பிளிப்கார்ட் வர்த்தகத்தை பாதிக்கும் 'அமேசான் ப்ரைம்'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய ஈகாமகர்ஸ் நிறுவனமான அமேசான் தனது அமேசான் ப்ரைம் உறுப்பினர் திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

 

இந்த புதிய சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்வதினால் 100 நகரங்களில் உள்ள அமேசான் வாடிக்கையாளர்கள் பல லட்சம் பொருட்களை ஒரு நாளில் டெலிவரி பெறலாம்.

இத்திட்டம் அமேசான் நிறுவனத்திற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாகும். ஆனால் அதன் சக போட்டி நிறுவனமான பிளிப்கார்ட்க்கு மிகப்பெரி பாதிப்பு. எப்படி..?

அமேசான்

அமேசான்

அமேசான் நிறுவனத்தின் பிரிமியம் சேவைகளில் ஒன்றான ப்ரைம் சேவை அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் நல்ல வரவேர்ப்பைப் பெற்றுள்ளது. தற்போது இத்திட்டம் இந்தியாவில் அறிமுகம் செய்வதினால் இந்திய இ-காமர்ஸ் துறையில் இன்னும் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதேபோன்ற சேவையை பிளிப்கார்ட் நிறுவனமும் வழங்குகிறது.

 

இலவச சோதனை முயற்சி

இலவச சோதனை முயற்சி

ப்ரைம் சேவையின் நலன்களை இந்திய நுகர்வோர்கள் பயன்படுத்தி மகிழ 60 நாட்கள் இலவச சோதனை முறையையும் அறிவித்துள்ளது.

தற்போதைய டெலிவரி கட்டணம்

தற்போதைய டெலிவரி கட்டணம்

தற்போது 20 நகரங்களில் ஆர்டர் செய்த அதே நாள் டெலிவரி வேண்டும் என்ற தெரிவை தேர்வுசெய்யும் போது ரூ.50 முதல் ரூ.150 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ப்ரைம் அறிமுக ஆஃபர் விலை
 

ப்ரைம் அறிமுக ஆஃபர் விலை

ஆனால் இந்த ப்ரைம் சேவையின் அறிமுக கட்டணமாக ஆண்டுக்கு ரூ.499-ஐ செலுத்தி வரம்பற்ற இலவச ஒரு நாள் மற்றும் இரு நாட்களுக்கான டெலிவரிகளைப் பெறலாம்.

ஆஃபர் விலை பொருட்கள்

ஆஃபர் விலை பொருட்கள்

ப்ரைம் சேவையை பயன்படுத்துவோருக்கு ஆஃபர் விலை பொருட்கள் விவரங்கள் பிற பயனர்களுக்கு வருவதற்கு அறை மணி நேரம் முன்பே பட்டியலிடப்படும்.

செயலி மற்றும் இணையதளம்

செயலி மற்றும் இணையதளம்

இந்திய அமேசான் இணையதளம் மற்றும் செயலி என இரண்டிலும் இந்தச் சேவையை பயன்படுத்தலாம்.

85,000 விற்பனையாளர்கள்

85,000 விற்பனையாளர்கள்

புதிய விற்பனையாளர்களைக் கொண்டுவருவதில் ஆண்டுக்கு 250 சதவீத வளர்ச்சியுடன் 85,000 விற்பனையாளர்கள் அமேசான் கொண்டுள்ளது. இத்திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதன் மூலம் விற்பனையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

இந்திய சந்தையில் அமேசான் நிறுவனத்துடன் கடுமையாக போட்டி போட்டு வரும் பிளிப்கார்ட் நிறுவனமும் இதேபோன்ற சேவையை பிளிப்கார்ட் பர்ஸ்ட் டெலிவிரி என்ற பெயரில் வழங்குகிறது.

ஆனால் அமேசான் நிறுவனத்தில் சேவையும் பொருட்களின் தரம் மிகவும் சிறப்பாக உள்ள காரணத்தில் அதிகளவிலான பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் தற்போதும் அமேசான் நிறுவனத்தை நாடி சென்று வருகின்றனர்.

 

போட்டி

போட்டி

இந்நிலையில் பிளிப்கார்ட் பர்ஸ்ட் சேவையை போலவே அமேசான் நிறுவனமும் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் டெலிவரியை வருடம் முழுவதற்கும் 499 ரூபாய்க்கு வழங்குகிறது. இது ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon launches its premium service 'prime' in India

Amazon launches its premium service 'prime' in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X