'கோவா' வில்லாவில் குஷியாக இருந்த விஜய் மல்லையா..!

By: கிருஷ்ணமூர்த்தி
Subscribe to GoodReturns Tamil

பெங்களுரூ: யுபி குழுமத் தலைவர் விஜய் மல்லையாவி உல்லாச உலகமான கிங்பிஷர் வில்லா, கடந்த 11 மாதங்களாக வங்கி கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், இந்த வில்லாவை தற்போது சச்சின் ஜோஷி என்பவர் வாங்கிவிட்டார்.

இனி விஜய் மல்லையா கடன் முழுமையாக செலுத்தினாலும் இந்த ஆடம்பர சொகுசு வில்லாவை வாங்க முடியாது. அப்படி இந்த வில்லாவில் என்ன தான் இருக்கு..?? 

வாசல் கதவுகள்

அகுவாடா கோட்டைக்குச் செல்லும் வழியில் கண்டோலிம் என்ற இடத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட 90 கோடி ரூபாய் மதிப்புள்ளது இந்த வில்லா.

அந்த இடத்திற்கே உரிய பாரம்பரிய பாணியில் கடலைப் பார்த்தவாறு கட்டப்பட்டுள்ள இந்த வில்லாவின் வாயிற் கதவுகள் விலையுயர்ந்த உலோகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மல்லையா கைவண்ணம்

இந்த வில்லா மூன்று பெரிய படுக்கையறைகளையும் பெரிய லிவிங் ரூமையும் கொண்டுள்ளது. இந்த வில்லாவின் ஒவ்வொரு செங்கற்களையும் மல்லையா ரசித்துக் கட்டியது என்று கூறுகிறார்கள்.

உள் வேலைப்பாடுகள்

கையினால் செய்யப்படத் தேக்கு மர பர்னீசர்கள், ஆடம்பரமான ஹோம் தியேட்டர் சிஸ்டம் ஆகியவை இந்த வில்லாவிற்கான அடையாளம்.

வில்லாவின் கடைசியில் உள்ள ஒரு வீடுபோன்ற ஒரு அப்பார்ட்மென்ட் கடலைப் பார்த்தபடி இருக்கும். இது மல்லையாவின் மாஸ்டர் படுக்கையறையாகும்.

 

புல்வெளிகள் மற்றும் நீச்சல் குளங்கள்

சமன் செய்யப்பட்ட புல்வெளிகள் மத்தியில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செடிகள் நிறைந்த பாதை கோல்ப் மைதானத்திற்கு இட்டுச்செல்கிறது.

பார்ட்டி...

புல்வெளியை ஒட்டிய நீச்சல் குளங்கள் இருக்கும் பகுதியில் தான் மல்லையா பெரும்பாலும் தன்னுடைய பிரபலமான விருந்துகளைப் பாலிவுட் பிரபலங்கள் உட்படக் கனவுக்கன்னிகளுக்கும் சூப்பர் மாடல்களுக்கும் வழங்குவார் என்று கூறப்படுகிறது.

 

 

60-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

அவருடைய மகிழ்ச்சியான தருணங்களில் நடன அரங்கு இருமடங்காக உயர்ந்து ஹெலிபேட் ஆக மாறி அவர் நேரடியாக ஹெலிகாப்டரில் பறந்து வந்து வீட்டின் உள்ளேயே இறங்குவார். அவருடைய 60-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் இதற்கு அத்தாட்சி.

வாழ்க்கைமுறை

மல்லையாவின் கார்கள் மீதான ஆர்வம் அனைவரும் அறிந்த ஒன்று. தற்பொழுதும் சுமார் 20 கார்கள் அவருடைய இந்த விலாவில் நிறுத்தப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்க முடியும்.

சிவப்பு பெர்ராரி

அவருக்கு மிகவும் பிடித்த சிவப்பு பெர்ராரி கார் காராஜில் தூசிபடிந்து கிடக்கிறது. இந்த வில்லாவின் ஒவ்வொரு மூளையும் செழுமையினைப் பறைசாற்றுவதாக உள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட வீடு

பாரத ஸ்டேட் வங்கியின் தகவல்கள்படி இந்த வில்லா 100 கோடி ருபாய் என்ற அடிப்படை விலைக்கு மின்னணு ஏலத்திற்கு விடப்படவுள்ளதாகத் தெரிகிறது. இதில் இந்த வில்லாவில் உள்ள கலைப் பொருட்களும் விலை உயர்ந்த ஒரு டஜன் கார்களும் அடக்கம்.

சத்திய சோதனை..

கோடீஸ்வர அந்தஸ்திலிருந்து ஒரு கடனாளியாக விஜய் மல்லையா சந்தித்துள்ள சரிவிற்கு இந்த வில்லாவின் ஏலம் தற்போது சான்றாக நிற்கிறது. அதே நேரம் பரபரப்பான இந்தச் சொகுசு வீடு தற்போது சட்ட நெறிமுறை நோட்டிசுகளாலும் பெரிய பூட்டுடனும் களை இழந்து காணப்படுகிறது.

மற்றொரு கிங்பிஷர் வில்லா

கோவாவில் இது போன்று மற்றொரு கிங்பிஷர் வில்லா இருக்கிறது என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். லிண்டா நாபண் தன்னுடைய கணவர் அசோக்குடன் இணைந்து ஒரு ஐந்து படுக்கையறைக்குக் கொண்ட தாங்கும் விடுதியை அமைத்து அதற்குக் கிங்பிஷர் வில்லா எனப் பெயரிட்டு நடத்தி வருகிறார்.

15 வருடங்களுக்கு முன்பு..

இது விஜய் மல்லையாவின் வீடு வருவதற்குப் பலகாலம் முன்பே இருந்தது குறிப்பிடத்தக்கது, அதாவது அவர்கள் இந்த விடுதிக்கு 15 வருடங்களுக்கு முன்பே பெயரை வைத்துள்ளனர். இப்போதும் இப்பெயரை மாற்ற விரும்பவில்லை.

இந்தப் பெயர் கோவா-வில் பிரபல படகுத் தொழிலான கிங்பிஷர் நிறுவனப் பெயரை ஒட்டி வந்தது என லிண்டா நாபண் - அசோ கூறினர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

The Saga Of Vijay Mallya's Kingfisher Villa

Are you going to Goa for a vacation? Don’t forget to add one more attraction to your itinerary — Kingfisher Villa, which was once UB Group chief Vijay Mallya’s party den. In the past few days, hundreds of visitors have flocked to the lavish address to catch a glimpse of how a billionaire home looks like.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns