அடுத்த 1,000 வருடத்திற்கு இந்தியாவில்தான் எங்க வியாபாரம்: ஆப்பிள் டிம் குக்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொபைல் மற்றும் கணினி தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டாலும், இதன் மிகப்பெரிய வர்த்தகச் சந்தை சீனா.

ஆனால் தற்போது சீனாவில் சியோமி, மோட்டோ, லெனோவோ போன்ற நிறுவனங்களால் ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருவாய் அதிகளவில் பாதித்துள்ளது.

இதன் காரணமாகப் புதிய சந்தையைத் தேடி வந்த ஆப்பிள் நிறுவனத்திற்குச் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவின் மீது தன் கவனத்தைத் திருப்பியுள்ளது.

அடுத்த 1,000 வருடத்திற்கு இந்தியாவில்தான் எங்க வியாபாரம்: ஆப்பிள் டிம் குக்..!

இந்தியாவை முக்கியச் சந்தையாகக் கொண்டு அதிகளவிலான முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், நாட்டில் விற்பனையை அதிகரிக்கவும் பல திட்டங்களையும் முடிவுகளையும் வகுத்து வருகிறார்.

இந்தியாவில் பெங்களூரு, ஹைதரெபாத் நகரங்களில் புதிய ஆப் சென்டர், அலுவலகங்களைத் திறந்து வைக்க இந்தியா வந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் சீஇஓ டிம் குக், பிரதமர் நரேந்திர மோடி முதல் ஷாருக்கான் வரை பல முக்கியப் புள்ளிகளைத் தொடர்ந்து சந்தித்து வருகிறார். மே 21ஆம் தேதி டெல்லியின் பிரதமர் மோடியை டிம் குக் சந்திக்கிறார்.

அடுத்த 1,000 வருடத்திற்கு இந்தியாவில்தான் எங்க வியாபாரம்: ஆப்பிள் டிம் குக்..!

இந்திய பயணம் குறித்து அவர் கூறுகையில், பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் செய்யப்பட்டது வெறும் துவக்கம் தான், இன்னும் பல திட்டங்கள் மற்றும் முதலீடுகளை இந்திய சந்தையில் செயல்படுத்த உள்ளோம் என டிம் குக் தெரிவித்தார்.

மேலும் பழைய அல்லது பயன்படுத்தப்பட்ட ஐபோன்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு மத்திய அரசின் கடுமையான எதிர்ப்புக் குறித்துக் கேட்டபோது, "இதுக்குறித்து அரசுடன் ஒரு முடிவிற்கு வந்துள்ளோம், அப்போது ஆட்டோமொபைல் துறையை எடுத்துக்கொண்டால் லெக்சஸ், மெர்சிடீஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. அதுபோல் சில உத்திரவாதங்கள் மற்றும் சில கட்டுப்பாடுகள் கொண்டு ஐபோன்களை இந்தியாவில் விற்பனை செய்யும் வகையில் புதிய திட்டத்தை ஒரு வகுத்து மத்திய அரசிடம் அனுமதி கோர உள்ளோம்" என டிம் குக் பதில் அளித்தார்.

அடுத்த 1,000 வருடத்திற்கு இந்தியாவில்தான் எங்க வியாபாரம்: ஆப்பிள் டிம் குக்..!

மேலும் இந்தியாவில் சில முக்கியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து மேம்படுத்தப்பட்ட சேவையை மக்களுக்கு அளிக்க உள்ளோம். ஏனென்றால் அடுத்த 1,000 வருடத்திற்கு இந்தியாதான் எங்களது மிகப்பெரிய வர்த்தகச் சந்தை எனக் கூறினார் டிம் குக்.

<strong><em>(பழைய ஐபோன்களை இறக்குமதி செய்ய ஆப்பிள் கோரிக்கை.. 2வது முறையாக மத்திய அரசு மறுப்பு..!)</em></strong>(பழைய ஐபோன்களை இறக்குமதி செய்ய ஆப்பிள் கோரிக்கை.. 2வது முறையாக மத்திய அரசு மறுப்பு..!)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

We are in India for the next thousand years, says Apple boss Tim Cook

Apple is looking at India as an investment destination, in addition to pushing the sales of its products in the country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X