2 வருடத்தில் வரி ஏய்ப்புச் செய்யப்பட்ட 71,000 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியது மத்திய அரசு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசின் கடுமையான சட்ட திட்டங்கள் மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வரித்துறையினர் அறிவிக்கப்படாத வருமானம் மற்றும் வரி ஏய்ப்புச் செய்யப்பட்ட சுமார் 71,000 கோடி ரூபாய் பணத்தைக் கண்டுபிடித்துக் கைப்பற்றியுள்ளது.

மேம்படுத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையின் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் மட்டும் மறைமுக வரியின் கீழ் வரி ஏய்ப்புச் செய்யப்பட்ட 50,000 கோடி ரூபாய் மற்றும் அறிவிக்கப்படாத வருமானம் 21,000 கோடி ரூபாய் என மொத்தம் 71,000 கோடி ரூபாய் பணத்தை வரித் துறையினர் கைப்பற்றியுள்ளனர் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

2 வருடத்தில் வரி ஏய்ப்புச் செய்யப்பட்ட 71,000 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியது மத்திய அரசு..!

இந்த அறிவிக்கப்படாத வருமானம் மற்றும் வரி ஏய்ப்புச் செய்யப்பட்ட பணத்தை நாம் கருப்புப் பணமாக வருமான வரித்துறை பார்க்கிறது.

இக்காலகட்டத்தில் 3,963 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கமும் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த இரு வருடங்களை விடவும் 32 சதவீதம் அதிகம் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் வரித்துறையின் கடந்த 2 வருடத்தில் வரி நிலுவை, வரி ஏய்ப்பு தொடர்பான சுமார் 1,466 வழக்குகளைத் தொடுத்துள்ளது. இது கடந்த காலகட்டத்தில் இதன் எண்ணிக்கை 1,169 ஆக இருந்தது.

2 வருடத்தில் வரி ஏய்ப்புச் செய்யப்பட்ட 71,000 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியது மத்திய அரசு..!

இந்தியாவில் கருப்புப் பணம் ஒழிக்கும் முயற்சியும், அதற்காக அமைக்கப்பட்ட சட்டத்திட்டங்கள் அமலாக்கப்பட்ட கடுமையான முறையில் வருமான வரித்துறையின் இப்பிரச்சனையைக் கையாண்டு வருகின்றனர்.

இதன் மூலம் கடந்த 2 வருடத்தில் கைப்பற்றப்பட்ட 71,000 கோடி ரூபாய் இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt unearths ₹71,000 cr of undisclosed income in 2 years

Tax authorities have unearthed over ₹71,000 crore of undisclosed income and evaded taxes in the last two years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X