இன்றைய உயர் நடுத்தர வகுப்பினர்களுக்கு யுசிபி மற்றும் லிவைஸ் ஒரு பிடித்தமான பிராண்டுகள் என்றால் நகரத்தில் வாழும் பணக்காரர்களுக்கு ப்ரடா மற்றும் சானல் ஆகியவை ஈர்ப்பாக இருந்தது.
இது சில காலத்திற்கு முன்பு வரை தான். ஆனால் இன்றோ சமூக வலைதளங்கள் மற்றும் மேற்கத்திய நாகரீகம் மூலம் நடுத்தர வகுப்பினரும் இந்த பகட்டான நாகரீகங்களுக்கு விரைவில் அறிமுகமாகி தாங்களும் அதை குறித்து கனவு காண்கின்றனர் என்பதே உண்மை.

ஆடம்பரப்பொருள் சந்தை
யூரோமானிடர் இன்டெர்னேஷனல் அமைப்பின் ஆய்வறிக்கையின் படி, இந்தியா உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஆடம்பரப்பொருள் சந்தையாக உருவெடுத்துவருவதுடன் வருடத்திற்கு 225 மில்லியன் டாலர் என்ற அளவில் வளர்ந்துள்ளது.

ஆடம்பர ஃபேஷன் ஸ்டார்ட் அப்
ஸ்டார்ட் அப் எனப்படும் புதிய தொழில் முயற்சிகளில் டெல்லியைச் சேர்ந்த கான்ஃபிடென்ஷியல் கோச்சுர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த ஜாபிலே ஆகியவை ஆடம்பர ஃபேஷன் வாடிக்கையாளர் துறையை மிகவும் பெரிய அளவில் உபயோகிக்கப்பட்ட பொருட்கள் மூலம் உருவாக்கி வருகின்றன.

ஜாபிலே நிறுவனம்
ஜாபிலே நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராஷி மெண்டா தன் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் பொதுவாக 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆவார்கள் எனவும் அவர்கள் மேலும் மேலும் ஆடம்பர பிராண்டுப் பொருட்களை அறிந்து கொள்வதாகவும் கூறுகிறார்.

சமுக வலைதளங்களின் பங்கு
"இந்த 2000 ஆம் ஆண்டினை ஒட்டிய இளம் வயதினர் கைகளில் ஸ்மார்ட் போனுடன் வேலைகளுக்குச் செல்கின்றனர். அவர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் உலகின் பல்வேறு மூலைகளிலுள்ள விவரங்களுக்குத் தெரிந்துகொள்ள முடிகிறது" என அவர் கூறுகிறார்.

உபயோகிக்கப் பட்ட ஆடம்பரப் பொருட்கள் சந்தை
உபயோகிக்கப் பட்ட ஆடம்பரப் பொருட்களுக்கான ஒரு சந்தை வாய்ப்பிற்கு இதுவே கூட ஒரு காரணமாக இருக்க முடியும். கான்ஃபிடென்ஷியல் கோச்சுர் நிறுவனத்தின் நிறுவனர் அன்விதா மெஹ்ரா "அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அரபு நாடுகள் உள்ளிட்ட பெரும்பாலான வளர்ச்சியடைந்த பொருளாதரங்களில் இது போன்ற உபயோகிக்கப் பட்ட ஆடம்பரப் பொருட்களுக்கான சந்தை உண்மையில் நாம் நினைப்பதை விடப் பெரியது.

இந்தியாவின் கோடீசுவரர்கள்
அதைப் போன்று ஒரு 10 சதவிகித அளவிற்குக் கூட நாம் இந்தியாவில் இந்த முயற்ச்சியை எடுக்க வில்லை. நாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு சமூகப் பகுதிகளை அலசவேண்டியது அவசியம்" என்று குறிப்பிடுகிறார். கோடக் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் டாப் ஆப் தி பிரமிட் 2015 ஆய்வறிக்கையின் படி, இந்தியாவின் கோடீசுவரர்களில் 44% சதவிகிதம் பேர் பெரு நகரங்களுக்கு வெளியில் வசிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொபைல் வர்த்தகத் தொழில்நுட்பம்
மொபைல் வர்த்தகத் தொழில் நுட்பத்தின் உதவியோடு ஜாபிலே தன் வழி ஆன் லைன் வர்த்தகம் மட்டுமே என்பதில் உறுதியாக உள்ளது. "விற்க்கப்படும் அனைத்துப் பொருட்களும் மற்ற கடைகளிலும் கிடைக்கும். அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு பிராண்டு முக்கியத்துவம் குறித்து கற்பிக்கிறார்கள். நாங்கள் இதனை நன்கு புரிந்துகொண்டு பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து வர்த்தகம் செய்கிறோம்" என ராஷி கூறுகிறார்.

ஸ்டைல்டேக் நிறுவனம்
ஸ்டைல்டேக் நிறுவனர் சஞ்சய் ஷ்ராஃப், ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் குழுவிற்குத் தகுந்த தயாரிப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறார். ஸ்டைல்டேக் உள்ளூர் டிசைனர் லேபிள்களை விற்கும் ஒரு தனிப்பட்ட வணிகம்.
இதன் சராசரி மதிப்பு ரூபாய் ஐந்தாயிரம் வரை இருக்கும். "நிஃப்ட் போன்ற கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டதன் மூலம் பல ஆடை வடிவமைப்பாளர்கள் வருகின்றனர். எனவே நாங்கள் ஒய்வு ஆடைகள் (லீஷர் வேர்), கடற்கரை ஆடைகள் (பீச் வேர்), இரவு ஆடைகள் (நைட் வேர்) மற்றும் வீட்டு அலங்கார அணிகள் ஆகியவற்றிலும் கால்பதிக்க இருக்கிறோம்" என அவர் கூறுகிறார்.

நிச்சயமற்ற தன்மை
"ஆனால், உபயோகிக்கப் பட்ட அணிகலன்கள் வணிகம் சி2சி எனப்படும் இரு வாடிக்கையாளர்களைச் சார்ந்த ஒன்று என்பதால் விற்பனை செய்பவருக்கு சில நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது" என அன்விதா கூறுகிறார். ஆர்வமுடைய நிறைய சம்பாதிக்கும் திறனுள்ளவர்களை கொண்ட ஒரு பெரிய வாடிக்கையாளர் வட்டம் அவர்களுக்கென உண்டு.

திட்டமிட்டு செலவு செய்பவர்கள்
உண்மையில் ஜாபிலே திட்டமிட்டு செலவு செய்பவர்கள், ஆர்வமுடையவர்கள் மற்றும் மீண்டும் மீண்டும் வாங்கக் கூடியவர்கள் என மூன்று வகையானவர்களை நோக்கி வணிகம் செய்கிறது.
"இதில் மீண்டும் மீண்டும் வாங்கக் கூடியவர்கள் விற்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

ஆர்வமுடையவர்களின் வாடிக்கையாளர்கள்
ஆர்வமுடையவர்கள் தனக்கென வாடிக்கையாளர்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். திட்டமிட்டு செய்பவர்கள் நன்கு வளர்ந்து ஆர்வமுடையவர்களாக மாறவேண்டும் என நாங்கள் விழைகிறோம்" என ராஷி கூறுகிறார். ஜாபிலே முந்தைய சீசனிலிருந்து புதிய டிசைனர் திருமண அணிகலன்களையும் வழங்குகிறது.

ஆடம்பரம் என்பது பணக்காரர்களுக்கு மட்டும் அல்ல
புதிய புதிய வணிக உக்திகள் வந்துகொண்டிருப்பதால் ஆடம்பரம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே வாய்க்கும் விஷயமாக இல்லாமல் அனைவருக்கும் வாய்க்கும் ஒன்றாக மாறியுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ஒரு ஜோடி ஜிம்மி சூ பம்ப்களை வாங்க நீங்கள் ஒரு மாதச் சம்பளத்தை சேர்க்க வேண்டிய அவசியமில்லை.