ரகுராம் ராஜனை விட அதிகச் சம்பளம் வாங்கும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிசர்வ் வங்கியின் கவர்னரான ரகுராம் ராஜன், அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டாலும், வர்த்தக உலகில் ராஜனின் மதிப்பு இன்றளவும் சிறப்பாக உள்ளது.

 

சமீபத்தில் கூட இந்திய பொருளாதாரத்தை, ஒன்றைக் கண் ராஜா என விமர்சனம் செய்தார், இதற்கு வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக, ராஜன் வாயை அடக்க வேண்டும் என்ற விதத்தில், ராஜன் இனி பேசும் போது வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேச வேண்டும் எனக் கூறினார்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் உயர் பதவியான கவர்னர் பொறுப்பில் இருக்கும் ரகுராம் ராஜனை விடப் பல அதிகாரிகள், அவரை விடவும் பல லட்சங்கள் அதிகச் சம்பளம் வாங்குகின்றனர் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

சரி ரகுராம் ராஜனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா உங்களுக்கு..?

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

இன்றைய வர்த்தக உலகில் ரிசர்வ் வங்கியின் வரலாற்றில் மிகச்சிறந்த தலைவர் எனப் பெயர்பெற்றுள்ள ரகுராம் ராஜன் மாதம் 1,98,700 ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகிறார் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கும் ரிசர்வ் வங்கி இந்தப் பதிலை அளித்துள்ளது.

 

1.98 லட்சம் ரூபாய்

1.98 லட்சம் ரூபாய்

அடிப்படை சம்பளமாக 90,000 ரூபாய், அகவிலைப் படியாக 1,01,700 ரூபாய் மற்றும் இதர வருமானமாக 7,000 ரூபாய் என மாதம் 1,98,700 ரூபாய்ச் சம்பளமாக ரகுராம் ராஜன் பெறுகிறார்.

ஆனால் இவரை விடவும் 3 அதிகாரிகள் பல லட்சங்கள் அதிகமாகச் சம்பளம் பெறுகின்றனர் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அவர்கள் யார்..?

 

பெரும் தலைகள்
 

பெரும் தலைகள்

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கும் ரிசர்வ் வங்கி இந்தப் பதிலில் ராஜனை விடக் கோபாலகிருஷ்ண சீதாராம் ஹெக்டே மாதம் ரூ.4 லட்சம், அண்ணாமலை அரப்புலி கவுண்டர் 2,20,355 லட்சம் மற்றும் வி.கந்தசாமி 2.1 லட்சம் ரூபாய் என மிகப்பெரிய தொகையை மாத சம்பளமாகப் பெறுகின்றனர்.

முக்கியத் தகவல்கள்

முக்கியத் தகவல்கள்

ரிசர்வ் வங்கி இணையதளத்தில் வெளியிட்டுள்ள அதிகாரிகள் குறித்த விபரங்களில் கோபாலகிருஷ்ண சீதாராம் ஹெக்டே, அண்ணாமலை அரப்புலி கவுண்டர் மற்றும் வி.கந்தசாமி ஆகியோர் பற்றிய விபரங்கள் இல்லை.

மேலும் இவர்கள் ரிசர்வ் வங்கியில் வகிக்கும் பதவிகள் குறித்தும் எவ்விதமான தகவல்களை அளிக்கவில்லை.

 

கோபாலகிருஷ்ண சீதாராம் ஹெக்டே

கோபாலகிருஷ்ண சீதாராம் ஹெக்டே

ரிசர்வ் வங்கி இணையத்தளத்தில் மூலம் திரட்டப்படத் தகவல்களில் கோபாலகிருஷ்ண சீதாராம் ஹெக்டே சில காலம் முதன்மை சட்ட ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.

அல்பனா கிலாவாலா

அல்பனா கிலாவாலா

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் செய்தித்தொடர்பாளர் அல்பனா கிலாவாலா விடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எவ்விதமான பதிலும் அளிக்கவில்லை.

ஆமா இவருடை சம்பளம் என்ன..?

ஆமா இவருடை சம்பளம் என்ன..?

ஆர்பிஐ-யின் கம்யூனிக்கேஷன் பிரிவில் முதன்மை ஆலோசகராகப் பணியாற்றும் அல்பனா கிலாவாலா, ரிசர்வ் வங்கியின் 4 துணை கவர்னர்கள் மற்றும் 11 நிர்வாக இயக்குநர்களை விடவும் அதிகமாகச் சம்பளம் பெறுகிறார்.

பதவிகள்

பதவிகள்

ரிசர்வ் வங்கியைப் பொறுத்த வரை கவர்னர், துணை கவர்னர்கள் அதனைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளின் நிர்வாக இயக்குநர்கள். இதுவே பதவி வரிசை நிலையாகும்.

ஒத்த கண் ராஜா

ஒத்த கண் ராஜா

இத கிளிக் செய்யுங்க..!இத கிளிக் செய்யுங்க..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reserve Bank of India (RBI) Governor Raghuram Rajan, currently in the eye of the storm over his ‘one-eyed is king among blind’ remark, may be the most powerful person at the central bank, but he does not appear to be the top-paid one!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X