கடுமையான நிதி அச்சுறுத்தலில் உலக நாடுகள்.. 8வது இடத்தில் 'இந்தியா'..!

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உலகில் உள்ள அனைத்து நாடுகளும், தங்களை ஒரு சிறந்த பொருளாதார வல்லரசாகக் கட்டமைக்க முயற்சிக்கிறன. அதாவது எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு நாட்டிடமும் எதற்காகவும் கையேந்தாத வகையில், தங்களுடைய பொருளாதாரத்தைச் செம்மையாக்க முயற்சிக்கிறனர். ஒரு நாட்டின் நிதி ஆதாரமே அந்த நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

சர்வதேச வணிகச் சந்தை, 2009ஆம் ஆண்டுகளில் மிகப்பெரிய அளவிலான நிதிப் பற்றாக்குறையால் சிக்கிச் சீரழிந்தது. இதில் பல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முக்கிய வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் திவாலானது. இக்காலகட்டத்தில் பல நாடுகளின் நிதி திறன்களைப் பாழ்படுத்தியது உடன் அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் பெருமளவில் பாதித்தது.

 

'கிராண்ட் தார்ன்டன் சர்வதேச வர்த்தக அறிக்கை' அடிப்படையாகக் கொண்டு, 'ரெடிஃப்', நிறுவனம், கடுமையான நிதிப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட 10 நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது.

1. ஜோர்ஜியா

1. ஜோர்ஜியா

வணிகத்திற்கான நிதியைத் திரட்ட நடத்தும் போராட்டத்தின் சராசரி சதவீதம்: 31

ஜோர்ஜியா பண்டைய காலங்களில் இருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஜார்ஜியாவின் புவியியல் இருப்பு அதற்குரிய மிக முக்கியமான காரணமாக விளங்குகின்றது. பண்டைய காலத்தில் இருந்தே தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு போன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் இந்த நாட்டின் மிக முக்கிய வர்த்தகப் பொருட்களாக விளங்குகின்றன.

மது தயாரித்தல் என்பது ஜோர்ஜியாவின் மிக முக்கிய மரபாக இருப்பதுடன், இந்த நாட்டின் வர்த்தகத்தில் மிக முக்கியப் பொருளாகவும் இருக்கின்றது. அத்துடன் மதுவானது இந்த நாட்டின் மிக முக்கியமான நிதி ஆதாரங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது.

சுற்றுலாவும்.. பொருளாதாரமும்..

சுற்றுலாவும்.. பொருளாதாரமும்..

சமீப காலங்களில் அதிகரித்து வரும் சுற்றுலா, ஜோர்ஜிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு நிறைய உதவுகின்றது. வரலாற்றுத் தளங்கள் மற்றும் கனிம நீரூற்று போன்றவை ஜோர்ஜியாவில் உள்ள மிக முக்கியச் சுற்றுலா இடங்களாக உள்ளன.

அது என்னபா போராட்டம்..?
 

அது என்னபா போராட்டம்..?

ஒரு நாட்டில் பொருளாதாரம் சிறப்பாக இருந்தால் வர்த்தகத்திற்கான நிதியை எவ்விதமான போராட்டமும் இல்லாமல் எளிமையாகப் பெற்றுவிடலாம்.

ஆனால் நாட்டின் வளர்ச்சியோ அல்லது அத்துறையின் வளர்ச்சியோ குறைவாகவும் மந்தமாகவும் இருந்தால் நிதி திரட்டுவது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். உதாரணமாக இந்தியாவில் ஈகாமர்ஸ் துறை.

2. ரஷ்யா

2. ரஷ்யா

வணிகத்திற்கான நிதியைத் திரட்ட நடத்தும் போராட்டத்தின் சராசரி சதவீதம்: 32

ரஷ்யா, மொத்த உள்நாட்டு உற்பத்தி, மற்றும் மக்களின் வாங்கும் திறனின் அடிப்படையில், உலகின் எட்டாவது மற்றும் ஆறாவது பொருளாதார சக்தியாக உள்ளது. ரஷ்யாவின் பொருளாதாரமானது, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு

ரஷ்ய நாட்டின் இயற்கை வளங்களும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவும், ரஷியன் வேகமான பொருளாதார வளர்ச்சி மிக முக்கியமான காரணங்களாக விளங்குகின்றன. 1999 முதல் 2008 வரையில், ரஷ்யா சராசரியாக ஏழு சதவீத பொருளாதார வளர்ச்சி அடைந்து வந்தது.

ரஷியன் ஏற்றுமதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மர பொருட்கள் எண்பது சதவீதமாக உள்ளன.

3. துருக்கி

3. துருக்கி

வணிகத்திற்கான நிதியைத் திரட்ட நடத்தும் போராட்டத்தின் சராசரி சதவீதம்: 35

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மக்களின் வாங்கும் திறன் அடிப்படையில், துருக்கி உலகின் பதினாறாவது மற்றும் பதினேழாவது பெரிய பொருளாதார சக்தியாக உள்ளது.

1923 முதல் 1983 வரை துருக்கிய அரசாங்கம் வெளிநாட்டு வர்த்தகம், தனியார் துறைகள், அன்னிய நேரடி முதலீடு மற்றும் அன்னிய செலாவணி போன்றவற்றில் பல கட்டுப்பாடுகளை விதித்தது. 1983 ல் அங்கு ஆட்சியில் அமர்ந்த புதிய அரசாங்கம் இந்தக் கட்டுப்பாடுகளை அகற்றியது.

1994 ஆண்டு முதல்...

1994 ஆண்டு முதல்...

கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட பின்னர்த் துருக்கியின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தது. ஆனால் 1994 ஆம் ஆண்டுப் பொருளாதார மந்த நிலை துருக்கியின் பொருளாதார வளர்ச்சியை வெகுவாகப் பாதித்தது.

4. தாய்லாந்து

4. தாய்லாந்து

வணிகத்திற்கான நிதியைத் திரட்ட நடத்தும் போராட்டத்தின் சராசரி சதவீதம்: 37

1985 முதல் 1996 ஆண்டு வரை தாய்லாந்தின் பொருளாதார வளர்ச்சி மிகவும் நன்றாக இருந்தது; அந்தக் காலக் கட்டதில் தாய்லாந்தின் பொருளாதாரமும் மிகவும் வேகமாக வளர்ந்து வந்தது.

தாய்லாந்தின் அதிக ஏற்றுமதி விகிதம் அதன் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தது. தாய்லாந்தின் முதன்மை ஏற்றுமதி பொருட்களாகத் தாய் அரிசி, ஜவுளி, மீன் பொருட்கள், ரப்பர், காலணி, கார்கள், கணினி உபகரணங்கள், முதலியன உள்ளன.

அரிசி ஏற்றுமதியைப் பொருத்தவரை தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, தாய்லாந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு சிறந்த இடமாக மாறிவிட்டது.

5. அர்ஜென்டீனா

5. அர்ஜென்டீனா

வணிகத்திற்கான நிதியைத் திரட்ட நடத்தும் போராட்டத்தின் சராசரி சதவீதம்: 40

அர்ஜென்டீனாவின் பொருளாதாரம் அதன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அணு அறிவியல், உயிரி தொழில்நுட்பம், மருத்துவம், நானோ தொழில்நுட்பம், ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் பலவற்றைச் சார்ந்து இருக்கின்றது. இந்த நாடு மிகவும் பெருமை வாய்ந்த அறிவியல் கண்காட்சிகளை நடத்தி வந்துள்ளது.

அர்ஜென்டீனா பொருளாதாரமானது, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகக் கருதப்படுகின்றது. தொழில்மயமாதல், அதிகக் கல்வியறிவு விகிதம் மற்றும் மிகுதியான இயற்கை வளங்கள் போன்றவை அர்ஜென்டீனா நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பிரதான காரணங்களாக உள்ளன.

பொருளாதார மந்த நிலை

பொருளாதார மந்த நிலை

மீண்டும் மீண்டும் வரும் பொருளாதார மந்தநிலைமை இந்த நாட்டின் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்தியது. எனினும் இன்றும், அர்ஜென்டீனா ஒரு நல்ல தரமான வாழ்க்கைத் தரத்தை மக்களுக்கு வழங்கி வருகின்றது.

6. இத்தாலி

6. இத்தாலி

வணிகத்திற்கான நிதியைத் திரட்ட நடத்தும் போராட்டத்தின் சராசரி சதவீதம்: 42

இத்தாலி, பல பெரிய வர்த்தக நிறுவனங்களின் தாயகமாக உள்ளது. பல நூற்றாண்டுகளாக, இத்தாலி உலகம் முழுவதும் உள்ள மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

இத்தாலி, உலகில் உள்ள வளர்ந்த நாடுகளில் இருபத்தி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இது தவிர இத்தாலி, மிக உயர்ந்த உலகமயமாக்கப்பட்ட நாடாக விளங்குவதுடன் உலகின் ஆறாவது பெரிய பட்ஜெட் கொண்ட நாடாகவும் இருக்கின்றது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இத்தாலியில் வேலையின்மை சதவீதம் மிகவும் குறைவு, மற்றும் அதன் தனிநபர் வருவாய் மிக அதிகமாக உள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு முன், இத்தாலி விவசாயம் சார்ந்த நாடு என அறியப்பட்டது. ஆனால் போருக்குப் பின்னர், இத்தாலி தன்னை மிகவும் வளர்ந்த, தொழில்மயமான நாடாக வெற்றிகரமாக மாற்றியுள்ளது.

7. ஸ்பெயின்

7. ஸ்பெயின்

வணிகத்திற்கான நிதியைத் திரட்ட நடத்தும் போராட்டத்தின் சராசரி சதவீதம்: 45

ஆரம்ப நவீன காலத்தில் இருந்து, ஸ்பெயின் ஒரு ஆளுமைமிக்க நாடாக இருந்து வருகிறது. இது ஒரு ஜனநாயக நாடாகும். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற அரசாங்கம், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, முடியாட்சி கீழ் இயங்குகின்றது.

ஸ்பெயினின் பொருளாதாரம், உலகில் பதின்மூன்றாம் இடத்தில் உள்ளது. இது யூரோ பகுதியில் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இருக்கின்றது. இங்கு வாழ்க்கைத் தரம் மிகவும் உயர்வாக உள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

பணவீக்கமானது ஸ்பெயினின் பொருளாதார வளர்ச்சியின் முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக அளவில் இடம்பெயரும் ஸ்பானிஷ் மக்கள், ஸ்பெயினின் பொருளாதார வளர்ச்சியை அதிகம் பாதிக்கின்றனர்.

8. இந்தியா

8. இந்தியா

வணிகத்திற்கான நிதியைத் திரட்ட நடத்தும் போராட்டத்தின் சராசரி சதவீதம்: 54

இந்தியா, சர்வதேச வணிக மற்றும் பல துறைகளில் ஒரு தவிர்க்க இயலாத பெயராக உள்ளது. இந்தியா உலக அமைதி, மற்றும் உலகமயமாக்கலில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. 1991 ம் ஆண்டிற்குப் பிறகு உலகின் பத்தாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் வேகமாக உள்ளது.

மக்களின் வாங்கும் திறனின் அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக இருக்கின்றது. மற்றும் இது உலகின் அனைத்து மூலைகளிலும் இருந்து வணிக முதலீடுகளை ஈர்ப்பதில் வெற்றி அடைந்துள்ளது.

ஊழல் மற்றும் வறுமை

ஊழல் மற்றும் வறுமை

இந்த அனைத்திற்கும் மத்தியில், இந்தியா இன்னும் ஊழல், வறுமை, கல்வியறிவு, பெண்கள் பாகுபாடு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் இது போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது.

9. வியட்நாம்

9. வியட்நாம்

வணிகத்திற்கான நிதியைத் திரட்ட நடத்தும் போராட்டத்தின் சராசரி சதவீதம்: 59

1986 ம் ஆண்டு வியட்நாம் வரலாற்றில் ஒரு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ஆண்டில்தான் வியட்நாமிய அரசாங்கம், பொருளாதார மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட சில முக்கிய நகர்வுகளைச் செயல்படுத்த தொடங்கிது.

வியட்நாம் அரசாங்கத்தின் இந்த முன்னோடி நடவடிக்கைக்குப் பிறகு, 2000 ஆம் ஆண்டு வாக்கில், வியட்நாமிற்கு உலகில் உள்ள பல நாடுகளுடன் உறவுகள் உருவானது. வியட்நாமின் பொருளாதார வளர்ச்சியானது, உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.

பெண் பாகுபாடு

பெண் பாகுபாடு

பல வரலாற்றுத் தடைகளை எதிர்கொண்டு முன்னேறி வந்தாலும், வியட்நாமில், பெண் பாகுபாடு, சமத்துவமின்மை மற்றும் இது போன்ற பல பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.

10. கிரீஸ்

10. கிரீஸ்

வணிகத்திற்கான நிதியைத் திரட்ட நடத்தும் போராட்டத்தின் சராசரி சதவீதம்: 59

கிரீஸ், அல்பேனியா, மாசிடோனியா குடியரசு, துருக்கி மற்றும் பல்கேரியா போன்ற நாடுகளுடன் தன்னுடைய நில எல்லைகளைப் பகிர்ந்துகொள்கிறது கிரீஸ். இந்நாட்டு மக்களின் உயர் தரமான வாழ்க்கைத் முறையினால் உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகக் கிரீஸ் பார்க்கப்படுகிறது.

உலகில் உள்ள நாடுகளின் வாழ்கைத் தரத்தை ஒப்பிடும் பொழுது, கிரேக்கம், 21வது இடத்தில் இருக்கின்றது. கிரேக்கத்தின் பொருளாதாரம், யூரோ பகுதியில் உள்ள நாடுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குகின்றது.

பொதுச் சேவையில் முதல் இடம்..

பொதுச் சேவையில் முதல் இடம்..

தேசிய பொருளாதாரத்தை நோக்கிய பங்களிப்பை கணக்கிடும் பொழுது, பொதுச் சேவைத்துறை முதலிடத்திலும், தொழில் மற்றும் விவசாயம் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும் பெறுகின்றன. சுற்றுலா கூடக் கிரேக்க பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகின்றது கிரீஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nations struggle: Financial Threats leads to economy fall

All the nations across the globe, tries to build the best economy for themselves. Everyone tries to form their economy in such a way, they do not have to look upon any other nation for any sort of financial helps.
Story first published: Friday, April 29, 2016, 15:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more