சென்னை: இந்திய பொருளாதாரம் விவசாயத்ததை மட்டும் நம்பி இருந்த காலம் மாறி தற்போது அதிகளவில் தொழிற்துறையை நம்பியிருக்கிறது. இப்படி இருக்குபோது பொருளாதாரம் என்கிற சக்கரம் பெரிய பெரிய தொழிற்துறையே நம்பி இருக்கிறது.
இத்தகைய பெரிய நிறுவனங்களின் ஆதிக்கம் இந்திய வர்த்தக சந்தையிலும் மட்டும் அல்லாமல் உலகளவில் உள்ளது நாம் அறிந்த ஒன்று, இந்தியாவில் தொழிற்துறை வளர்ந்த பின்னரே உலக பொருளாதார சந்தையில் இந்தியா முக்கியமான இடங்களை பிடித்தது. இதற்கு முக்கிய காரணம் வல்லரசு நாடுகளும் விவாசயத்தை விட தொழிற்துறையை முக்கியமானதாக கொண்டு இயங்கியதே இந்தியாவில் ஏற்பட்ட மாற்றத்திற்கு முக்கியகாரனம்.
இந்த மாற்றத்தில் பங்குபெற்றவர்களே இந்திய வர்த்தக சந்தையின் அடுத்த சூப்பர்ஸ்டார்.

சூப்பர்ஸ்டார்
பெரிய நிறுவனங்களின் தலைமை அனைத்தும் தற்போது 60 வயதைத் தொட்டு விட்டனர், தனது வர்த்தகச் சாம்ராஜியத்தையும், வியாபார தந்திரத்தையும் தனது வாரிசுகளுக்குக் கற்றுக்கொடுத்தும் தாரை வார்த்தும் வருகின்றனர்.
சரியான கணக்கிட்டால் இவர்கள் தான் இந்திய வர்த்தக சந்தையின் அடுத்த சூப்பர்ஸ்டார். சினிமா துறையில் நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்துவதை போல வர்த்தக சந்தையில் சில சூப்பர்ஸ்டார்கள் உள்ளனர். சொல்லப்போனால் இவர்கள் சின்ன சூப்பர்ஸ்டார்.

50 வருடம்
இந்நிலையில் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் இந்தியாவில் வாரிசுகள் தலைமை வகிக்கும் முக்கிய நிறுவனங்களை மட்டும் அல்லாமல் அடுத்த 50 வருட வர்த்தக சந்தையை ஆட்டிப்படைக்கும் முக்கிய தலைகளை பட்டியலிட்டுள்ளது.

சித்தார்த் மல்லையா
தான் வைத்திருக்கும் நிதி வளத்திற்குப் பொறுப்பேற்கும் வகையில் தன்னுடைய மகன் சித்தார்த் மல்லையாவை இளம் வயதிலிருந்து தயார்படுத்தி வந்திருக்கிறார் விஜய் மல்லையா. பள்ளி படிப்பை முடித்த உடன் யூபி குரூப் ஹோல்டிங் கம்பெனி, யுனைடெட் பிரெவெரிஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்-ற்கு இயக்குநராக நியமிக்கப்பட்டார் சித்தார்த் மல்லையா. வெலிங்டன் கல்லூரி மற்றும் குயின் மேரி கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், ராயல் சேலஞ்சர்ஸ் ஆஃ பெங்களூர் ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் உரிமையாளராகவும் உள்ளார்.

அனன்யாஸ்ரீ பிர்லா
ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவராக 1995ஆம் ஆண்டு 28 வயதில் தலைவர் பதவியேற்ற குமார் மங்களம் பிர்லாவின் மகள் தனது 17ஆம் வயதிலேயே வர்த்தகச் சந்தையில் குதித்துவிட்டார்.
அனன்யாஸ்ரீ பிர்லா 41 பில்லியன் டாலர் குழுமத்தின் சேர மறுத்து, சவன்டார மைக்ரோபின் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தைத் துவங்கி கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களுக்குச் சிறு தொழில் செய்யக் கடன் உதவி செய்து வருகிறார்.

கவின் பார்தி மிட்டல்
நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் அவர்களின் மகன் கவின் பார்தி மிட்டல். 28 வயதான கவின் பார்தி மிட்டல் வியாபாரம் என்ற வியாதி தன் தந்தையிடம் இருந்து ஒட்டிக்கொண்டது.
20 வயதில் கவில் ஆஃப்ஸ்பார்க் என்னும் மொபைல் ஆப்-களை உருவாக்கும் நிறுவனத்தை நிறுவினார், இதன் பின் 2012ஆம் ஆண்டு ஹைக் மெசென்ஜர் என்னும் குறுஞ்செய்தி அனுப்பும் மொபைல் ஆஃப் அறிமுகம் செய்து வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு இந்தியா சந்தையில் மிகப்பெரிய போட்டியை கொடுத்தார்.
தற்போது கவின் தலைமையிலான நிறுவனத்தில் பார்தி ஏர்டெல் உட்படச் சாப்ட்பேங்க், டைக்ர் குளோபல் போன்ற பல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது.

ரோஷினி நாடார்
எச்.சி.எல் நிறுவனத்தின் உரிமையாளரான ஷவ் நாடார் அவர்களின் ஒரே மகளான ரோஷினி நாடார் எச்.சி.எல் கார்ப்ரேஷன், எச்.சி.எல் ஹெல்த்கேர் நிறுவனர் மற்றும் சிஇஓவாகப் பதவி வகிக்கிறார்.

ரிசாத் பிரேம்ஜி
விப்ரோ நிறுவனத்தின் தலைவரான ஆசிம் பிரேம்ஜியின் மகனான ரிசாத், விப்ரோ என்டர்பிரைசஸின் போர்டு உறுப்பினராகவும், முதன்மை திட்ட அலுவலராகவும் உள்ளார்.
அமெரிக்காவிலுள்ள வேஸ்லேயான் பல்கலைக்கழத்திலிருந்த பி.ஏ.பொருளாதாரப் படிப்பையும், ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூலிலிருந்து எம்.பி.ஏ பட்டத்தையும் மற்றும் இலண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் ஒரு வருடப் படிப்பையும் முடித்துள்ள இவர், விப்ரோ நிறுவனத்தில் 2007-ம் ஆண்டுச் சேர்ந்தார். வங்கி தொடர்பான நிதி சேவைகள் பிரிவின் சிறப்புத் திட்டங்களுக்கான வியாபாரத் தலைவராக இவர் இருந்தார்.

ஈஷா அம்பானி
ஈஷா அம்பானி சவுத் ஆசியன் ஸ்டெடீஸ் மற்றும் உளவியல் துறையில் அமெரிக்காவின் யேல் பல்கலைக்களகத்தில் பட்டம் பெற்றுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தில் மிகவும் முக்கியப் பொறுப்பில் அமர இருக்கும் இவருக்குச் சில முக்கியப் பயிற்சிகள் தேவையின் காரணமாக மெக்கென்சி நிறுவன பணியில் சேர்ந்தார்.
இதன் பின் தற்போது ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவன வர்த்தகத்தைத் தலைமை விகித்து வருகிறார்.

அதார் சைரஸ் பூன்வாலா
ஆசியாவின் மிகப்பெரிய தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் பார்மா நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூன்வாலா-வின் மகள் அதார் சைரஸ் பூன்வாலா.
அடுத்த 7 வருடத்தில் சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் வர்த்தகத்தை 140 நாடுகளுக்கும் அதிகமான சந்தைகளில் வர்த்தகம் செய்து வருமானத்தை 3 மடங்கு அதாவது 1.8 பில்லியன் டாலர் வரையில் உயர்த்தும் திட்டத்துடன் நிறுவன வர்த்தகத்தில் குதித்துள்ளார்.

அலோக் சங்வி
நாட்டின் 2வது மிகப்பெரிய பணக்காரர் திலீப் சங்வி அவர்களின் மூத்த மகன் அலோக் சங்வி. மீடியா பக்கம் தலைகாட்ட தயங்கும் இவர் மிச்சிகன் பல்கலைகழத்தில் மாலிக்குலர் பயோலஜி துறையில் பட்டம் பெற்றார்.
தனது தந்தையைப் போலவே வியாபாரத்திலும் வர்த்தகத்திலும் ஆர்வம் கொண்ட அலோக் சங்வி பிவி பவர்டெர் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தைத் துவங்கினார். இந்நிறுவனம் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா பகுதிகளில் சோலார் பேணல்களை அமைக்கும் வர்த்தகத்தைச் செய்து வருகிறது.
தற்போது அலோக் சங்வி சன் பார்மா நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகத்தைக் கவனித்து வருகிறார்.

ஆனந்த் பிராமல்
நாட்டின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான பிராமல் நிறுவனத்தின் தலைவர் அஜய் பிராமல் அவர்களின் மகன் ஆனந்தி பிராமல் 2011ஆம் ஆண்டுப் பிராமல் குழுமத்தில் இணைந்தார்.
ஆனால் சிறிய மாற்றம். 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் சேராமல் இக்குழுமத்தின் கீழ் ரியல் எஸ்டேட் பிரிவில் பிராமல் ரியாலிடி என்னும் நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.

ரிவான்ட் ருயா
எஸ்ஸார் நிறுவனத்தின் துணைத்தலைவரான ரவி ருயாவின் கடைசி மகன் என்ற தகுதியைப் பெற்றிருக்கும் ரிவான்ட், இந்தக் குழுமத்தை டெலிகாம் துறையில் வழிநடத்திச் செல்பவராக உள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சில்லறை வணிகச் சங்கிலி நிறுவனமாகத் தி மொபைல் ஸ்டோர் இவருடைய உருவாக்கம் தான். 2005-ம் ஆண்டின் நடுவில் எஸ்ஸார் குழுமத்தில் சேர்ந்த ரிவான்ட், முன்னதாக அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள பென்டெலி கல்லூரியில் வணிக மேலாண்மை படிப்பையும் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிப்பையும் முடித்திருந்தார்.

ஆகாஷ் அம்பானி
இந்தியாவின் டாப் பணக்காரர் மற்றும் உலகின் முதல் 50 கோடீஸ்வரர்களில் ஒருவர் என்று புகழ் பெற்றுள்ள முகேஷ் அம்பானி, தன்னுடைய மூத்த மகன் ஆகாஷ் அம்பானியை, தன்னுடைய வியாபார சாம்ராஜ்யத்தை ஆள வைக்கும் நோக்கத்துடன் நிறுவன பணிகளில் இறக்கியுள்ளார்.
பிரௌன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்கும் ஆகாஷ் அம்பானி, தன்னுடைய இன்டர்ன்ஷிப் பயிற்சியைக் குடும்ப வியாபாரம் மூலமாகப் பெறும் நோக்கத்துடன் இந்தியா திரும்பியுள்ளார். அண்மையில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் டெலிகாம் பிரிவின் முடிவெடுக்கும் குழுவில் ஒருவராக ரிலையன்ஸ் ஜியோவில் சேர்ந்துள்ளார்.

ஆதித்யா மிட்டல்
உலகளவில் இரும்பு விற்பனையில் கலக்கும் லட்சுமி மிட்டலின் மகனான ஆதித்யா மிட்டல், தன் தந்தையின் குடும்ப வியாபாரத்தில் 1997-ல் இணைந்தார். அவருடைய சொந்த திறமையைக் கொண்டு, இரும்புத் தொழிலில் மிகப்பெரிய IPO-வை நிர்வகித்து வந்த ஆதித்யா, 775 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக மிட்டல் இன்டஸ்ட்ரீஸுக்குச் சம்பாதித்துக் கொடுத்துள்ளார். 1999-ம் ஆண்டில் இவர் இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் பிரிவின் தலைவராகப் பதவியேற்றம் பெற்றுள்ளார்.

ரோஹன் மூர்த்தி
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயனமூர்த்தி அவர்களின் மகன் ரோஹன் மூர்த்தித் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்புகளிலும், நாராயணமூர்த்தியின் சொந்த முதலீட்டு நிறுவனமான கட்டமரான் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பிலும் இருக்கிறார்.

வாசகர் கருத்து
வாசகர் ஆகிய நீங்கள் இப்பட்டியலில் இணைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் பெரும் தலைகளின் வாரிசுகளை கருத்து பதிவிடும் இடத்தில் பதிவிடவும்.

தள்ளுவண்டி கடை
மெரினா தள்ளுவண்டி கடையில் முதல் நாள் விற்பனை 50 பைசா.. இன்று 2,00,000 ரூபாய்..!

அந்தர் பல்டி
மோடி அடித்த 'அந்தர் பல்டி'களால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்..!

ரயால் ரயில்..
ஏசி ரூம், அட்டாச்டு பாத்ரூம், ஆர்டர் செய்தால் சாப்பாடு, சலூன் கூட இருக்கு.. இதெல்லாம் இப்ப ரயிலில்..

இவ்ளோ கோடியா..?!
நாலு, அஞ்சு கோடினா கூட பரவால.. இந்த காரோட விலை இவ்ளோ கோடியா..?!

அமெரிக்கா அதிர்ந்தது..!
சீனாவின் அடுத்த அறிவிப்பு.. அமெரிக்கா அதிர்ந்தது..!

அந்தர் பல்டி
மோடி அடித்த 'அந்தர் பல்டி'களால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்..!