். இந்தச் செயலி மூலமாக மிக எளிதாக நமது பல்வகையான கட்டணங்களைச் செலுத்த முடியும்.

இதை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.இதை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.

இந்தியா-சீனா

இந்தியா-சீனா

மேலும் அவர் இந்தியா சீனா மத்தியிலான பொருளாதார நிலை, வர்த்தக நிலை குறித்தும் பேசினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Well, I think we’ve still to get to a place where we feel satisfied. We have this saying, “in the land of the blind, the one-eyed man is king.” We’re a little bit that way- Raghuram Rajan.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X