விமான பயணிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி.. டிக்கெட் ரத்து விதிகளில் புதிய மாற்றம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விமான பயணிகளுக்கு டிக்கெட் ரத்து செய்யப்படும் போது விமான நிறுவனங்கள் பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணங்கள் பிடிக்கப்படுவதை தடுக்க வரும் ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கிறது.

விமான நிறுவனங்கள் ரத்து செய்வதற்கான கட்டணம், அடிப்படை கட்டணம் மற்றும் எரிபொருள் கட்டணம் ஆகிய இரண்டையும் விட அதிகமாக உள்ளது என்று விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

 திருப்பி வழங்க வேண்டிய கட்டணங்கள்

திருப்பி வழங்க வேண்டிய கட்டணங்கள்

புதிய விதிகள் அமலுக்கு வந்தால் பயணிகள் டிக்கெட் ரத்து செய்யும் போது சட்டப்பூர்வ வரி மற்றும் பயனர் விரிவாக்கக் கட்டணம் (SDF), விமான நிலைய வளர்ச்சி கட்டணம், பயணிகள் சேவை கட்டணம் (வரி ஆகியவை) என அனைத்தையும் விமான நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

கூடுதல் வெளிப்படைத் தன்மை

கூடுதல் வெளிப்படைத் தன்மை

கூடுதல் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய டிக்கெட் ரத்து செய்யும்போது, ரத்துக் கட்டணத்தை திருப்பி அளிப்பது மட்டும் இல்லாமல் பிரேக்கப் விவரங்களை டிக்கெட்டிலும், இணையதளத்திலும் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

விமான நிறுவன கிரெடிட்

விமான நிறுவன கிரெடிட்

திருப்பி அளிக்கும் கட்டணத்தை விமான நிறுவன கிரெடிட்டில் இருக்க வேண்டுமா அல்லது கணக்கில் சேர வேண்டுமா என்பதைப் பயணிகள் தேர்வுசெய்து கொள்ளலாம்.

பெயர்களில் ஏற்படும் எழுத்துப் பிழைகள்

பெயர்களில் ஏற்படும் எழுத்துப் பிழைகள்

டிக்கெட் புக்கிங் செய்யப்படும் போது பயணிகளின் பெயர்களில் ஏற்படும் எழுத்துப் பிழைகளைத் திருத்த கட்டணங்கள் ஏதும் வசுலிக்க கூடாது.

டிராவல் ஏஜெண்ட்கள்

டிராவல் ஏஜெண்ட்கள்

டிராவல் ஏஜெண்ட்கள் மூலமாக புக் செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது, விமான நிறுவனங்களே அதற்கான பொறுப்பு.

ஒரு வேலை டிராவல் ஏஜெண்ட் விமான நிறுவனத்தின் முகவராக இருந்தால், விமான நிறுவனம் 30 வேலை நாட்களுக்குள் தொகை திருப்பி அளிக்க வேண்டும்.

வெளிநாட்டு விமான சேவைகள்

வெளிநாட்டு விமான சேவைகள்

இந்தியாவிற்கு வருகின்ற வெளிநாட்டு விமான சேவையாக இருந்தால் பணம் திருப்பி அளிக்கும் விதி, அந்நாட்டு விமான போக்குவரதுத் துறையின் கட்டுபாட்டின் கீழ் வழங்க வேண்டும் என்றும் விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Good News For Flyers-Pay Less For Ticket Cancellation

Good News For Flyers-Pay Less For Ticket Cancellation
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X