ஏர்டெல் நிறுவனத்தின் 'கபாலி' பேக்கேஜ்.. மக்கள் 'மகிழ்ச்சி'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உலக முழுவதும் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் கபாலி திரைப்படத்தை வைத்து இந்தியாவில் பல நிறுவனங்கள் பல விதமாக வியாபாரம் செய்து வருகிறது.

ஏர்ஏசியா செய்த விளம்பரத்தில் இருந்து இன்னும் மீளாத ரசிகர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் 'கபாலி' பேக்கேஜ் அறிவித்துள்ளது.

ஏர்ஏசியா

ஏர்ஏசியா

சர்வதேச சந்தையில் இருக்கும் ஏர்ஏசியா நிறுவனம் தனது வரலாற்றில் ஹாபிட் திரைப்படத்திற்குப் பின் தனது விமானங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலி திரைப்படப் போஸ்டர் தான். என்னடா வர்த்தகச் செய்திகள் பக்கத்தில் சினிமா செய்திகள் என்று யோசிக்காதீர்கள்.

இங்கும் நாம் பேசப்படும் அனைத்து விடயங்களும் வியாபாரம் தான். சரி வாங்க நாம ஏர்டெல் பஞ்சாயத்துக்குப் போவோம்.

 

விளம்பரம் வர்த்தகம்..

விளம்பரம் வர்த்தகம்..

ஒரு பன்னாட்டு நிறுவனம் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலி என்னும் தமிழ் படத்திற்கு அவ்வளவு பெரிய விளம்பரம் அளித்திருக்கிறது என்றால் இதற்குக் காரணம் தென் இந்தியாவில் இந்நிறுவனம் புதிதாக வகுக்குப்பட்டுள்ள வியாபார திட்டத்தின் துவக்கம் என்பதை நாம் உணர வேண்டும்.

ஏர்ஏசியா நிறுவனம் தனது விமானத்தில் கபாலி போஸ்டர் ஒட்டியத்து மட்டும் அல்லாமல் புதிய சலுகை விலை திட்டத்தையும் அறிவித்துள்ளது. இதனுடன் முதல் நாள் படத்திற்கான டிக்கெட்டும் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதாக உறுதியளித்துள்ளது.

இந்த வரிசையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் இணைந்துள்ளது.

 

'கபாலி' பேக்கேஜ்

'கபாலி' பேக்கேஜ்

இந்தியாவில் குறிப்பாகத் தென் இந்தியாவில் ரஜினிகாந்த் ரசிகர்கள் கூட்டம் மிகவும் அதிகம், இதே வேளையில் தென் இந்தியாவில் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவு.

இந்த வித்தியாசத்தைச் சீர்ப்படுத்த ஏர்டெல் நிறுவனம் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் 'கபாலி' பேக்கேஜ்.

 

தென் இந்திய சந்தை

தென் இந்திய சந்தை

ஜூலை 22 இந்திய உட்படப் பல உலக நாடுகளில் 5,000 திரையரங்குகளில் கபாலி படம் வெளியாக உள்ள நிலையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கபாலி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களைக் கவர ஏர்டெல் நிறுவனம் பல முக்கிய அம்சங்களுடன் 'கபாலி' பேக்கேஜ் அறிமுகம் செய்துள்ளது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இந்தக் கபாலி' பேக்கேஜ் இல் அன்லிமிடெட் 2ஜி டேட்டா, கபாலி காலர் டியூன், கபாலி பட போஸ்டர் இருக்கும் கவரில் சிம்கார்டு என ஏர்டெல் நிறுவனம் ரசிகர்களைக் கவர்வதில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்தியுள்ளது.

நேரடி வாழ்த்து

நேரடி வாழ்த்து

மேலும் இந்தச் சிம்கார்டு வாங்குவோர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ நேரடியாக வாழ்த்தும் எஸ்எம்எஸ் சேனல் வசதிகளை ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.

கபாலி வேன்

கபாலி வேன்

இதுமட்டும் அல்லாமல் ஏர்டெல் நிறுவனம் கபாலி(ஏர்டெல்) பட விளம்பரத்திற்காக 3டி ஹோலோகிராபிக் ஏர்டெல் கபாலி வேன் தமிழ்நாடு முழுவதும் இயக்க உள்ளது.

இந்த வேனில் கபாலி படத்தின் டீசர், டிரைலர், பாடல் என் அனைத்து ஒளி ஒலி பரப்பப்படும்.

 

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

கபாலி பேக்கேஜ்-இல் வாடிக்கையாளர்களுக்கு 5 ரூபாய் ரீசார்ஜ் செய்வதன் மூலம் ஒரு மணிநேரத்திற்கு அனிலிமிடெட் டேட்டா வழங்க ஏர்டெல் முடிவு செய்துள்ளது. இதனுடன் 2 கபாலி திரைப்படத்தின் புகைப்படமும்   வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூன் 22

ஜூன் 22

வருகிற 22ஆம் தேதி பா.ரஞ்சித் இயக்கியுள்ள கபாலி திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் 5000 திரையரங்களில் வெளியாகிறது. செப்டம்பர் மாதத்தில் கபாலி சீனா, தைவான், ஜப்பான் மற்றும் மலாய் மொழிகளிலும் பேசப்படும் எனத் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel too joins Kabali bandwagon, offers special packages

Rajinikanth fans using Airtel connection will get a treat from the mobile service provider which is announcing special packages to promote the mega budget movie Kabali.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X