பழைய ஐபோன் இறக்குமதிக்கு மத்திய அரசு மறுப்பு.. சோகத்தில் ஆப்பிள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகின் முன்னணி மொபைல் விற்பனை நிறுவனமான ஆப்பிள், இந்திய சந்தையில் second-hand எனப்படும் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்களை விற்பனை செய்யவும், இறக்குமதி செய்யவும் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது.

ஆனால் மத்திய அரசு இந்தச் செயலின் மூலம் ஆபத்து நிறைந்த எலக்ட்ரானிக் கழிவுகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் என உணர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் அனுமதிக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம்

உலகளவில் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைக் கொண்டு இருக்கும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்வதன் மூலம் மிகப்பெரிய சந்தையை அடைய முடியும் எனத் திட்டமிட்டு மத்திய அரசிடம், இறக்குமதிக்கும், விற்பனைக்கும் அனுமதி கோரியது.

மத்திய அரசு

மத்திய அரசு

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தச் செயல் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அளவிலான எலக்ட்ரானிக் கழிவுகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எனக் கருதி ஆப்பிள் நிறுவனத்தின் கோரிக்கைக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வர்த்தகம் பாதிப்பு
 

வர்த்தகம் பாதிப்பு

இந்தப் பழைய போன்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்வதன் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய வாடிக்கையாளர் சந்தையை உருவாக்க முடியும் எனத் திட்டமிட்டு இருந்த ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசின் மறுப்பு மிகப்பெரிய பின்னடைவு.

இந்திய சந்தை

இந்திய சந்தை

அமெரிக்க மொபைல் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் இருக்கும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் தனது வர்த்தகத்தை அதிகரிக்கப் பல வகையான திட்டங்களைக் கையாடு வருகிறது.

ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் எஸ்ஈ மாடல் போன்களின் வர்த்தகம் கடுமையாகப் பதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

2வது முறை

2வது முறை

சில ஆண்டுகளுக்கு இதேபோல் ஆப்பிள் நிறுவனம் அதே அனுமதிக்காக மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டிம் குக்

டிம் குக்

ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த விற்பனை சந்தையில் வெறும் 2 சதவீதம் மட்டுமே இந்தியாவில் இருந்து கிடைக்கப்பெற்றாலும், கடந்த வருடத்தை விடவும் 2015ஆம் ஆண்டில் ஐபோன்களின் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் 2016ஆம் ஆண்டில் இந்தியா முக்கிய வர்த்தகச் சந்தையாகப் பார்க்கப்படும் என ஆப்பிள் நிறுவனத்தின் சீஇஓ டிம் குக் தெரிவித்தார்.

 

13 % சரிவு..

13 % சரிவு..

ஆடம்பர சந்தையில் இருக்கும் ஐபோன்களை இந்தியாவில் விற்பனை செய்யப் போராடி வந்த ஆப்பிள் நிறுவனம். 2016ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் விற்பனையில் 56 சதவீத உயர்வை எட்டியுள்ளது.

ஆனால் சர்வதேச சந்தையில் 13 வருட ஐபோன் விற்பனையில் முதல் முறையாக விற்பனை சரிவும், வருவாய் இழப்பையும் ஆப்பிள் நிறுவனம் சந்தித்துள்ளது.

 

தட தடவெனக் குறைந்த பங்கு மதிப்பு...

தட தடவெனக் குறைந்த பங்கு மதிப்பு...

டிம் குக் தலைமையிலான ஆப்பிள் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட சில மணிநேரங்களில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் 104 டாலருக்கும் அதிகமான விலையில் வர்த்தகம் செய்யப்பட்ட ஆப்பிள் நிறுவனப் பங்குகள் தட தடவெனக் குறைந்து 96 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

2.7 லட்சம் கோடி

2.7 லட்சம் கோடி

இதனால் ஒரு மணி நேரப் பங்கு வர்த்தகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 40 பில்லியன் டாலர் குறைந்தது. இந்திய ரூபாய் மதிப்பின் படி இதன் மதிப்பு 2,66,160 கோடி ரூபாயாகும்.

ஆப்பிள் நிறுவன வரலாற்றில் நடந்த மிகப்பெரிய வர்த்தகப் பாதிப்பாக இதைப் பார்க்கப்படுகிறது.

 

சந்தை மதிப்பு

சந்தை மதிப்பு

பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் பட்டியலிடப்பட்டால், இதன் மதிப்பைப் பங்குகளின் விலையைக் கொண்டு தான் சந்தையில் மதிப்பிடப்படும். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனப் பங்குகளின் விலை 105 டாலரில் இருந்து 96 டாலராகக் குறைந்த நிலையில், சந்தையில் இந்நிறுவனத்தின் மதிப்பு 40 பில்லியன் டாலர் அளவு குறைந்துள்ளது.

ஆப்பிள்

ஆப்பிள்

அமெரிக்க எஸ் அண்டு பி 500 சந்தையில் ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் என்எஸ்ஈ சந்தையில் டிசிஎஸ் நிறுவனத்தைப் போல் ஆப்பிள் உள்ளது.

பங்கு கொள்முதல்

பங்கு கொள்முதல்

இந்த மிகப்பெரிய சரிவில் இருந்து ஆப்பிள் மீளச் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை ஆப்பிள் நிறுவனம் வாங்க உள்ளதாக இந்நிறுவனத்தின் சிஈஓ டிம் குக் தெரிவித்தார்.

விலை உயர்வு

விலை உயர்வு

<strong><em>ஐபோன் விலையை 30% உயர்த்த முடிவு.. அதிர்ச்சியடைந்த ஆப்பிள் பிரியர்கள்..!</em></strong>ஐபோன் விலையை 30% உயர்த்த முடிவு.. அதிர்ச்சியடைந்த ஆப்பிள் பிரியர்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The government has sounded out Apple that it is in-principle against allowing import and sale of second-hand phones in India to prevent dumping of hazardous electronic waste.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X