English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు

கத்தி விஜயாக மாறியது 'பதஞ்சலி'.. ஒன்று சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள்..!

By: Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil

சென்னை: ஒரு தசாப்தத்திற்கு (10 வருடங்கள்) முன்பு இந்தியாவில் நவீன வர்த்தக முறை நுழைந்தது. அது இந்தியர்களின் ஷாப்பிங் முறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை நாம் மறுக்கமுடியாது. அதன் பின் இந்தியர்களின் வர்த்தகம் மற்றும் ஷாப்பிங் முறைகள் முற்றிலும் மாறிவிட்டது என்றே சொல்லலாம்.

இந்த மாற்றத்தின் எதிரொலியாகவே சமகாலத்தில் இ-காமர்ஸ் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வழக்கம் இந்தியர்களிடையே மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.

இதேபோன்ற தாக்கத்தைத் தான் இந்திய நுகர்வோர் சந்தையில் பாபா ராம்தேவ் -வின் பதஞ்சலி நிறுவனம் செய்துள்ளது.

பதஞ்சலி-யின் புதிய பாதை

இன்றைய வர்த்தகச் சந்தையில் நுகர்வோர் பொருட்களில் தனி முத்திரை பதித்த பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள் இந்திய நுகர்வோர் துறையில் புதிய பாதையை உருவாக்கி வருகிறது.

இந்தப் புதிய பாதையினால் காலம்காலமாக மக்களை ஏமாற்றி அதிக லாபம் பெற்று வந்த நுகர்வோர் நிறுவனங்கள் தற்போது வர்த்தகச் சந்தையைப் படிக்கப் போராடி வருகிறது.

 

தாக்கம்

பதஞ்சலி ஆயுர்வேத பொருட்களின் புகழ் மற்றும் வலுவான பிராண்ட் மதிப்பு வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் துறையில் மிகப்பெரிய அதிர்வுகளை உருவாக்கி வருகிறது.

கத்தி விஜய்

சொல்லப்போனால் தற்போது கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று கூடி கத்தி விஜயை எதிர்ப்பது போல் பதஞ்சலி நிறுவனத்தை ஊத்தி மூட சதி வேலை செய்ய முயற்சி செய்து வருவது ஒரு பக்கம் இருந்தாலும், தயாரிப்பு பொருட்களின் விலை குறைப்பு, வர்த்தக விரிவாக்கத்திற்கா பல நூறு கோடி ரூபாய் முதலீடு என மறுபக்கம் வேலை நடந்து வருகிறது.

அப்படி என்ன இருக்கு..

இக்குறுகிய காலகட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் போட்டியை எதிர்கொண்டு இத்தகைய வளர்ச்சி அடைந்துள்ளது பதஞ்சலி-யின் வெற்றியின் ரகசியம் என்னவாக இருக்கும்.?

அனைவரும் பதஞ்சலி ஆயுர்வேத பொருட்களின் வெற்றியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கற்றுக்கொண்ட முக்கியமான பாடங்கள் என்ன..?

 

 

பிராண்ட் பிரீமியம்

ஒரு பிராண்ட் அதன் வாடிக்கையாளர்களிடம் தன் பொருட்களின் மதிப்பை விடச் சற்று அதிகமாக வசூலிக்கும் கட்டணம்.

பதஞ்சலி பொருட்கள் அதே துறையில் உள்ள அதன் முன்னோடிகளை விட மலிவாகக் கிடைக்கின்றன.

"பிராண்டுகள் தன்னுடைய பொருட்களுக்கான பிரீமியம் சார்ஜ் மூலம் அதனுடைய பிராண்டுகளை விளம்பரம் செய்து அதனுடைய பொருட்களுக்கான தாக்கத்தை மேலும் சந்தையில் நிலைநிறுத்தும் நடைமுறை, பதஞ்சலி பொருட்களின் வரவு மூலம் தலைகீழாக மாறி வருகிறது", என மிலிந்த் ஸர்வாதே, மாரிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மற்றும் படைக்கப்படாத மதிப்பு ஆலோசகர் தெரிவிக்கின்றார்.

 

தயாரிப்பு திறன்

பதஞ்சலி நிறுவனம் பொருட்களின் தயாரிப்பு திறன் மீது மீண்டும் கவனத்தைக் கொண்டு வந்துள்ளது. விளம்பர இரைச்சல்களுக்கு இடையே, பொருட்களின் உண்மையான மதிப்பு நுகர்வோருக்குக் கிடைக்க வேண்டும்.

நெய் மற்றும் பல் பேஸ்ட் ஆகிய இரண்டும் பதஞ்சலி நிறுவனத்தின் மிகப் பிரபலமான தயாரிப்புகளாக விளங்குகின்றன. இந்த இரண்டு பொருட்களுக்கும் சந்தையில் போதுமான உள்ளூர் மற்றும் பன்னாட்டு போட்டியாளர்கள் இருந்தாலும் அதன் தாக்கம் சந்தையில் அதிகமாக உணரப்படுகின்றது.

ஸ்பார்க் கேப்பிடலின் சமீபத்திய அறிக்கையின் படி, இத்தகைய் இடையூறுகள் சந்தையில் குறுகிய காலச் சலசலப்பை உருவாக்கினாலும், அவை நுகர்வோர் பொருட்களுக்கான மதிப்பை மீண்டும் கொண்டு வரும் மிக முக்கியமான காரணியாக விளங்குகின்றது.

 

ஒரு வலுவான பிராண்ட் தூதுவர்

பாபா ராம்தேவ், ஒரு யோகா, மூலிகை மற்றும் கரிம பதஞ்சலி தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் ஒரு பிராண்ட் தூதுவராக இருக்கின்றார். அவர் சார்ந்திருக்கும் துறை மற்றும் அவருடைய பிராபல்யம் ஆகிய இரண்டும் பதஞ்சலி பொருட்களை மக்களின் மனதில் எளிதாகக் கொண்டு சேர்க்கின்றன. பிராண்ட் தூதுவரின் துறை அவர் விளம்பரப்படுத்தும் பொருட்களில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்குகின்றன என்கிற வாதம் இங்கு ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேகி நூடுல்ஸின் மீது கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடையானது, பிராண்ட் தூதர்கள் பிராண்ட் தடுமாற்றத்தின் போது எவ்வாறு தாக்கத்தை உருவாக்க முடியும் என்பதைக் காட்டியது.

 

 

நுகர்வோரின் காலம் கடந்த சிரிப்பு

பதஞ்சலி பொருட்களின் அறிமுகம் மற்றும் அதனுடைய தாக்கம் சந்தையில் ஏற்கனவே பிரபலமாக உள்ள பல்வேறு பிராண்டுகளை ஒரு பள்ளத்தின் நுனியில் நிற்கும் நிலைக்கு ஒப்பாக நிறுத்தியுள்ளது. அதன் காரணமாக நுகர்வோர்கள் அதிக மதிப்புடைய பொருட்களைக் குறைந்த விலைக்குப் பெற்று பயன் பெறுகின்றனர்.

அது அதிக இலாப வரம்புகள் இனிமேலும் நுகர்வோரிடம் செல்லுபடியாகாது என்பதை எப்எம்சிஜி நிறுவனங்களுக்கு நினைவூட்டுகிறது.

 

புதுமை அல்லது சீர்குலைவு

பதஞ்சலி நிறுவனப் பொருட்கள், சந்தையில் சீர்குலைவு எப்பொழுது வேண்டுமானாலும் எந்தப் புள்ளியில் வேண்டுமானாலும் தொடங்கும் என்பதை மீண்டும் ஒருமுறை வலுப்படுத்தியுள்ளது.

உயர் ஒழுங்கீனத்துடன் தொடர்புடைய சந்தை ஊடுருவல் மற்றும் குறைந்த நுகர்வோர் தேவை இருந்த போதிலும், பதஞ்சலி பொருட்கள் சந்தையில் அதன் தாக்கத்தை உணரச் செய்கின்றன.

"இது எப்போதும் சந்தை ஒரு புதிய அகழியை உருவாக்கும் நோக்கத்துடன் விளங்குகின்றது என்பதைக் காட்டுகிறது, மேலும் இது எப்பொழுதும் பிரதியெடுக்க முடியாதது மற்றும் போட்டியிட இயலாதது", என நுகர்வோர் தொழில் கண்காணிப்பு ஆய்வாளர் கூறுகிறார்.

 

முறையான நிர்வாகம் ஈடு செய்ய முடியாதது

கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ .5,000 கோடி வர்த்தகம் என்கிற மைல்கல்லைப் பதஞ்சலி நிறுவனம் எட்டிப் பிடித்தது. இதே நிலையை அடையைப் பிற எப்எம்சிஜி நிறுவனங்களுக்குப் பல ஆண்டுகள் பிடித்தது. எனவே பதஞ்சலி நிறுவனத்தின் வேகமான வளர்ச்சியின் முன் மற்ற நிறுவனங்களின் செயல்திறன் மிகவும் சிறியதாகி விட்டது.

"முறையான நிர்வாகக் கட்டமைப்பு சில நேரங்களில் மிதமான வணிக வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்றது ஏனெனில் அளவிற்கு அதிகமான நுட்பங்கள் சில நேரங்களில் பாதகமாக முடியலாம்", என ஸர்வாதே தெரிவிக்கின்றார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Patanjali teaches India's FMCG sector a new lesson

A decade ago it was modern trade which changed the way Indians shopped. Then came e-commerce and online shopping.
Story first published: Saturday, August 20, 2016, 10:23 [IST]
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC