ராணுவ உபகரண உற்பத்திக்காக 3 உக்ரைன் நிறுவனங்களுடன் கூட்டணி: அனில் அம்பானி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் ராணுவ உபகரணங்கள், விமானங்கள், நீர்மூழ்கி கப்பலுக்கான டர்பைன், வான்வழி கண்காணிப்பு விமானங்கள் எனப் பல பொருட்களைத் தயாரிக்க அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் 3 உக்ரைன் அரசு நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

 

ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி உக்ரைன் நாட்டு அதிபர் Petro Poroshenko சந்தித்து, இந்தியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு மத்தியிலான டிபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் துறையில் இருக்கும் வாய்ப்புகளை ஆலோசித்தனர்.

ராணுவ உபகரண உற்பத்திக்காக 3 உக்ரைன் நிறுவனங்களுடன் கூட்டணி: அனில் அம்பானி

இதன் பின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் உக்ரைன் அரசு நிறுவனங்களான ராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்ய Ukroboronprom, Spetstechno Exports மற்றும் Antonov ஆகிய நிறுவனங்களுடன் உற்பத்திக்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது.

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் மீடியம் ராணுவ போக்குவரத்து விமானங்களைத் தயாரிக்கும் திட்டத்தில் ரிலையன்ஸ் மற்றும் Antonov நிறுவன கூட்டணி போட்டி போட உள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

ராணுவ உபகரண உற்பத்திக்காக 3 உக்ரைன் நிறுவனங்களுடன் கூட்டணி: அனில் அம்பானி

இந்திய ராணுவம் தற்போது 100 AN-32 போக்குவரத்து விமானங்களைப் பயன்படுத்தி வருகிறது. இதுவே இந்திய ராணுவத்தின் முதுகெலும்பாகச் செயல்படுகிறது.

இந்த எண்ணிக்கையைத் தற்போசது 300ஆக உயர்த்த HAL மற்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Defence inks pact with 3 Ukrainian state firms

Reliance Defence has signed an agreement with three Ukrainian state-owned firms - Ukroboronprom, Spetstechno Exports and Antonov - to collaborate on a range of military products including transport aircraft, armoured vehicles, maritime gas turbines and unmanned aerial vehicles.
Story first published: Saturday, April 30, 2016, 16:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X