விமானப் போக்குவரத்துக் கொள்கையில் புதிய மாற்றம்: யாருக்கு லாபம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் விமானப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தவும், மக்களுக்கு எளிமையான மற்றும் மலிவானதாகக் கிடைக்க மத்திய அரசு பல முயற்சிகளைச் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதிதான் விமானப் போக்குவரத்துக் கொள்கையில் புதிய மாற்றங்கள்.

 

பல மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்ட இந்தப் புதிய விமானப் போக்குவரத்துக் கொள்கையில் மாற்றங்களுக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

சரி இந்தப் புதிய கொள்கையின் மூலம் யாருக்கு என்ன லாபம் என்பதைப் பற்றிய நாம் இப்போது பார்ப்போம்.

விமானப் போக்குவரத்துக் கொள்கை

விமானப் போக்குவரத்துக் கொள்கை

இந்தியாவில் விமானப் போக்குவரத்து புதிய உச்சத்தை அடைந்து வரும் இத்தகைய தருணத்தில், நடைமுறைக்கு ஏற்றவாறு கொள்கையை மாற்றி அமைப்பதே உத்தமம்.

இந்நிலையில் 10 வருடத்திற்கு மேலாக எவ்விதமான மாற்றம் செய்யாமல் அப்படியே இருக்கும் விமானப் போக்குவரத்துக் கொள்கையில் மத்திய அரசு மாற்றியுள்ளது இத்துறை வளர்ச்சிக்கு புதிய அடித்தளமாக அமையும்.

 

5/20 விதி நீக்கம்

5/20 விதி நீக்கம்

இந்தியாவில் ஏந்தொரு விமான நிறுவனமாக இருந்தாலும் சரி 5 வருடம் உள்ளாட்டு விமானச் சேவை அளித்த பின்பே வெளிநாடுகளுக்கு விமானச் சேவை அளிக்க அனுமதிக்கப்படும். இதனுடன் இந்த 5 வருடத்திற்குள் சுமார் 20 விமானங்களைச் சேவையில் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

புதிய மாற்றம்
 

புதிய மாற்றம்

இப்புதிய விமானப் போக்குவரத்துக் கொள்கை மாற்றத்தில் 20 விமானங்களை உள்நாட்டுச் சேவையைப் பயன்படுத்தி இருந்தாலே போதும் வெளிநாடுகளுக்குச் சேவை அளிக்கத் துவங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

5 வருடம் சேவை அளித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

 

யாருக்கு லாபம்..

யாருக்கு லாபம்..

இந்த 5/20 விதி மாற்றத்தால் இந்தியா சந்தையில் புதிதாக இறங்கியுள்ள விஸ்தாரா மற்றும் ஏர்ஏசியா உள்நாட்டில் 20 விமானங்களைச் சேவையில் உட்படுத்திவிட்டு வெளிநாடுகளுக்குச் சேவை அளிக்கலாம்.

விமானக் கட்டணம்

விமானக் கட்டணம்

மேலும் விமானப் போக்குவரத்தில் பயணிகள் எண்ணிக்கை உயர்த்துவதற்காக 30 நிமிடத்திற்குக் குறைவாக உள்ள விமானப் பயணத்திற்கு 1,200 ரூபாய், 1 மணிநேரம் பயணத்திற்கு 2,500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே விமானப் போக்குவரத்துக் கொள்கை மாற்றத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

 

யாருக்கு லாபம்..

யாருக்கு லாபம்..

விமானப் போக்குவரத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலக்க எண்களில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இப்புதிய கட்டண குறைப்பின் மூலம், உதாரணமாகச் சென்னையில் இருந்து மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, பெங்களூரு போன்ற குறைந்த தொலைவு கொண்ட வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் அலைமோத வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இது இந்தியா முழுக்க நிகழும்போது அடுத்த ஆண்டில் பயணிக்க எண்ணிக்கை கணிசம் 30 சதவீத அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

80 சதவீத நஷ்டம்

80 சதவீத நஷ்டம்

சிறு நகரங்களுக்குச் சேவை அளிப்பதில் ஏற்படும் நஷ்டத்தில் 80 சதவீதம் அரசு ஏற்கும் திட்டமும் விமானப் போக்குவரத்துக் கொள்கை மாற்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

செஸ் வரி

செஸ் வரி

உள்நாட்டு விமானச் சேவை அளிக்கும் நிறுவனங்களும் மத்திய அரசின் செஸ் வரிகளைச் செலுத்த வேண்டும். இதனைக்கொண்டு தான் மானியம் பெறும் விமானங்களுக்கு நிதியுதவி அளிக்க முடியும் எனவும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோ கஜபதி ராஜூ தெரிவித்துள்ளார்.

50 கோடி டிக்கெட் விற்பனை

50 கோடி டிக்கெட் விற்பனை

2022ஆம் ஆண்டுக்குள் 30 விமான டிக்கெட்கள், 2027ஆம் ஆண்டுக்குள் 50 டிக்கெட்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்துள்ளது விமானப் போக்குவரத்துத் துறை.

பங்குகள் உயர்வு..

பங்குகள் உயர்வு..

விமானப் போக்குவரத்துக் கொள்கையில் செய்யப்பட்ட புதிய மாற்றங்கள் மூலம் இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் விமான நிறுவனப் பங்குகள் உயர்ந்துள்ளது.

இன்டர்குளோப் ஏவியேஷன் 18.75 சதவீதம்
ஸ்பைஸ்ஜெட் லிமிடெட் 2.25 சதவீதம்
ஜெட் ஏர்வேஸ் லிமிடெட் 1.20 சதவீதம்

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

சுடச்சுட வர்த்தகச் செய்திகள் தினமும் உங்களுக்காக..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cabinet clears National Civil Aviation Policy

In a landmark move, the Union government on Wednesday approved a plan to replace a decade-old rule for allowing new domestic airlines set up in India to fly on international routes.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X