எச்சிஎல் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி 5வது இடத்தைப் பிடித்தது 'கேப்ஜெமினி'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரான்ஸ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச நாடுகளில் வர்த்தகம் செய்து வரும் கேப்ஜெமினி, இந்திய ஐடி சந்தையில் அதிக ஊழியர்களைக் கொண்டு டாப் 5 நிறுவனங்களின் பட்டியலில் எச்சிஎல் நிறுவனத்தை 6வது இடத்திற்குத் தள்ளி 5வது இடத்தைப் பிடித்துள்ளது கேப்ஜெமினி.

 

2015-16ஆம் ஆண்டுக்கான ஐடி நிறுவனங்கள் குறித்த நாஸ்காம் வெளியிட்ட பட்டியலில் எச்சிஎல் நிறுவனம் பின்னுக்குத் தள்ளப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேப்ஜெமினி

கேப்ஜெமினி

ஐரோப்பிய சந்தையில் மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெற்று வந்த கேப்ஜெமினி அமெரிக்க மற்றும் ஆசிய சந்தையில் குதிக்க ஐகேட் நிறுவனத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து முழுமையாக வாங்கியது.

ஐகேட் நிறுவனம் அமெரிக்கச் சந்தைக்கான ஒரு நிறுவனமாக இருந்தாலும் இந்நிறுவனத்தின் அதிகளவிலான ஊழியர்கள் எண்ணிக்கை இந்திய கிளைகளில் உள்ளது. கேப்ஜெமினி நிறுவனம் ஐகேட் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் இந்தியாவில் இருக்கும் தனது ஊழியர்கள் எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளது.

 

இந்திய சந்தை

இந்திய சந்தை

கேப்ஜெமினி நிறுவனத்துடன் ஐகேட் நிறுவனம் இணைந்ததால் இந்தியாவில் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துள்ளது. இதுவே டாப் 5 இடங்களில் கேம்ஜெமினி இடம் பெற முக்கியக் காரணமாகும்.

இதனால் 5வது இடத்தில் பல ஆண்டுகளாக இருந்த எச்சிஎல் 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

 

ஸ்ரீநிவாஸ் கன்டுளா
 

ஸ்ரீநிவாஸ் கன்டுளா

கேப்ஜெமினியின் சர்வதேச டெவரிக்கு இந்திய ஊழியர்கள் மற்றும் அலுவலகம் தான் முதுகெலும்பாக உள்ளது. இந்த ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளப் புனே மற்றும் மும்பையில் புதிய பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளோம். ஊழியர்களுக்கான அனைத்துப் பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படும் இதன் மூலம்.

கேப்ஜெமினி நிறுவனத்தின் இந்திய கிளையில், ஊழியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கவும் அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது எனக் கேப்ஜெமினி இந்தியா சீஇஓ ஸ்ரீநிவாஸ் கன்டுளா கூறினார்.

 

முதல் இடத்தில் டிசிஎஸ்

முதல் இடத்தில் டிசிஎஸ்

சந்தை முதலீடாக இருந்தாலும் சரி, ஊழியர்கள் எண்ணிக்கையாக இருந்தாலும் சரி டிசிஎஸ் தான் முதல் இடம். இது ஐடி துறையில் அடுத்த 10 வருடத்திற்கு அசைக்க முடியா சக்தியாக இந்நிறுவனம் உருவெடுத்துள்ளது.

 டாப் 5

டாப் 5

2015-16ஆம் ஆண்டுக்கான பட்டியலில் டிசிஎஸ் முதல் இடத்தைப் பிடித்த நிலையில், காக்னிசென்ட் நிறுவனம் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு 2வது இடத்தை இன்போசிஸ் பிடித்துள்ளது. டாப் 5 பட்டியலில் 4வது இடத்தில் விப்ரோ.

20வது இடத்தில் CGI

20வது இடத்தில் CGI

இப்பட்டியலில் புதிய நிறுவனமாக டாப் 10 பட்டியலில் இண்டெல்நெட் குளோபல் சரிவீஸ் நிறுவனம் 9வது இடத்தைப் பிடித்துள்ளது. 20 வது இடத்தைக் கனடா நாட்டு நிறுவனமான சிஜிஐ பிடித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Capgemini enters list of top 5 IT employers in India

French multinational consulting firm Capgemini has entered the big league of IT employers at No. 5, shaking up the pecking order of the largest IT-BPM employers for 2015-16 released by industry lobby Nasscom.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X