ஐபோன் விலையை 30% உயர்த்த முடிவு.. அதிர்ச்சியடைந்த ஆப்பிள் பிரியர்கள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய சந்தையில் ஐபோன் பயன்பாட்டை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் புதிய கணக்குப் போட்டு, ஆடம்பர வரிசையில் இருக்கும் ஐபோன்களை மலிவான விலையில் விற்பனை செய்ய ஐபோன் எஸ்ஈ என்ற புதிய மாடல் ஐபோன்களைச் சில மாதங்களுக்கு முன் சந்தையில் அறிமுகம் செய்தது.

ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் கணக்குத் தப்பாகிப்போனது. என்ன ஆச்சு..?

ஐபோன் எஸ்ஈ

ஐபோன் எஸ்ஈ

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வரலாறு காணாத விலை குறைவில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் எஸ்ஈ மக்கள் மத்தியில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் தனது முந்தைய அறிவிப்பான ஐபோன் 6 வரிசை மாடல்களின் விலையை 29 சதவீதம் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

வெறும் 1,000 போன்கள்

வெறும் 1,000 போன்கள்

ஐபோன் எஸ்ஈ அறிமுகம் செய்யப்பட்ட நாளில் வெறும் 1,000 போன்களை மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதால், இதன் விற்பனையை அதிகரிக்கும் வகையில், இதன் விலையைக் குறைக்காமல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 வரிசை போன்களின் விலையை 29 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தச் செயல் இந்திய மொபைல் சந்தையில் அதிர்ச்சி அளித்துள்ளது.

 

புதிய விலை..

புதிய விலை..

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய விலை அறிவிப்புகள் படி ஐபோன் 6 மாடலின் விலை 40,000 ரூபாயாகவும், 6எஸ் விலை 48,000 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு ஐபோன் எஸ்ஈ விலை 39,000 ரூபாய் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஐபோன் 6இன் விலை 31,000 ரூபாய் ஆக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

ஐபோன் 5எஸ்

ஐபோன் 5எஸ்

அதேபோல் ஐபோன் 5எஸ் விலையும் 22 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 22,000 ரூபாயாக விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது ஆப்பிள்.

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம்

உலகின் மிகப்பெரிய மொபைல் விற்பனை நிறுவனமாகத் திகழும் ஆப்பிள், இந்திய சந்தையில் அதிகளவிலான மொபைல்களை விற்பனை செய்ய முடியாத காரணத்தால் தனது புதிய ஐபோன்களை வாடகைக்கு விடத் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், இந்தியர்கள் மத்தியில் ஐபோன் புழக்கத்தை அதிகரிக்க, கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களை மையமாகக் கொண்டு வாடகை ஐபோன் திட்டத்தை வடிவமைத்துள்ளது.

 

ஐபோன் எஸ்ஈ

ஐபோன் எஸ்ஈ

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகமான ஐபோன் எஸ்ஈ மாடல் போனை 2 வருட ஒப்பந்த திட்ட அடிப்படையின் கீழ் மாதம் 999 ரூபாய் வாடகைக்கு வாடகைக்கு அளிக்க உள்ளது.

மோசமான திட்டம்...

மோசமான திட்டம்...

இன்றைய நிலையில் ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில் ஐபோன் 6எஸ் போனின் (16ஜிபி, ரோஸ் கோல்டு) விலை 45,999 ரூபாய்.

2 வருட ஒப்பந்தத்தின் கீழ் மாதம் 1,399 ரூபாய் வாடகை என்றால்

ரூ.1,399 x 24= 33,576 ரூபாய். இதில் வாடிக்கையாளர்களுக்குச் சுமார் 12,000 ரூபாய் லாபம் கிடைத்தாலும், ஒப்பந்தம் காலம் முடிந்த பிறகு நாம் மொபைல் போனை திருப்பிச் செலுத்த வேண்டும். சந்தையில் 2 வருடப் பழமை ஐபோனுக்குக் குறைந்தது 15,000 கிடைக்கும் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.

 

 விளம்பரம்

விளம்பரம்

மேலும் 2016ஆம் ஆண்டில் 2 சதவீதமாக இருக்கும் ஆப்பிள் நிறுவன சந்தையை 10 சதவீதமாக உயர்த்த புதிய மாடல் போன்கள் அறிமுகம், விளம்பரத்திற்காகப் பல மில்லியன் டாலர் செலவு எனப் பல வகையில் ஆப்பிள் நிறுவனம் திட்டம் தீட்டி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple has increased prices of iPhones in India. The company's new device SE got a poor response and managed to sell only a few thousand units. And, the hike is as steep as 29% for the iPhone 6 device.
Story first published: Monday, April 25, 2016, 16:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X