பிளிப்கார்ட் சிக்கிய அதே வலையில் சோமேட்டோ.. சின்னாபின்னமாகும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் மதிப்பும் சரி, முதலீடும் சரி, கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதில் முதல் அடியைப் பிரபல ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் சந்தித்தது.

பிளிப்கார்ட் நிறுவனத்தைத் தொடர்ந்து தற்போது உணவு ஸ்டார்ட்-அப் நிறுவனமான, சோமேட்டோ நிறுவன மதிப்பை அதிரடியாக 50 சதவீதம் குறைத்துள்ளது எச்எஸ்பிசி நிறுவனம்.

இப்படித் தான் இருக்கு இந்தியாவில் ஸ்டார்ட்-அப் சந்தை.

சோமேட்டோ
 

சோமேட்டோ

உணவு டெலிவரி மற்றும் உணவக தேடல் சேவையை இணையம் மூலம் அளிக்கும் சோமேட்டோ நிறுவனத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் இந்திய சந்தையை மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வமுடன் முதலீடு செய்தனர்.

ஆனால் சந்தையில் இத்துறை சார்ந்த நிறுவனங்கள் மத்தியில், போட்டி அதிகரித்துள்ளதாலும், வர்த்தகம் குறைந்ததாலும் சோமேட்டோ போன்ற பல நிறுவனங்கள் லாபத்தை ஈட்ட திணறி வந்தது.

வர்த்தகமும்.. மதிப்பீடும்...

வர்த்தகமும்.. மதிப்பீடும்...

ஆன்லைன் நிறுவனங்களின் துவக்கத்தில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றாலும், சில மாதங்களுக்குப் பின் இதன் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதனால் முதலீட்டாளர்களின் தொடர் நெருக்கடியால் செலவுகளைக் குறைக்கும் விதமாக ஆன்லைன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பணிநீக்கம், குறைவான சம்பள உயர்வு, நிறுவனத்தை விற்பனை செய்வது எனப் பல கசப்பான முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

மதிப்பீடு..

மதிப்பீடு..

இத்தகைய மோசமான சூழ்நிலையில் தான் பிளிப்கார்ட் மற்றும் சோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் சிக்கியுள்ளது.

இன்போஎட்ஜ்

இன்போஎட்ஜ்

நாகூரி.காம், 99ஏக்கர்ஸ், ஜீவன்சாந்தி போன்ற முன்னணி நிறுவனங்களை நடத்தும் இன்போஎட்ஜ் நிறுவனம் தான் இந்தியாவில் சோமேட்டோ நிறுவனத்தை நடத்தி வருகிறது.

சோமேட்டோ நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை இன்போஎட்ஜ் குறிப்பிடத்தக்கது. சரி எச்எஸ்பிசி விவகாரம் என்ன..?

எச்எஸ்பிசி
 

எச்எஸ்பிசி

சோமேட்டோ நிறுவனம் குறித்து எச்எஸ்பிசி அளித்த முழுமையான ஆய்வறிக்கையில், சோமேட்டோ நிறுவனம் இந்தியா மட்டும் இல்லாமல் 23 சந்தைகளில் இயங்கி வருகிறது. ஆயினும் எந்த ஒரு சந்தையிலும் லாபம் இல்லை. இதன் படி சோமேட்டோவின் கடைசிக் கட்ட செயல்பாடுகள், சர்வதேச வர்த்தகத்தில் தொடர் இழப்பு, தொடர் முதலீடு கோரும் வழக்கம் ஆகியவற்றைக் கொண்டு DCF முறையின் கீழ் ஆய்வு செய்த போது இந்நிறுவனத்தின் மதிப்பு 50 சதவீதம் குறைத்து 1 பில்லியன் டாலர் என்ற மதிப்பீட்டை வழங்கியுள்ளது எச்எஸ்பிசி.

மேலும் எச்எஸ்பிசி நிறுவனம் கூறுகையில், இந்திய இண்டர்நெட் சந்தையில் வளர்ச்சிக்கான சாத்தியங்கள் அதிகளவில் இருந்தாலும், வெற்றி குறைவுதான் என்று கூறியுள்ளது.

அப்படி எல்லாம் இல்லை..

அப்படி எல்லாம் இல்லை..

தற்போது இருக்கும் சூழ்நிலையில், நாங்கள் முதலீட்டை ஈர்க்கும் முடிவில் இல்லை, மேலும் எங்களது ஆஸ்தான முதலீட்டாளர்கள் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவை அளித்து வருகின்றனர். அதுமட்டும் அல்லாமல் நிறுவனம் தொடர்ந்து மிதமான வளர்ச்சியை அடைந்து வரும் இந்நிலையில், மதிப்பீடு குறைவு பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை எனச் சோமேட்டோ தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

இந்தியாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமாகத் திகழும் பிளிப்கார்ட் துவக்கத்தில் இருந்த அதீத முதலீடு, மிகக் குறைவான நேரத்தில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் எனச் சந்தையை ஆச்சரியப்படுத்தி வந்தது. இதனால் இந்திய சந்தையில் இந்நிறுவனம் தாறுமாறாக மதிப்பிடப்பட்டது.

சரிவு...

சரிவு...

ஆனால் கடந்த சில மாதங்களாக ஈகாமர்ஸ் சந்தை மற்றும் இணையதளச் சேவை நிறுவனங்களின் தாக்கம் மக்கள் மத்தியில் குறைந்து காணப்படுகிறது.

இதன் காரணமாக இத்துறை சார்ந்த நிறுவனங்கள் வர்த்தகத்திலும், வருவாயிலும் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது.

மோர்கன் ஸ்டான்லி

மோர்கன் ஸ்டான்லி

இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தக மற்றும் வருவாய் அளவுகளை ஆய்வு செய்து, மியூச்சுவல் ஃபண்ட் மேலாண்மை நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி பிளிப்கார்ட் நிறுவனங்கள் பங்குகள் மதிப்பை 27 சதவீதம் குறைத்தது.

இணைப்பு..

இணைப்பு..

டெலிவரி நிறுவனமான Roadrunnr, உணவு மற்றும் உணவகம் தேடல் நிறுவனமான டைனிஅவுல் நிறுவனத்துடன் இணைய உள்ளது.

இப்புதிய கூட்டணி சந்தையில் முன்னணி நிறுவனமான உள்ள ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ உடன் போட்டி போட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

விஜய்ய்ய் மல்லையா

விஜய்ய்ய் மல்லையா

எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zomato’s $1bn value slashed by half

HSBC's brokerage arm which has slashed the paper valuation of restaurant-discovery platform Zomato, while taking stock of the startup's publicly traded shareholder InfoEdge.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X