தேசிய ஓய்வூதிய திட்டத்தின் வருடாந்திர பங்களிப்பு ரூ.1,000 ஆகக் குறைப்பு

Posted By:
Subscribe to GoodReturns Tamil

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் 6,000 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச வருடாந்திர பங்களிப்பை 1,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

தேசிய ஓய்வூதிய திட்டம்

மாத சம்பளம் வாங்குபவர்கள் அனைவருக்கும் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது உதவுவது பென்ஷன் எனப்படும் ஓய்வூதியம்.

அரசுத் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு ஏற்கனவே நிலையில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் நிலை என்ன என்பது கேள்வி குறியாகவே இருந்தது.

ஓய்வூதிய வசதி இல்லாத மாத சம்பளதாரர்கள் பெரும் அளவில் இருந்த நிலையில் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) என்ற பெயரில் மத்திய அரசு துவங்கியது பெறு வரவேற்பை பெற்றது.

 

முதலீடுகள் மற்றும் பிரிவுகள்

ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான ஒரு நிதி ஆண்டில் குறைந்தபட்சம் ரூ.6,000 பங்களிப்பு செலுத்தி இருக்க வேண்டும் என்று இருந்ததை தற்போது 1,000 ரூபாயாக குறைத்து அறிவித்துள்ளனர்.

தேசிய ஓய்வூதிய திட்டம் இரண்டு பிரிவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

 

பிரிவு-1

பிரிவு 1-இல் கணக்கு ஆரம்பித்த பிறகு இடையில் எடுக்க இயலாது. 60 வயதை அடைந்த பிறகு தான் எடுக்க இயலும். இதில் முதலீடு செய்பவர்களுக்கு வரி விலக்கு உண்டு.

முன்பு குறைந்தபட்சமாக இருந்த 6,000 ரூபாய் பங்களிப்பு செலுத்தி இருக்க வேண்டும் என்று இருந்ததை 1,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

பிரிவு-2

பிரிவு 2-இல் இருந்து உங்கள் பங்களிப்பை எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெறலாம். ஆனால் இத்திட்டத்தில் வரும் லாபத்திற்கு வரி செலுத்தியாக வேண்டும்.

இதில் குறைந்தபட்சம் ரூ.250 எனத் தவனை முறையில் ஆண்டுக்கு 2,000 ரூபாய் வரை பங்களிப்பை செலுத்த வேண்டும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம் பிரிவு இரண்டு சேமிப்பு கணக்கில் நல்ல லாபம் பெறலாம் என்று கூறியுள்ளது

 

ஆரோக்கியமான ஓய்வூதியம்

என்ன தான் கணக்கைத் தொடர குறைந்தபட்ச தொகையை குறைத்திருந்தாலும் நல்ல ஒரு ஆரோக்கியமான ஓய்வூதியத்தைப் பெற அதிகமான பங்களிப்பு தேவை.

சந்தாதார்கள்

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் 1.30 கோடி சந்தாதார்கள் உள்ளதாகவும் மொத்த சொத்து மேலாண்மையின் கீழ் கணக்கிடும் போது 1.37 லட்சம் கோடிகளுக்கும் மேலாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

NPS Contribution reduces to Rs 1.000/year

National pension system Contribution reduces to Rs 1.000/year.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns