ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மத்திய அரசு 7வது சம்பள கமிஷன் அறிக்கையை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளதால், சந்தையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள எஸ்பிஐ வங்கி புதிய வீட்டுக்கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இப்புதிய திட்டத்தில் மத்திய, மாநில, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பை எப்போதும் உறுதி செய்யும் ராணுவ வீரர்களுக்குப் பிரத்தியேகமாகக் குறைந்த வட்டி விகிதத்தில் நீண்ட காலக் கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
75 வயது
எஸ்பிஐ வங்கி 7வது சம்பள கமிஷன் மூலம் சந்தையில் உருவாக உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள் புதிய வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இப்புதிய திட்டத்தில் எஸ்பிஐ வங்கி மற்றும் அதன் துணை வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கும் நபர் 75 வயது வரை கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தலாம்.
இயல்பாக இது 70 வயது வரை மட்டுமே சாத்தியப்படும்.
பெயர்
அரசு ஊழியர்களுக்காக ‘Privilege Home Loan' மற்றும் ராணுவ வீரர்களுக்காக ‘Shaurya Home Loan' என்ற புதிய இரண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வட்டி குறைப்பு
நடைமுறையில் இருக்கும் வீட்டுக் கடன் திட்டத்தை விட .05 சதவீதம் குறைவான வட்டி விகிதத்தையே இத்திட்டத்திற்கு வட்டியாக நிர்ணயம் செய்துள்ளது எஸ்பிஐ வங்கி.
தகுதி
இப்புதிய திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன் பெற சில அடிப்படைத் தகுதிகளை எஸ்பிஐ வங்கி வைத்துள்ளது. இதனை நீங்கள் பூர்த்திச் செய்தால் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும்.
ஈஎம்ஐ
மேலும் ஒய்வுப்பெற்ற பின்னர்க் குறைவான ஈஎம்ஐ தொகையை நிர்ணயம் செய்யும் வசதிகளும் இத்திட்டத்தில் உண்டு.
பிற வங்கிகள்
இதேபோன்ற திட்டத்தை நாட்டின் பிற பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் அடுத்தச் சில நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இலவச வருமான வரி தாக்கல்
இலவசமாக வருமான வரி தாக்கல் செய்ய ஒன் ஸ்டாப் சொல்யூஷன் -தமிழ் குட்ரிட்டன்ஸ்
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications