ரகுராம் ராஜனின் 'கடைசி' நாணய கொள்கை கூட்டம்: ஆகஸ்ட் 9

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையிலான கடைசி இருமாத நாணயக் கொள்கை கூட்டம் செவ்வாய்க்கிழமை (நாளை) நடைபெற உள்ளது.

இதுமட்டும் அல்லாமல் ரிசர்வ் வங்கியின் கடைசிச் சுதந்திர நாணய கொள்கை கூட்டமும் இதுவே..

மத்திய அரசின் தலையீடு..

மத்திய அரசின் தலையீடு..

ரகுராம் ராஜனின் 3 வருடப் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த நாணயக்கொள்கையில் இருந்து ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இணைந்து அமைத்துள்ளது புதிய நாணய கொள்கை கூட்டமைப்பு வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்யும்.

இதனால் ரகுராம் ராஜன் தலைமையில் நாளை நடக்க உள்ள இருமாத நாணயக் கொள்கை கூட்டமே ஆர்பிஐ-யின் கடைசிச் சுதந்திரமான நாணய கொள்கை கூட்டம்.

 

சில்லறை பணவீக்கம்

சில்லறை பணவீக்கம்

2017ஆம் நிதியாண்டில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 5 சதவீதம் அளவில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரம் உயர்த்தும் நோக்குடன், ரகுராம் ராஜன் வெளிநடப்புக்கு ஏற்ற மக்களுக்கு அதிகளவில் பயன் அளிக்கும் வகையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடக்க உள்ள நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மத்திய அரசு

மத்திய அரசு

மத்திய அரசு அதிகளவில் கவனம் செலுத்தும் நுகர்வோர் பணவீக்கம் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்தை (5.40%) விடவும் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 5.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் புதிய நாணய கொள்கை கூட்டமும் நுகர்வோர் பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டே வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

 

அருந்ததி பட்டாச்சார்யா

அருந்ததி பட்டாச்சார்யா

இந்நிலையில் ரகுராம் ராஜன் பதவிக்குப் போட்டுப்போடும் முக்கிய அரசு அதிகாரிகளில் ஒருவரான எஸ்பிஐ வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா நுகர்வோர் பணவீக்கத்தில் உணவு பணவீக்கம் அதிகமாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

 வட்டி விகிதம்

வட்டி விகிதம்

ரகுராம் ராஜனின் முந்தைய நிலைப்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போதும் இப்போதும் தனது உறுதியான நிலையில் இருந்தால் வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.

நிதியமைச்சகம்

நிதியமைச்சகம்

அடுத்த 5 வருடத்தில் நாட்டின் பணவீக்கத்தை 4 சதவீதக்கு நிலைநிறுத்த வேண்டும் என்று நிதியமைச்சகம் முடிவு செய்துள்ள நிலையில் ஆக்டோபர் மாதம் நடைபெற உள்ள கூட்டத்தின் முதலே அதற்கான பணிகள் துவங்கப்படும் என நிதியமைச்சகத்தின் புதிய அமைப்பு மற்றும் அதன் நிலைப்பாடு குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.

 நாணய கொள்கை கூட்டமைப்பு

நாணய கொள்கை கூட்டமைப்பு

மத்திய அரசு தரப்பில் 3 பேரும், ரிசர்வ் வங்கி தரப்பில் 3 பேரும் ஆர்பிஐ கவர்னர் தலைமையில் இப்புதிய கூட்டமைப்பு செயல்பட உள்ளது. அனைத்து விஷயங்களிலும் இறுதி முடிவை ரிசர்வ் வங்கி கவர்னர் எடுப்பார்.

வட்டி விகிதமும்.. ரகுராம் ராஜனும்...

வட்டி விகிதமும்.. ரகுராம் ராஜனும்...

கடந்த மூன்று வருடப் பணிக்காலத்தில் ரகுராம் ராஜன் வட்டி விகிதத்தை 3 முறை உயர்த்தியும், 5 முறை குறைத்துள்ளார்.

மீண்டும் அமெரிக்கா

மீண்டும் அமெரிக்கா

செப்டம்பர் 4ஆம் தனது பதவியை ராஜினாமா செய்யும் ரகுராம் ராஜன் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் மீண்டும் பேராசிரியராகப் பணியாற்றப் போகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Raghuram Rajan to flag last independent monetary policy update by RBI governor Tuesday

Raghuram Rajan will on Tuesday conduct what will be his last monetary policy update for the Reserve Bank of India (RBI) and also, perhaps, the last that a central bank governor can henceforth undertake independently.
Story first published: Monday, August 8, 2016, 12:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X