'ரியல் எஸ்டேட்' நிறுவனத்தை வாங்கத் துடிக்கும் ஸ்னாப்டீல்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டின் முன்னணி ஆன்லைன் சில்லறை விற்பனை (ஈகாமர்ஸ்) நிறுவனமான ஸ்னாப்டீல், கடந்த சில மாதங்களாக முக்கியமான நகரங்களை மையப்படுத்தி விற்பனை செய்வதை விடுத்து, இந்திய கிராமம் மற்றும் டவுன் பகுதிகளை மையப்படுத்தி அதிகளவிலான புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று, தனது முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளது.

இந்நிலையில் ஸ்னாப்டீல், தற்போது ஹவுசிங்.காம் என்னும் ஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றும் முடிவோடு, இந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

கடந்த டிசம்பர் மாதம் முதல் ஹவுசிங்.காம் நிறுவனத்தைக் கைப்பற்ற ஸ்னாப்டீல் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அடுத்தச் சில மாதங்களில் இந்த டீல் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் இந்த டீல் 50- 100 மில்லியன் டாலர் மதிப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

சாப்ட்பாங்க், நெக்சஸ் வென்சர் பார்ட்னர்ஸ் போன்ற முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் ஸ்னாப்டீல் மற்றும் ஹவுசிங்.காம் ஆகிய இரு நிறுவனங்களிலும் முதலீடு செய்து வருவதால், இந்த டீல் எளிமையான முறையில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குழப்பம்..

குழப்பம்..

இந்த டீல் குறித்து விபரம் அறிந்த சில அதிகாரிகளைக் கேட்டபோது, ஸ்னாப்டீல் நிறுவனம் ஹவுசிங்.காம் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை மட்டுமே கைப்பற்றும் எனவும், சிலர் ஹவுசிங்.காம் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றவே பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் ரியல் எஸ்டேட்

ஆன்லைன் ரியல் எஸ்டேட்

இன்றைய நிலையில் ஆன்லைன் ரியல் எஸ்டேட் துறையில் 99ஏக்கர்ஸ், மேஜிக்பிரிக்ஸ்.காம் ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதேபோல் புதிதாகக் களமிறங்கியுள்ள குவிக்கர் மற்றும் ஓஎல்எக்ஸ் ஆகியவை வர்த்தகத்தைப் பெற போராடி வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் அதிகளவிலான ஆன்லைன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ஸ்னாப்டீல், ஹவுசிங்.காம் நிறுவனத்தின் மூலம் இச்சந்தையில் இறங்குகிறது.

 

டாடா ஹவுசிங்

டாடா ஹவுசிங்

கடந்த 2014ஆம் ஆண்டுப் பிளாட் மற்றும் அப்பார்ட்மென்ட் விற்பனைக்காக ஸ்னாப்டீல் டாடா ஹவுசிங் நிறுவனத்துடன் கூட்டணி வைத்தது. இந்த முயற்சி அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு மாறுபட்டதாக இருந்தது.

மேலும் இம்முயற்சிக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

 

ஹவுசிங்.காம்

ஹவுசிங்.காம்

2012ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட ஹவுசிங்.காம், கடந்த 12-18 மாதங்களாக நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் எதிரொலியாக ஹவுசிங்.காம் நிறுவனத்தில் இருந்து இதன் அஸ்தான நிறுவனர் ராகுல் யாதவ் வெளியேறினார்.

<strong><em>ஸ்டீவ் ஜாப்ஸின் நிலை இவருக்கும் வந்தது.. பாவம் ராகுல் யாதவ்..</em></strong>ஸ்டீவ் ஜாப்ஸின் நிலை இவருக்கும் வந்தது.. பாவம் ராகுல் யாதவ்..

600 ..." data-gal-src="http:///img/600x100/2016/05/04-1462341740-1housing-comrahulyadav4.jpg">
சபதம்.. பணி நீக்கம்..

சபதம்.. பணி நீக்கம்..

<strong><em>600 ஊழியர்கள் பணி நீக்கம்.. ஹவுசிங்.காம் திடீர் முடிவு!</em></strong>600 ஊழியர்கள் பணி நீக்கம்.. ஹவுசிங்.காம் திடீர் முடிவு!

30 நாட்கள் காத்திருங்கள்.. 10 மடங்கு பெரியதாக வருகிறேன்: ராகுல் யாதவ்!30 நாட்கள் காத்திருங்கள்.. 10 மடங்கு பெரியதாக வருகிறேன்: ராகுல் யாதவ்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Snapdeal close to snapping up Housing.com

Leading online marketplace Snapdeal is in the final stages of acquiring online real-estate firm Housing.com.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X