ஐஐடி கேம்பஸ் இண்டர்வியூவ்-இல் பங்குபெற 20 நிறுவனங்களுக்கு தடை?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: நாட்டின் தலைசிறந்த கல்லூரிகளாகத் திகழும் ஐஐடி-யில் 2016ஆம் ஆண்டுக் கேம்பஸ் இண்டர்வியூவ்-இல் பங்குபெற சுமார் 20 ஸ்டார்ட்-அப் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் வர்த்தகம் செய்யும் பல முன்னணி நிறுவனங்கள் ஐஐடி மாணவர்களைத் தங்கள் நிறுவனத்தில் பணியில் அமர்த்துவதில் மிகப்பெரிய அளவிலான போட்டி இருக்கும்.

ஆனால் கடந்த வரும் ஐஐடி கல்லூரி மற்றும் மாணவர்கள் சந்தித்த கசப்பான அனுபவத்தின் எதிரொலியாக 2016ஆம் வளாகத் தேர்வில் பங்குபெற 20 நிறுவனங்களுக்கு ஐஐடி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

20 நிறுவனங்களுக்குத் தடை

20 நிறுவனங்களுக்குத் தடை

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஐடி கல்லூரியின் வளாகத் தேர்வில் பல ஸ்டார்ட்-அப் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் பங்குபெற அதிகளவில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டது.

ஆனால் ஸ்டார்ட்-அப் சந்தையில் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான நிலையின் காரணமாக நிறுவனங்கள் உறுதியளித்த வேலைவாய்ப்பு, சம்பளத்தை அளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

 

வேலைவாய்ப்பு மறுப்பு

வேலைவாய்ப்பு மறுப்பு

இன்னும் சில நிறுவனங்கள் உறுதியளித்த வேலைவாய்ப்பையே மறுத்தது. இதனால் பல மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

இதன் எதிரொலியாகவே தற்போது ஐஐடி கல்லூரியின் வேலைவாய்ப்பு அமைப்பு 20 நிறுவனங்களுக்குத் தடை விதித்துள்ளது.

 

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், ஐஐடி மாணவர்களுக்கு அளித்த வேலைவாய்ப்பு நியமனத்தை மறுக்கவில்லை என்றாலும் நிறுவனத்தில் சேரும் நாளை தள்ளிவைத்தது.

இதனால் இம்முறை வெறும் எச்சரிக்கை மட்டும் அளித்துவிட்டு வளாகத் தேர்வில் பங்குபெற அனுமதி அளித்துள்ளது AIPC அமைப்பு. AIPC- All-IIT Placement Committee.

 

சோமேட்டோ

சோமேட்டோ

கடந்த வருடமே தடையில் இருந்த முக்கிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான சோமேட்டோ 2016ஆம் ஆண்டு வளாகத் தேர்விலும் தடை விதிக்கப்பட்டுள்ளது என AIPC அமைப்பின் தலைவர் கஸ்தூரிபா மோஹான்டி தெரிவித்தார்.

ஆனால் இதுக்குறித்தி விதிமானக் கேள்விகளுக்கும் சோமேட்டோ பதில் அளிக்கவில்லை.

 

2 வாரம்

2 வாரம்

தற்போதைய நிலையில் தடை செய்யப்பட்ட பட்டியலில் 20 நிறுவனங்கள் இருக்கும் நிலையில் AIPC அமைப்பின் முக்கிய ஆலோசனை கூட்டத்திற்குப் பின் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் முழுமையான பட்டியல் அடுத்த 2 வாரத்திற்குள் வெளியிடப்படும் என இவ்வமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மறுப்பு

மறுப்பு

தற்போது தயாரிக்கப்பட்ட 20 நிறுவனங்கள் கொண்ட பட்டியலில் பிளிப்காரட் இல்லை என்பதை உறுதி செய்த மோஹான்டி எஞ்சியுள்ள நிறுவனங்கள் பெயர் தெரிவிக்க மறுத்தார்.

ஆனால் இதுபோன்ற நிறுவனங்களின் மெத்தனமான நடவடிக்கைகளை இனி ஏற்க முடியாது எனவும் அவர் கூறினார்.

 

AIPC அமைப்பு

AIPC அமைப்பு

இவ்வமைப்பில் தற்போது 12 ஐஐடி கல்லூரிகள் உள்ளது. 2017ஆம் ஆண்டு வளாகத் தேர்வு குறித்து ஐஐடி கான்பூர் கல்லூரியில் ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐஐடி பாம்பே பங்குபெறவில்லை எனக் கஸ்தூரிபா மோஹான்டி தெரிவித்தார்.

 

ஸ்டார்ட்-அப்

ஸ்டார்ட்-அப்

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை 3 விதமாகப் பிரிக்கப்பட உள்ளது. வேலைவாய்ப்பைத் தள்ளிப்போட்ட நிறுவனங்கள் ஒரு பரிவாகவும், சம்பள குறைப்பு, பதவி மாற்றம் செய்த நிறுவனங்களை 2வது பிரிவாகவும், வேலைவாய்ப்பை அளிக்க மறுத்த நிறுவனங்களை 3வது பிரிவாகவும் வகைப்படுத்தியுள்ளனர்.

இதில் முதல் 2 பிரிவுகளுக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பவும், 3வது பரிவில் இருக்கும் நிறுவனங்களை வளாகத் தேர்வில் பங்குப்பெற தடை செய்யவும் AIPC அமைப்பு முடிவு செய்துள்ளது.

 

மாணவர்களின் கனவில் மண்ணை ப..." data-gal-src="http:///img/600x100/2016/08/16-1471330247-9flipkartzomato.png">
பிளிப்கார்ட் மற்றும் சோமேட்டோ

பிளிப்கார்ட் மற்றும் சோமேட்டோ

<strong>மாணவர்களின் கனவில் மண்ணை போட்ட பிளிப்கார்ட்..!</strong>மாணவர்களின் கனவில் மண்ணை போட்ட பிளிப்கார்ட்..!

<strong>ஐஐடி கேம்பஸ் இண்டர்வியூவில் தடை செய்யப்பட்ட சோமேட்டோ..!</strong>ஐஐடி கேம்பஸ் இண்டர்வியூவில் தடை செய்யப்பட்ட சோமேட்டோ..!

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IITs will likely blacklist 20 startups that reneged on job offers to students

The Indian Institutes of Technology (IITs) are likely to blacklist about 20 startups and ecommerce companies this placement season for having reneged on offers made to graduating students last year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X