'இன்போசிஸ்': லாபத்தில் 4.5 சதவீத சரிவு.. பங்குச்சந்தையில் 'ரத்தகளறி'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்திய மென்பொருள் ஏற்றுமதி சந்தையில் முதல் இடத்திற்காக டிசிஎஸ் நிறுவனத்திடம் தொடர்ந்து போட்டி போட்டு வரும் இன்போசிஸ் நிறுவனம் 2016ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.

சந்தைக் கணிப்புகளைத் தாண்டி இன்போசிஸ் லாபத்தை அடையும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி கணிப்புகள் தற்போது உறுதியாகியுள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் லாப அளவுகள் 4.5 சதவீதம் வரை குறைந்துள்ளது. வருவாய் அளவும் சந்தை கணிப்புகளை விடவும் குறைவான நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லாபம்

லாபம்

ஏப்ரல்-ஜூன் வரையிலான காலகட்டத்தில் விஷால் சிக்கா தலைமையிலான இன்போசிஸ் நிறுவனம் லாபத்தில் 4.5 சதவீதம் சரிந்து 3,436 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

இந்நிறுவனத்தின் அளவுகள் இன்போசிஸ் பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. இதன் எதிரொலியாக இந்நிறுவனத்தின் பங்குகள் 10 சதவீதம் வரை சரிந்துள்ளது.

 

வருவாய்

வருவாய்

இதே காலகட்டத்தில் இதன் வருவாய் 1.4 சதவீதம் குறைந்து 16,782 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருவாய் 29,000 கோடி ரூபாய்.

டாலர் வருவாய்

டாலர் வருவாய்

கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் இன்போசிஸ் நிறுவனத்தின் டாலர் வருவாய் அளவுகள் 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது அமெரிக்க மற்றும் பன்னாட்டு சந்தை வர்த்தகத்திற்குச் சாதகமான செய்தியாகும். கடந்த சில காலாண்டுகளை ஒப்பிடும்போது இந்நிறுவனத்தின் டாலர் வருவாய் அளவுகள் 1.7 சதவீதம் என்ற நிலையான வளர்ச்சியை அடைந்து வருகிறது.

வருத்தமான செய்தி

வருத்தமான செய்தி

ஏற்கனவே இன்போசிஸ் நிர்வாகத்தில் பல மாற்றங்களைச் சந்தித்து வருவது முதலீட்டாளர்களுக்கு வருத்தமாக இருந்தது. வெள்ளிக்கிழமை அறிவித்த காலாண்டு முடிவுகளில் லாபம் மற்றும் வருவாய் கடுமையான சரிவைச் சந்தித்தது முதலீட்டாளர்களுக்கு இன்போசிஸ் மீதான நம்பிக்கை இழந்துள்ளனர்.

இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகம் துவங்கி 3 மணிநேரத்தில் 10 சதவீதம் வரை சரிந்தது.

 

 செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

இந்நிறுவனத்தின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் இந்த MANA பிரிவில் சில மாதங்கள் முன்பே விஷால் சிக்காவின் நேரடி தலையீட்டின் பெயரில் இப்பிரிவின் ஐடி இன்ஃபரா தலைவராகச் சாம்சன் டேவிட் நியமிக்கப்பட்டார்.

காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

சந்தையில் முதலீட்டாளர்கள், சக போட்டி நிறுவனங்கள் அனைத்தும் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் இந்நேரத்தில் சாம்சன் டேவிடின் ராஜினாமா MANA பிரிவைத் தாண்டி இந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளைப் பாதித்துள்ளது.

5 பெரும் தலைகள்

5 பெரும் தலைகள்

விஷால் சிக்கா நியமனத்திற்குப் பின் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் 5வது பெரும் தலை சாம்சன் டேவிட். இதற்கு முன் இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி ராஜிவ் பன்சால், தற்போதைய எல்&டி இன்போடெக் சீஇஓ சஞ்சய் ஜவோநா, இன்போசிஸ் பிபிஓ தலைவர் கெளதம் தாக்கர், யெட்ஜ்வர்வ் நிறுவனத்தின் தலைவர் மைக்கில் ரே ஆகியோர் கடந்த 2 வருடத்தில் இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

<strong>இன்போசிஸை சகித்துக்கொள்ள முடியாமல் வெளியேறிய 14 உயர் அதிகாரிகள்.. நாராயணா..!</strong>இன்போசிஸை சகித்துக்கொள்ள முடியாமல் வெளியேறிய 14 உயர் அதிகாரிகள்.. நாராயணா..!

 

சாம்சன் டேவிட்

சாம்சன் டேவிட்

இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் MANA பிரிவு மட்டும் அல்லாலமல், கிளவுட், இன்ஃபாரஸ்டக்சர் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பிரிவுகளின் ஆண்டு வருமானம் 1 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 பில்லியன் டாலர் என்பது உண்மையில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஆபத்து தான்.

 

டிசிஎஸ்

டிசிஎஸ்

என்.சந்திரசேகரன் தலைமை வகிக்கும் டிசிஎஸ் நிறுவனம் 2016ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சந்தைக் கணிப்புகளையும் தாண்டி 6,318 கோடி ரூபாய் லாபத்தை அடைந்துள்ளது. இது கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் 0.36 சதவீதம் குறைவாக இருந்தாலும், இதன் அளவு சந்தை கணிப்புகளை விட அதிகமாகும்.

வருவாய் உயர்வில் டிசிஎஸ்

வருவாய் உயர்வில் டிசிஎஸ்

2015ஆம் 4வது காலாண்டை ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் 3 சதவீதம் உயர்ந்து 29,305 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

டாலர் வருவாய் அளவுகளில் இதன் அளவு 3.7 சதவீதம் அதிகமாகும். ஏப்ரல் - ஜூன் மாத காலகட்டத்தில் டாலர் வருவாய் மதிப்பு 4,362 மில்லியன் டாலராக உள்ளது.

 

டிஜிட்டல் வருவாய்

டிஜிட்டல் வருவாய்

டிசிஎஸ் நிறுவனத்தின் 15.9 சதவீத வருவாய் இந்நிறுவனத்தின் டிஜிட்டல் வர்த்தகம் மூலம் கிடைத்துள்ளது. இப்பிரிவு சார்ந்த தொழில்நுட்பத்தில் சுமார் 1.65 லட்சம் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys Q1 profit falls 4.5%, cuts FY17 dollar revenue guidance

The quarter ended June 2016 while the bottomline was in-line. Profit in Q1 declined 4.5 percent sequentially to Rs 3,436 crore while revenue increased 1.4 percent to Rs 16,782 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X