ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளப் புதிய யுத்தி.. 'இன்போசிஸ்' நிறுவனத்தின் 'காம்பஸ்'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், கடந்த 2 வருடமாகக் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் விஷால் சிக்கா நியமனத்திற்குப் பின் பல முக்கிய மாற்றங்களைச் சந்தித்து வருவதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இந்த மாற்றங்கள் நிறுவன வளர்ச்சிகளுக்கு மட்டும் அல்லாமல் ஊழியர்கள் நலனையும் காக்கும் வகையிலும் சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒன்று தான் காம்பஸ் (Compass) தளம்.

காம்பஸ் தளம்

காம்பஸ் தளம்

பொதுவாக ஊழியர்கள் தனது வேலையில் வளர்ச்சி, படிப்பினை மற்றும் புதிய தொடர்புகளுக்காக ஒரு நிறுவனத்தை விட்டு வேறு நிறுவனத்தில் பணியில் சேர்கின்றனர்.

இந்நிலையில் ஊழியர்களை இன்போசிஸ் நிறுவனத்தில் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் அனைத்து விதமான சேவைகளையும் வாய்ப்புகளைக் காம்பஸ் (Compass) என்னும் உட்புற சேவைத் தளம் தருகிறது.

 

லாபம்

லாபம்

இது இன்போசிஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம். இதனால் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றம் அதிகளவில் குறைகிறது. இதவே நிறுவனத்தில் நிலையான வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக அமையும் என்பதில் எவ்விதமான மாற்றமுமில்லை.

சேவைகளும்.. வாய்ப்புகளும்..
 

சேவைகளும்.. வாய்ப்புகளும்..

காம்பஸ் உட்புற சேவைத் தளத்தில் மூலம் ஒரு ஊழியர்கள் வெளி நிறுவனத்தில் வேலை தேடாமல், இன்போசிஸ் நிறுவனத்திற்குள்ளேயே தனது தகுதி ஏற்ப இருக்கும் வாய்ப்புகளைத் தேடிக்கொள்ளலாம்.

குறிப்பாக ஒரு ஊழியர்கள் புதிய டெக்னாலஜியை படித்தால் இதற்கான வாய்ப்புகளை நிறுவனம் மாறாமல் தனது வேலை மற்றும் பதிவையை மாற்றிக்கொள்ளலாம்.

ஊழியர்கள் நலன்

ஊழியர்கள் நலன்

விஷால் நியமனத்திற்குப் பிற இன்போசிஸ் தனது ஊழியர்கள் நலனில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்தி வருகிறது. இதில் முக்கியமான ஊழியர்கள் நலன் பேணுவதில் அதிகளவிலான தொழில்நுட்ப உதவியை நாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தனது மனித வள பிரிவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கு முயற்சி செய்து வருகிறது.

ரிச்சார்ட் லோபோ

ரிச்சார்ட் லோபோ

தனது வேலை அல்லது பதவியை மற்றவோ, உயர்த்தவோ விரும்பினால் ஊழியர்கள் காம்பஸ் தளத்தில் லாக் இன் செய்து தனது தகுதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும் ஊழியர்கள் தங்களது தொழில் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் ஒரு Profile தயார் செய்யவும் இத்தளம் உதவி செய்கிறது. என இன்போசிஸ் நிறுவனத்தின் மனித வளப்பிரிவின் தலைவர் மற்றும் நிறுவனத்தில் உயர் துணை தலைவர் ரிச்சார்ட் லோபோ தெரிவித்தார்.

6,000 கோரிக்கை

6,000 கோரிக்கை

இச்சேவை அறிமுகம் செய்த 3 மணிநேரத்தில் இன்போசிஸ் ஊழியர்களால் 6,000 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டம் தற்போது இந்திய கிளைகளில் மட்டும் தான் இயங்கி வருகிறது. அடுத்தச் சில மாதங்களில் இத்திட்டம் பிற நாடுகளிலும் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் லோபோ தெரிவித்துள்ளார்.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

இதேபோன்ற திட்ட வடிவங்கள் மற்ற நிறுவனங்களில் ஏதேனும் உள்ளதா..? இருந்தால் நிறுவனத்தின் பெயர் மற்றும் வடிவத்தைக் குறித்து உங்களது கருத்துக்களைப் பதிவிடுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys internal platform 'Compass' to help employees change job profiles

Employees at Infosys looking for a change in job profile will now be able to make use of a designated internal platform in order to explore opportunities.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X