விரைவில் பிஎஃப் பணத்தைப் பயன்படுத்தி வீடு வாங்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் இருப்பைப் பயன்படுத்தி வீடு வாங்கும் திட்டத்தை விரைவில் கொண்டு வர இருக்கிறது.

பணிகள் துவங்கிவிட்டன

பணிகள் துவங்கிவிட்டன

தொழிலாளர் அமைச்சகத்தின் செயலாளர் சங்கர் அகர்வால் இதுகுறித்து கூறும்போது நாங்கள் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உறுப்பினர்களின் கணக்கை பயன்படுத்தி வீடு வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளைத் துவங்கி உள்ளோம். இதைப் பயன்படுத்தி எளிதாக வீடு வாங்குவது மட்டும் இல்லாமல் பிஎஃப் பணத்தை மாத தவணையாகும் செலுத்தலாம் என்று கூறியுள்ளார்.

 திட்டம் சமர்ப்பிப்பு

திட்டம் சமர்ப்பிப்பு

அடுத்த மாதம் மத்திய அறங்காவலர்கள் வாரியத்துடன் நடக்க இருக்கும் ஓய்வூதிய நிதிய தொடர்பான ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கூட்டத்திற்கு முன்பு இதற்கான திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளோம் என்றும் கூறினார்.

மத்திய அறங்காவலர்கள் வாரியம் இதற்கு ஒப்புதல் அளித்தவுடன் பிஎஃப் சந்தாதார்கள் இதைப் பயன்படுத்த இயலும்.

 

எவ்வளவு கடன்

எவ்வளவு கடன்

இத்திட்டத்தின் கீழ் எல்லா சந்தாதார்களும் கடன் பெற இயலுமா, எவ்வளவு கடன் பெற இயலும் என்ற எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

நிர்பந்தமும் ஏதும் இல்லை

நிர்பந்தமும் ஏதும் இல்லை

சந்தாதார்கள் மீது கண்டிப்பாக வீடு வாங்க வேண்டும் என்றோ இவர்களிடம் தான் வாங்க வேண்டும், இங்கு தான் வாங்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் நாங்கள் விதிக்கவில்லை, வெளி சந்தையில் எங்கு வேண்டும் என்றாலும் வீடாகவோ, இடமாகவோ வாங்கிக் கொள்ளலாம் என்றும் அகர்வால் கூறினார்.

மூன்று தரப்புக்கு இடையிலும் ஒப்பந்தம்

மூன்று தரப்புக்கு இடையிலும் ஒப்பந்தம்

இத்திட்டத்தில் வீடு வாங்க விரும்பும் சந்தாதார்களுடன் வங்கிகள், நிதி நிறுவனங்கள், மனைக் கட்டும் நிறுவனங்கள், ஊழியர்கள் வைப்பு நிதி அமைப்பு என மூன்று தரப்புக்கு இடையிலும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

தவனை முறை

தவனை முறை

இதுமட்டும் இல்லாமல் தங்களது எதிர்கால பிஎஃப் தொகையில் இருந்து வீட்டுக் கடனை தவனை முறையிலும் செலுத்திக்கொள்ளவும் இத்திட்டம் பரிந்துரை செய்கிறது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாரி

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாரி

சென்ற மே மாதம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா லோக்சபாவில் கேட்கப்பட கேள்விக்கு ‘குறைந்த விலையில் வீடு வாங்குவதற்கான சத்தியக் கூறுகளைப் பற்றி மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக' கூறியிருந்தார்.

2015 திட்ட நிரல்

2015 திட்ட நிரல்

கடந்த வருடம் செப்டம்பர் 16-ம் தேதி மத்திய அறங்காவல் வாரியம் வெளியிட்ட திட்ட நிரலில் பிஎஃப் சந்தாதார்களுக்கான குறைந்த விலை வீட்டு மனை திட்டம் பட்டியலிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிஎஃப் இருப்பை சரிபார்க்க எளிமையான 5 வழிகள்

பிஎஃப் இருப்பை சரிபார்க்க எளிமையான 5 வழிகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Can buy home using PF very soon: New Scheme by EPFO

Can buy home using PF very soon: New Scheme by EPFO
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X