"என்னை விட்டுவிடுங்கள், நான் அமெரிக்கா போறேன்".. ரகுராம் ராஜன் மோடிக்கு எழுதிய கடிதம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ரிசர்வ் வங்கியின் கவனரான ரகுராம் ராஜனின் 3 வருடப் பணிக்காலம் வருகிற செப்டம்பர் மாதம் முடிவடைகிறது.

பிரதமர் மோடி அனைவரின் எதிர்ப்புகளையும் தாண்டி அவரது பணிக்காலத்தை அடுத்த 3 வருடத்திற்கு நீட்டிப்படும் என எதிர்பார்த்த நிலையில் ரகுராம் ராஜன் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இக்கடிதத்தில் 3 வருடப் பணி முடிந்த உடன் என்னை ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதிவியில் இருந்தும், பணியில் இருந்தும் முழுமையாக விடுவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் எனக் கொல்கத்தா பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

ரகுராம் ராஜன்
 

ரகுராம் ராஜன்

நாட்டின் பொருளாதாரத்தைச் சரிவில் பாதையில் இருந்து நிலையான மற்றும் நீண்டகால முன்னேற்றத்திற்கு முக்கியப் படிகளை அமைத்த ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனின் 3 வருடப் பணிக்காலம் வருகிற செப்டம்பர் மாதம் முடிவடைகிறது.

மோடி- ராஜன்

மோடி- ராஜன்

ரகுராம் ராஜன் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பணியில் அமர்த்தப்பட்டாலும், பிதமர் மோடியுடன் சிறப்பான நட்பையும், நன்மதிப்பையும் பெற்றார் ராஜன். இதற்குக் காரணம் ராஜனின் இந்திய பொருளாதாரம் குறித்த தொலைநோக்குச் சிந்தனை.

ராஜனின் பணி நீட்டிப்பு குறித்து மோடி மிகவும் ஆர்வமுடன் இருந்தாலும், NDA அரசின் பல அமைச்சர்கள் ரகுராம் ராஜனின் 2வது பணிக்கால நீட்டிப்புக்கு எதிராக உள்ளனர். இதில் சுப்ரமணியன் சாமி தனி...

சுப்ரமணியன் சாமி

சுப்ரமணியன் சாமி

மத்திய அமைச்சர் சுப்ரமணியன் சாமி, ராஜனை பதவிவிட்டு விலக்க வேண்டும் என்பதில் உறுதியாக மட்டும் அல்லாமல் பல முறை வெளிப்படையாகவும் கூறினார்.

ரகுராம் ராஜன் ஆர்பிஐ கவர்னர் பதவிக்குத் தகுதியானவர் இல்லை. அவரை உடனடியாகப் பதவியில் இருந்து விலக்க வேண்டும் எனக் கூறினார்.

வாசகர் கருத்து
 

வாசகர் கருத்து

இதுகுறித்துத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் வாசகர்களிடம் கருத்துக் கேட்டபோது 78 சதவீதம் பேர் சு.சுவாமிக்கு எதிராக உள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

மேலும் கவர்னர் பதவி விலகல் பிறகு ராஜன் அமெரிக்கா சென்று இந்திய பொருளாதாரம் குறித்துத் தனது ஆய்வைத் தொடர உள்ளதாகத் திட்டமிட்டுள்ளார் எனவும் இந்தக் கொல்கத்தா பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

நிதியமைச்சகம்

நிதியமைச்சகம்

ரகுராம் ராஜனின் கறார் நடவடிக்கை மற்றும் ஒளிவு மறைவு இல்லாத நேரடி கருத்துகள் நிதியமைச்சகத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும் ராஜனுக்கும் பல முறை கருத்து வேறுபாடு வந்துள்ளது.

இந்நிலையில் ராஜனின் பணி நீட்டிப்பு குறித்து இதுவரை நிதியமைச்சகம் எவ்விதமான பேச்சுவார்த்தையும் செய்யவில்லை என இத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமைதி காத்த ராஜன்

அமைதி காத்த ராஜன்

இதுவரை ராஜன் குறித்துப் பல்வேறு விதமான பல்வேறு தரப்பினர் கருத்தை தெரிவித்த போதிலும் எதற்குச் செவிசாய்க்காமல் அமைதி காத்த ராஜன் தற்போது இந்தியாவை விட்டு வெளியேறத் தயாராகிவிட்டார்.

ஏற்கனவே தனது குடும்பம் அமெரிக்கா சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

ராஜன் பதவியேற்றிய பின் ரூபாய் மதிப்புச் சரிவு குறித்து முக்கியப் பணிகளைச் செய்தார். இதன் மூலம் ரூபாய் மதிப்பு சிறிது காலம் வலிமை அடைந்தாலும், மத்திய நிதியமைச்சகத்தின் பல்வேறு நடவடிக்கை மற்றும் கொள்கை மாற்றத்தின் மூலம் மீண்டும் சரிய துவங்கியது.

வங்கி வராக்கடன்

வங்கி வராக்கடன்

மேலும் முதல் முறையாக ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியாவில் உள்ள வணிக வங்கிகள் அனைத்தும் தங்களது வரவு கணக்குகளைச் சுத்தகம் செய்யக் கட்டளையிட்டார்.

இதன் பின்னரே இந்திய வங்கிகளில் புதைந்துள்ள பல பில்லியன் டாலர் மதிப்பிலான வராக் கடன் வெளிச்சத்திற்கு வந்தது. இதன் வெளிப்பாடே விஜய் மல்லையா, அலோக் இண்டஸ்ட்ரீஸ் போன்றவை.

டெல்லி முதல் எம்ஐடி வரை...

டெல்லி முதல் எம்ஐடி வரை...

53 வயதான ரகுராம் ராஜன் ஐஐடி டெல்லி, ஐஐஎம் அகமதாபாத், அமெரிக்காவின் மிகப்பெரிய கல்வி நிறுவனமாக விளங்கும் எம்ஐடி கல்லூரியில் பிஎச்.டி பட்டங்களைப் பெற்றுள்ளார்.

பதவிகள்

பதவிகள்

ரிசர்வ் வங்கியின் 23வது கவர்னராகப் பதவியேற்கும் முன் ராஜன் நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தார். இதன் முன் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுநராக இருந்தார்.

மேலும் 2008-2009ஆம் ஆண்டுச் சர்வதேச பொருளாதார நெருக்கடி குறித்து 2005 ஆண்டே எச்சரிக்கை விடுத்தார்.

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

உங்கள் மின்னஞ்சலைத் தேடி வரும் வர்த்தக உலகம்: தமிழ்குட்ரிட்டன்ஸ் தளத்தின் நியூஸ்லெட்டர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is Raghuram Rajan packing his bags?

Will the Reserve Bank of India have a new Governor in September? It may well, going by a report in the Kolkata-based Ananda Bazar Patrika, which claimed that Raghuram Rajan had written to Prime Minister Narendra Modi, asking to be relieved when his three-year term ends.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more