ஆதித்யா பிர்லாவின் கிளை நிறுவனங்கள் இணைப்பு.. ரூ.70,000 கோடி மதிப்பில் புதிய நிறுவனம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ஆதித்யா பிர்லா குழுமம் தனது முக்கிய வர்த்தகப் பிரிவுகளான கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆதித்யா பிர்லா நுவோ ஆகிய நிறுவனங்களை இணைக்க உள்ளது.

2016ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் மத்தியில் நடந்த மிகப்பெரிய நிகழ்வுகளில் இது மிகவும் முக்கியமானவை.

ஆதித்யா பிர்லா
 

ஆதித்யா பிர்லா

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வர்த்தகம் செய்து வரும் 41 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆதித்யா பிர்லா குழுமம், கிராசிம் மற்றும் நுவோ நிறுவனங்களை இணைப்பதன் மூலம் 11 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய நிறுவனத்தை உருவாக்க உள்ளது.

பிரிவும்.. இணைப்பு..

பிரிவும்.. இணைப்பு..

ஆதித்யா பிர்லா நுவோ நிறுவனத்தில் இருந்து நிதியியல் வர்த்தகத்தை மட்டும் தனியாகப் பிரித்து ஆதித்யா பிர்லா பைனான்சியல் சர்விசஸ் லிமிடெட் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா நிதியியல் துறையில் மிகப்பெரிய சந்தையைப் படிக்க உள்ளதாகத் தெரிகிறது.

இதன் பின்னரே நுவோ மற்றும் கிராசிம் நிறுவனங்களை இணைக்கப்படுகிறது.

டெலிகாம்

டெலிகாம்

ஆதித்யா பிர்லா குழுமத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவான ஐடியா செல்லுலார் வர்த்தகத்தில் அதிகளவிலான பங்கு முதலீட்டைக் கொண்டுள்ள நுவோ மற்றும் கிராசிம் நிறுவனங்கள் இணைக்கப்படுவது இதில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ
 

ரிலையன்ஸ் ஜியோ

அடுத்தச் சில மாதங்களில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் முக்கியப் போட்டி நிறுவனமான ரிலையன்ஸ், தனது ஜியோ டெலிகாம் சேவையைத் துவங்க உள்ளது. இதனால் மூலம் சந்தையில் ஏற்படும் மிகப்பெரிய போட்டியை சமாளிக்க ஐடியா செல்லூலாரின் கூட்டணி நிறுவனங்கள் தற்போது ஒன்றாகச் சேர்கிறது.

மறுப்பு

மறுப்பு

இந்த இணைப்பு ரிலையன்ஸ் ஜியோ-வின் போட்டியை சமாளிப்பதற்காகவோ, டெலிகாம் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காவோ இல்லை என ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார்மங்களம் பிர்லா சந்தையில் நிலவும் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

ஆதித்யா பிர்லா நுவோ

ஆதித்யா பிர்லா நுவோ

இக்குழுமத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவாக விளங்கும் நுவோ நிறுவனம் அதிகளவிலான ஐடியா செல்லுலார் பங்குகளைக் கொண்டுள்ளது. இதனுடன் அல்டா டெக் சிமெண்ட், ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடைல், விஸ்கோஸ் ஸ்டேபிள் பைபர், விஸ்கோஸ் பிளமென்ட் யார்ன் மற்றும் இன்சுலேட்டர் வர்த்தகத்திலும் முதலீடு செய்துள்ளது.

கிராசிம்

கிராசிம்

ஆதித்யா பிர்லா குழுமத்தில் மிகவும் வலிமையாக இருப்பது கிராசிம் பிரிவு வர்த்தகம் தான், பங்குச்சந்தை அளித்த தகவல் படி கிராசிம் நிறுவனத்தில் அதிகளவிலான பண இருப்பு மற்றும் நிலையான வர்த்தக நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாகவே நுவோ என்னும் குதிரையைக் கிராசிம் என்ற யானைக் கூட்டத்துடன் இணைக்கிறது ஆதித்யா பிர்லா.

ஐடியா செல்லுலார்

ஐடியா செல்லுலார்

இந்நிறுவனத்தில் கிராசிம் 5% பங்குகளும், நுவோ 23 சதவீத பங்குகளுக்கும் கொண்டுள்ளது. ஆக மொத்தம் ஆதித்யா பிர்லா குழுமத்தின் மொத்த பங்கு மதிப்பில் 42 சதவீதம் எஞ்சியுள்ள பங்குகளை மலேசியா Axiata என்னும் நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதித்யா பிர்லா

ஆதித்யா பிர்லா

இக்குழுமம் சிமெண்ட் முதல் ஆடை தயாரிப்பு வரை பல துறையில் செயல்பட்டு வருகிறது. இக்குழுமத்தின் கீழ் ஆதித்யா பிர்லா நுவோ, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஹீண்டால்கோ, ஐடியா செல்லுலார், ஆதித்யா பிர்லா பேஷன் அண்ட் ரீடைல் என 5 வர்த்தகப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

திங்கட்கிழமை வர்த்தக நிலைப்படி இந்நிறுவனத்தை மொத்த சந்தை மதிப்பு 1.47 லட்சம் கோடி.

2016ஆம் ஆண்டு

2016ஆம் ஆண்டு

இந்த வர்த்தக நிறுவனங்களின் பிரிவும் இணைப்பும் 2016ஆம் நிதியாண்டுக்குள் முழுமையாக முடிக்கப்பட உள்ளது. இதேபோல் 2017ஆம் நிதியாண்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா பிர்லா பைனான்சியல் சர்விசஸ் லிமிடெட் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.

 பங்குகள்

பங்குகள்

ஆதித்யா பிர்லா நுவோ நிறுவனத்தை முழுமையாகக் கிராசிம் நிறுவனத்துடன் இணைக்கப்படும் நிலையில், நுவோ பங்குதாரர்ரகளுக்கு 10 பங்குகளுக்கு 3 கிராசிம் பங்குகள் வழங்கவும் ஆதித்யா பிர்லா குழுமம் முடிவு செய்துள்ளது.

உதாரணமாக

உதாரணமாக

100 நுவோ பங்குகளை வைத்திருக்கும் ஒருவருக்கு இணைப்பிற்குப் பின் 30 கிரசிம் பங்குகளும் 210 ஆதித்யா பிர்லா பைனான்சியல் சர்விசஸ் லிமிடெட் பங்குகளும் வழங்கப்படும்.

கார்மெண்ட்ஸ் வர்த்தகம்

கார்மெண்ட்ஸ் வர்த்தகம்

இந்நிறுனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆடை தயாரிப்பு நிறுவனங்களைக் கடந்த வருடம் ஒன்றாக இணைத்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Aditya Birla to merge Grasim, AB Nuvo into $11bn co

In one of the biggest restructuring moves in India Inc this year, Aditya Birla Group chairman Kumar Mangalam Birla has initiated a plan to merge Grasim Industries and Aditya Birla Nuvo.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X