நாராயண மூர்த்தி, அசிம் பிரேம்ஜியின் முதல் சந்திப்பு எப்படி நடந்தது தெரியுமா..?

Posted By: Boopathi Lakshmanan
Subscribe to GoodReturns Tamil

உலகளவில் வர்த்தகத்தை கொண்ட இந்திய பொருளாதாரத்தின் மிகமுக்கிய தூணாக இருக்கும் 110 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐடி துறையில் மூடி சூடா மன்னாக இருப்பது இன்போசிஸ் மற்றும் விப்ரோ.

இவ்விரு நிறுவனங்களுக்கு மத்தியில் வர்த்தக போட்டி, சந்தையில் பல கசப்பான சம்பவங்களை வெளிப்படையாக சந்தித்தாலும் இந்த 2 நிறுவனங்களின் தலைவர்களுக்கு மத்தியில் இருக்கும் நட்பு யாருக்கும் தெரியாத ஒன்று.

நாட்டின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமாக திகழும் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களின் ஒருவரான நாராணயமூர்த்தி-க்கும் விப்ரோ குழுமத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி இப்படி ஒரு தொடர்பா..? நீங்களே பாருங்கள்.

முதல் சந்திப்பு

ஆசிம் பிரேம்ஜியை நான் முதன் முதலில் சந்தித்த போது பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ்-ன் மென்பொருள் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்தேன். என்னுடைய பாஸாக இருந்த திரு.அசோக் பாட்னி, எனக்குக் கிடைத்த தலைவர்களிலேயே மிகச்சிறந்தவராக இருந்தார்.

1979-80-களில் சில தனிப்பட்ட காரணங்களால், அவர் புனேவில் சில காலம் இருக்க விரும்பினார். நான் அவருக்குக் கீழ் பணி புரிந்து வந்ததால், வாரம் ஒருமுறை புனேவிற்குச் சென்று முக்கியமான செயல்பாடுகள் பற்றிய தகவல்களை அவருக்குக் கொடுத்து வந்தேன்.

 

அசோக் பாட்னி

நான் திரு.அசோக் பாட்னியுடன் 100% திருப்தியுடன் பணி புரிந்த வந்தாலும் இந்தப் புனே சென்று வரும் ஏற்பாடு, எனக்குச் சற்றே உறுத்தலாக இருந்தது. எனவே தனியாகத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்னதாக, வேறு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன்.

பிரசன்னா

விப்ரோவின் மனித வள மேம்பாடு பிரிவின் தலைவராக இருந்த என்னுடைய நண்பர் பிரசன்னா, விப்ரோவில் தொடங்கப்பட இருக்கும் தொழில்நுட்ப குழுவில், மென்பொருள் பிரிவின் தலைவராக இருக்க முடியுமா என்று கேட்டு ஆசிமுடன் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார்.

'இல்லை' என்பதற்கான நன்றி!

ஆசிம் மும்பையிலுள்ள வில்லிங்டன் கிளப்பிற்கு என்னைக் கலந்துரையாடுவதற்காக அழைத்துச் சென்றார். அவர் மிகவும் பண்பானவராகவும், எளிதில் அணுகக் கூடியவராகவும் இருந்தார். உண்மையில் நான் அவரைத் திருப்திப்படுத்த முடியவில்லை, எனக்கு வேலையும் கிடைக்கவில்லை.

ஆசிம் என்னை 'நிராகரித்தற்கு' நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன. இல்லையென்றால் நான் இன்போசிஸ்-ஐ துவங்குதவற்கு மேலும் சில ஆண்டுகள் ஆகியிருக்கும்.

இந்தக் கலந்துரையாடலின் போது, சந்தையையும், போட்டியாளர்களையும் பற்றி அறிந்து கொள்ள அவர் காட்டிய தீவிரமான ஆர்வம் தான், நான் அவரிடம் கவனிக்கக் கூடிய விஷயமாக இருந்தது.

 

பயணம்

உலகமயமாக்கலுக்குப் பிந்தைய காலத்தில், இன்போசிஸ் செயல்படத் துவங்கிய பின்னர்த் தான், நாங்கள் சில நல்ல விஷயங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று ஆசிம் உணர்ந்து கொண்டு, என்மேல் உள்ள மரியாதையையும் மேலும் சில படிகள் பெருக்கிக் கொண்டார்.

எங்களுடைய முன்னேற்றம் மற்றும் சந்தை திட்டங்கள் பற்றித் தெரிந்து கொள்ளப் பல முறை அவர் என்னை அழைப்பார். எங்களுடைய போட்டியாளர்களை விட நாங்கள் மேலான நிலையில் இருப்பதற்குக் காரணம் புதிய எண்ணங்களை நாங்கள் உருவாக்கும் வேகமும் மற்றும் அவற்றைச் சிறப்பாகவும், வேகமாகவும் நடைமுறைப்படுத்துவதும் தான் காரணம் என்பதை நான் அறிந்திருப்பதால், அவரிடமிருந்து நான் எதையும் மறைக்காமல், திறந்த மனதுடன் பேசுவேன்.

 

பெங்களுரூ

எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள எங்களுடைய அலுவலகத்திற்கு வர அவர் பலமுறை வெட்கப்பட்டுள்ளார். இதன் காரணமாகச் சர்ஜாபூரில் உள்ள அவருடைய விப்ரோ வளாகத்தின் தனியான இடத்திற்கு நான் செல்ல வேண்டியிருந்தது.

பெரும்பாலான நேரங்களில் நான் அவருடைய அலுவலகத்திற்குத் தனியாகவும், சில நேரங்களில் நந்தன் நீலகேணி, கிரிஸ் கோபாலகிருஷ்ணன் மற்றும் மோகன்தான் பாய் ஆகியோருடனும் சென்றுள்ளேன். நாங்கள் இன்போசிஸ்-ஐ எப்படி நிர்வகிக்கிறோம் என்று விலாவரியான கலந்துரையாடல்களைச் செய்வோம்.

ஆசிமும், அவருடைய தலைமை நிர்வாக இயக்குநர்களான விவேக் பால் மற்றும் சந்திரசேகரன் ஆகியோரும் சரமாரியான கேள்விகளைக் கேட்பார்கள். நாங்கள் அவர்களுக்கு உண்மையான பதில் அளித்தோம்.

 

சுதா மூர்த்தி- யாஸ்மின்

ஆசிமும், அவருடைய மனைவி யாஸ்மின்-ம் நல்லொழுக்கம் கொண்ட எளிமையான மனிதர்களாவர். என்னுடைய மனைவி சுதா மற்றும் யாஸ்மின் இருவரும் நல்ல நண்பர்களாகவும், எழுத்துத் துறையில் பொதுவான ஈடுபாடு உள்ளவர்களாகவும் இருந்தார்கள்.

ஆசிம் எப்பொழுதுமே கடின உழைப்புக்கும், கண்டிப்புக்கும் பேர் போனவராக இருந்தார். அவர் இந்தியாவின் பொருளாதாரத்தைக் கடந்து வந்திருந்தார் மற்றும் சச்சரவுகளுக்காக அவரைச் சந்திப்பதும் மற்றும் எங்களுடைய உரையாடல்களைத் தொடர்வதும் எங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருந்தது.

 

பிரேம்ஜி-மூர்த்தி

இந்தோ-பிரெஞ்சு வணிகக் கூட்டமைப்பிற்கு டாக்ஸிகள் அல்லது சப்வே-க்களில் சென்றும், 3 நட்சத்திர ஓட்டல்களில் தங்கியிருந்தும் பாரீஸ் சென்று வந்த இரண்டு நபர்கள் நாங்கள் மட்டுமே. அவருடைய மகன் ரிஷாத் மற்றும் மருமகள் அதிதி, இருவருமே தந்தையைப் போலவே நேர்மை, எளிமை, சிக்கனம் மற்றும் கடின உழைப்பைக் கொண்டிருந்தார்கள். நானும், அதிதியும் சமூகம் சார்ந்த அமைப்பான 'எம்ப்ரேஸ்'-ற்காக இணைந்து பணியாற்றி உள்ளோம்.

நேர்மையான மனிதர்

ஆசிம் ஒரு நேர்மையான மனிதர். விப்ரோவின் தவறுகளை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வார் மற்றும் அவற்றைச் சரி செய்வதற்கு முயற்சிகளைச் செய்வார் அவர்.

2001-ல், நந்தன் மற்றும் பனீஸ் மூர்த்தி இருவரும் என்னிடம் வந்து, விப்ரோவின் வியாபாரப் பிரிவின் நபர் ஒருவர் எங்களுடைய பிரசன்டேஷன்-ஐ எப்படி ஐரோப்பிய வடிவில் ஏமாற்றிக் காப்பியடித்தார் என்றும், அதை ஒரு வாடிக்கையாளருக்கு போட்டுக் காண்பித்தார் என்றும் தெரிவித்தனர்.

பனீஸ்-ன் பிரசன்டேஷனைக் கண்டு ஈர்க்கப்பட்டிருந்தார் அந்த வாடிக்கையாளர்.

 

மன்னிப்பு

இதைப்பற்றி நான் ஆசிமிடம் பேசி, இந்தத் தவறை அவருடைய பணியாளர் மீண்டும் செய்யக் கூடாது என்று கட்டளையிடுமாறு கேட்டேன். விப்ரோவின் சார்பாக அவர் மன்னிப்பு கேட்டதுடன், அவ்வாறு மீண்டும் நடக்காமல் இருக்கச் செய்ய வேண்டிய நடவடிக்கையையும் எடுத்து விட்டார்.

நிர்வகி, கட்டுப்படுத்தாதே

இந்தியாவில் மிகச்சிறந்த நிர்வாகம் செய்பவர்களில் ஆசிம் மிகச்சிறந்தவராவார். நிர்வாகத்தை, கட்டுப்படுத்துதலில் இருந்து பிரித்து எடுப்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாக அவர் இருந்தார்.

அவர், நம்மைப் போலவே நாட்டினுடைய சட்டங்களை மதித்து நடப்பதற்குத் தான் முதலிடம் கொடுப்பார். நேர்மை, ஒழுக்கம், நியாயமாக இருத்தல் மற்றும் அமைதி ஆகியவற்றிற்காகக் குரல் கொடுப்பவராக ஆசிம் இருந்தார்.

 

முடிவுகளும்..

ஒரு விஷயத்தை எடுத்தால் அதன் ஆழம் வரை சென்று, எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர் ஆசிம்.

எடுக்கக் கூடிய ஒவ்வொரு முடிவிலும், ஒதுக்கி தள்ளக் கூடிய அதிகபட்ச அளவு என்ற (Degree of Optimal Ignorance) என்ற ஒரு விதியை நான் பயன்படுத்தி வருகிறேன். அதாவது, நீங்கள் எடுக்கக் கூடிய எந்தவொரு முடிவும் திட்டமிட்டதாக இருக்க வேண்டுமேயொழிய, உங்களுடன் வேலை செய்பவர்களுக்காகவோ அல்லது உங்களுடைய பாஸை கருத்தில் கொண்டு குறுகிய நோக்கம் உடையதாகவோ இருக்கக் கூடாது.

 

தவறும்.. முயற்சியும்..

ஆசிமுடன் நான் பேசியதை வைத்துப் பார்க்கும் போது, அவர் அளவுக்கு அதிகமான தகவல்களால் தான் தவறு செய்கிறார் என்று நினைத்தேன். இது அவருக்கும் தெரியும் மற்றும் அவர் அதைத் தவிர்க்கவும் முயற்சி செய்கிறார்.

ஏற்றுமதி வரி

ஆசிமும் நானும் ஏற்றுமதிகளுக்கான வரி விலக்கை ஏற்றுக் கொள்வதில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறோம் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இந்திய சந்தைகளில் களமிறங்கியுள்ள வியாபாரிகள், இந்தியாவைப் போலவே ஏற்றுமதி சந்தையிலும் மதிப்பீடுகளைக் கூட்டியிருக்கிறார்கள் என்பதை நான் நம்புகிறேன்.

 

நாணய பரிமாற்றம்

இரண்டாவதாக, நம்முடைய வாடிக்கையாளர்களிடம் நாம் நேரடியாகப் பணத்தைப் பெறுகிறோம், அவை பொதுவாகவே மாற்றிக் கொள்ளும் விகிதத்தையும் தொட்டுச் செல்லும் வகையில் இலாபத்துடன் இருக்கும். இறுதியில், இலாபகரமான தொழிலை நாம் அடைந்திருப்போம்.

எனவே, எங்களுடைய தொழிலில் வரிவிலக்கு இருப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், நான் ஆசிமுடன் பேசிய உரையாடல்கள், அவர் வரிவிலக்கு தொடர்வதை ஆதரிக்கிறார் என்பதையே காட்டுகிறது.

 

அசிம் குடும்பம்

ஆசிம், யாஸ்மின், ரிஷாத் மற்றும் அதிதி ஆகியவர்களைத் தெரிந்து கொண்டது ஒரு மகிழ்ச்சியான விஷயமாகும். ஒவ்வொருவரும் இந்தியர்களின் நேர்மை, எளிமை, அமைதி, கடின உழைப்பு, நியாயமாக இருத்தல் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றிற்கான சிறந்த முன்னுதாரணமாக இருப்பவர்களாவர்.

சமூகச் சேவை செயல்பாடுகளில் இந்தியாவிலேயே முதன்மையானவராக இருக்கிறார் ஆசிம். துவக்கக் கல்வியை முன்னேற்றம் காணச் செய்வது தான் அவர் கவனம் செலுத்தி வருகிறார். தொழில்துறையில் ஆசிம் போன்று மேலும் பலர் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

 

50 வருட சாம்ராஜியம்

விப்ரோவை அதன் தலைவராக நின்று வெற்றிகரமாக வழிநடத்திச் செல்வதில் 50 வருடங்களை ஆகஸ்ட் 17-ல் ஆசிம் பூர்த்திச் செய்துள்ளார். அவர் மேலும் பல ஆண்டுகள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், உற்பத்தி மற்றும் வளமுடன் விப்ரோவின் தலைவராக வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். ஒரு சமூகச் சேவகராகவும், தேசப்பற்று மிக்க இந்தியனாகவும் அவர் எப்பொழுதும் இருக்கிறார்.

கல்வி தகுதி

தென்னிந்திய நிதியமைச்சர்களின் கல்வி தகுதி இதுதான்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Azim Premji I know: Narayana Murthy

The first time I met Azim premji, I was working at Patni Computer Systems as head of the Software Group. My boss, Ashok Patni, is the best boss I have ever had.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns