ரூ.399-இல் விமான பயணம்: ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா சுதந்திர தின ஆஃபர்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா நிறுவனங்கள் ஆஃபர் விலையில் விமான பயண டிக்கெட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

ஸ்பைஸ்ஜெட்

ஸ்பைஸ்ஜெட்

இந்தியாவில் மலிவுவிலை விமான சேவை நிறுவனம் என்று பெயர் பெற்றுள்ள ஸ்பைஸ்ஜெட் தனது பயணிகள் சேவை விமான டிக்கெட்-இன் விலையை ரூ.399 ஆக குறைத்து தனது புதிய சுதந்திர தின சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. 399 ரூபாய் என்பது அடிப்படை கட்டணம் மட்டுமே.

ஆகஸ்ட் 11 கடைசி

ஆகஸ்ட் 11 கடைசி

ஆகஸ்ட் 11 வரை இந்த ஆஃபர் விலை டிக்கெட் கிடைக்கும் என்றும், ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 30 வரையிலான பயண டிக்கெட்களை இந்த சலுகை விலையில் பெற்று பயன் பெறலாம் என்று செவ்வாய்க்கிழமை ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.

முக்கிய வழித்தடங்கள்
 

முக்கிய வழித்தடங்கள்

இந்த ஆஃபர் விலை அகமதாபாத்-மும்பை, அமிர்தசரஸ்-ஸ்ரீநகர், பெங்களூரு-சென்னை, பெங்களுரூ-கொச்சி, கோயம்புத்தூர்-ஹைதெராபாத், ஜம்மு-ஸ்ரீநகர் மற்றும் மும்பை-கோவா போன்ற பிரபலமான வழித்தடங்களில் மட்டுமே என்றும் அறிவித்துள்ளது.

டிக்கெட் ரத்து விதிமுறைகள்

டிக்கெட் ரத்து விதிமுறைகள்

அதே சமயம் எத்தனை டிக்கெட்டுகளுக்கு இந்த ஆஃபர் விலை என்று ஏதும் அறிவிக்கவில்லை. இந்த டிக்கெட் கட்டணங்கள் ரத்து செய்யும் போது சில வரிகள் மட்டும் திரும்ப பெற இயலும் என்று கூறியுள்ளது.

பிற வழித்தடங்கள்

பிற வழித்தடங்கள்

ரூ.399-க்கு இந்த அடிப்படை கட்டண ஆஃபர் விலையை அறிவித்திருந்தாலும் பெங்களூர்-சென்னை இடையே செல்ல ரூ.1,137 மற்றும் அகமதாபாத்-மும்பை இடையே செல்ல ரூ.1,053 கட்டணமாகும்.

குறைவான பயணிகள் எண்ணிக்கை

குறைவான பயணிகள் எண்ணிக்கை

விமான நிறுவனங்கள் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை குறைவு என்பதால் பல ஆஃப்ர்களை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

இதேப்போன்று ஏர் இந்தியா நிறுவனமும் மழைக்கால விற்பனையாக உள்நாட்டுப் பயண கட்டணமாக ரூ.1,199 எனவும் வெளிநாட்டுப் பயண கட்டணத்தை (சில வழித்தடங்களுக்கு மட்டும்) ரூ.15,999 எனவும் அறிவித்துள்ளது.

ஒரு வழிப் பயணம்

ஒரு வழிப் பயணம்

இந்தப் பயண கட்டணங்கள் எகானமி வகுப்பில் செல்பவர்களுக்கான ஒரு வழிப் பயணத்திற்கு மட்டுமே என்று ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

ஆகஸ்ட் 15 வரை

ஆகஸ்ட் 15 வரை

ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 30 வரையிலான உள்நாட்டுப் பயணத்திற்கும், வெளிநாட்டுப் பயணத்திற்கு செப்டம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரியிலான பயணத்திற்கும் ஆகஸ்ட் 15 வரை டிக்கெட் புக் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

பெங்களூர்-சென்னை

பெங்களூர்-சென்னை

இந்தக் கட்டணத்தில் பெங்களூர்-சென்னை, தில்லி - ஜெய்ப்பூர், சென்னை-பெங்களூர் போன்ற சில வழித்தடங்களில் மட்டுமே செல்ல முடியும் என்றும் அதற்கான எல்லாக் கட்டணங்களையும் சேர்த்து ரூ.1,199 ஆகும்.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தைப் போன்று ஏர் இந்தியா நிறுவனமும் எத்தனை டிக்கெட்டுகள் ஆஃபர் விலையில் விற்கப்படும் என்று கூறவில்லை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SpiceJet - Air India Launches 'Independence Day Sale' Offer

SpiceJet - Air India Launches 'Independence Day Sale' Offer
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X