இன்போசிஸ் ஊழியர்களின் சம்பளம் உயரப் போகிறது? காரணம் விஷால் சிக்கா..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ், ஊழியர்கள் மற்றும் நிர்வாகத் தலைவர்களுக்கு மத்தியில் உள்ள வித்தியாசத்தைக் களையும் விதமாக நாராயணமூர்த்தி வகுத்த கொள்கைகளை உடைத்துச் சீஇஓ விஷால் சிக்காவிற்கு அதிகளவிலான சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு ஊழியர்களும் அதிகளவிலான சம்பளம் பெற உள்ளனர். எப்படி..?

விஷால் சிக்கா
 

விஷால் சிக்கா

இன்போசிஸ் நிறுவனத்தின் முதல் நிறுவனர் (Non-Founders) அல்லாத சீஇஓ விஷால் சிக்கா. 2 வருடத்திற்கு முன்பு மிகப்பெரிய வர்த்தகச் சரிவு மற்றும் ஊழியர்கள் வெளியேற்றம் எனப் பல பிரச்சனைகளைச் சந்தித்த இன்போசிஸ், விஷால் சிக்கா நியமனத்திற்குப் பிறகு, வர்த்தக வளர்ச்சியில் டிசிஎஸ் நிறுவனத்தை முந்தியுள்ளது.

வருவாய்..

வருவாய்..

2016ஆம் ஆண்டுக்கு முந்தைய 3 வருட காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனம் 5.6%, 11.5% மற்றும் 5.3% என்ற குறைந்த அளவிலேயே வருவாய் வளர்ச்சியை அடைந்தது. ஆனால் விஷால் சிக்கா நியமனத்திற்குப் பிறகு 2016ஆம் ஆண்டில் 9.1 % என்ற அளவிலான வருவாய் வளர்ச்சியை அடைந்துள்ளது.

சம்பளம் உயர்வு

சம்பளம் உயர்வு

இதனால் விஷால் சிக்காவின் சம்பளத்தை 7.08 மில்லியன் டாலரில் இருந்து 11 மில்லியனாக இன்போசிஸ் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் 2 வருட கால நீட்டிப்பும் விஷால் சிக்காவிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது நாராயணமூர்த்தி வகுத்த compassionate capitalism கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டு செயல் திறனுக்கு ஏற்ப ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

compassionate capitalism கொள்கை
 

compassionate capitalism கொள்கை

2012ஆம் ஆண்டில் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பாகுபாடு மற்றும் வித்தியாசம் இல்லாத வகையில், கீழ்மட்ட மற்றும் மேல்மட்ட ஊழியர்களின் 20-25 சதவீதம் சம்பளமே சீஇஓவின் சம்பளமாக இருக்கும் என நாராயணமூர்த்தித் தெரிவித்தார்.

ஆனால் தற்போது சிக்காவிற்கு அளிக்கப்பட்டுள்ள சம்பளம் செயல்திறன் அடிப்படையிலானது.

உயர் அதிகாரிகள்

உயர் அதிகாரிகள்

விஷால் சிக்காவிலன் சம்பளம் 11 மில்லியன் டாலராக உயர்ந்த நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர்கள் சந்தீப் டல்லானி, ரவி குமார், மோஹித் ஜோஷி ஆகியோரின் சம்பளம் உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் இவர்களின் சம்பளம் 2 மில்லியன் டாலருக்கு அதிகமாக உயர்ந்திருக்கும் எனத் தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் இந்நிறுவனத்தின் CXO மற்றும் COO ஆகியோரின் சம்பளமும் உயரும்.

பிற ஊழியர்கள்

பிற ஊழியர்கள்

இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் தலைவர்கள் அனைவரின் சம்பளமும் உயர்ந்துள்ள நிலையில், 2017ஆம் ஆண்டு ஊதிய உயர்வில் பிற ஊழியர்களின் சம்பள அளவும் சராசரி அளவுகளை விடவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vishal Sikka kicks in big salary spikes at Infosys

Infosys has entered a new era of remuneration for senior leadership after promoters hung up their boots to make way for a professional CEO. In doing so, the company has stepped out of the shadows of its founder N R Narayana Murthy's philosophy of compassionate capitalism which hailed the spirit of social equity.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X