பேக்கேஜ் கட்டணங்களை உயர்த்திய இண்டிகோ - ஏர் ஆசியா விமான நிறுவனங்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறைந்த விலையில் உள்நாட்டு விமான சேவை அளிக்கும் கோ ஏர், இண்டிகோ மற்றும் ஏர் ஆசியா நிறுவனங்கள் விமான மையத்தில் இருந்த வெளியிட இருக்கும் புதிய உத்தரவை அடுத்து பேக்கேஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ளன.

இந்த விமான நிறுவனங்கள் முன்பு 20 கிலோவிற்கும் கூடுதலாக எடுத்து வரும் ஒரு கிலோ பேக்கேஜ்க்கு ரூ.250 கட்டணமாகப் பெற்றுவந்தன. தற்போது இதை ரூ.300 ஆக உயர்த்தியுள்ளன.

தற்போது விமான போக்குவரத்து மையம் அதிகப்படியான பேக்கேஜ்க்கான கட்டணத்தை எவ்வாறு மாற்ற இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

க்ராஸ் மானியம்

க்ராஸ் மானியம்

வான்வழி ஆலோசகர் அனுராக் ஜெயின் கூறுகையில் அரசாங்கத்தின் வழிமுறைகளுக்கு எதிரானது, கூடுதல் பேக்கேஜ்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

20 கிலோவிற்கு அதிகமாக எடுத்துச் செல்பவர்கள், 20 கிலோவிற்கும் குறைவாக எடுத்து வரும் பேக்கேஜ்களுக்கு சேர்த்து கட்டணம் செலுத்துவது போல இது உள்ளது.

 

ஏர் இந்தியாவில் 25 கிலோ

ஏர் இந்தியாவில் 25 கிலோ

தற்போது உள்நாட்டு விமான சேவைகளில் ஏர் இந்தியாவைத் தவிர பிற விமான நிறுவனங்கள் 15 கிலோ வரை பயணச் சாமான்களை இலவசமாக அனுமதிக்கின்றன.

இதுவே ஏர் இந்தியாவில் 25 கிலோ வரையில் பேக்கேஜ்களை இலவசமாக எடுத்துச் செல்லாலாம்.

 

முன்பே வாங்குதல்

முன்பே வாங்குதல்

பெரும்பாலான உள்நாட்டு விமான சேவைகளில் கூடுதலாக எடுத்து வரும் பேக்கேஜ்களுக்கு ஏஜெண்ட்கள், இணையதளங்கள் வாயிலாக டிக்கெட் புக் செய்பவர்களுக்குச் சலுகை கட்டண வசதியை அளிக்கின்றன.

கோஏர் விமான நிறுவனம் கூடுதலாக எடுத்து வரும் 10 கிலோ பேக்கேஜ்களுக்கு முன்பே கட்டணமாக செலுத்தும் போது ரூ.3,000-க்கு ரூ.2,000 செலுத்தினால் போதும்.

 

ஐந்து கிலோ சலுகை விலை

ஐந்து கிலோ சலுகை விலை

உள்நாட்டு விமான யூனியன், விமான துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி அனைத்து உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களிடமும் கூடுதலான ஐந்து கிலோவிற்கு ஒரு கிலோவிற்கு ரூ. 100 கட்டணமாக வசூலிக்கக் கோரிக்கை விடுத்துள்ளன.

பிற விமான சேவைகள்

பிற விமான சேவைகள்

20 கிலோவிற்கு அதிகமாக எடுத்துவரும் பயணிகளிடம் கிலோவிற்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் ரூ.300, ஜெட் ஏர்வேஸ் ரூ.350, விஸ்த்ரா ரூ.300 எனவும் வசூலிக்கின்றன.

ஜெட் ஏர்வேஸ் உட்பட பெரும்பாலான விமானங்களில் ஒரு கை பையாக 7 கிலோ வரியிலும் , அதுவே பிஸ்னஸ் கிளாஸ் ஆக இருந்தால் 10 கிலோ வரையும் ஒரு லேப்டாப்பும் இலவசமாக எடுத்துச் செல்லலாம்.

 

டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

5 கிலோ கூடுதல் பேக்கேஜ்களுக்கான கட்டண குறைப்பை எதிர்த்து கோ ஏர், இண்டிகோ ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் டெல்லி உயர் நீதி மன்றத்தை நாடியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Private Flight services GoAir, IndiGo, AirAsia increased baggage fee

Private Flight services GoAir, IndiGo, AirAsia increased baggage fee
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X