70% ஹெச்-1பி விசாக்களை இந்தியர்களுக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகளவில் அனைத்து மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய கனவாக இருப்பது அமெரிக்கா. அமெரிக்காவில் சில வருடங்கள் வேலை செய்துவிட்டால் போதும் மொத்த வாழ்க்கையும் செட்டில் ஆகிவிடும் என்பதே இத்தகைய ஆர்வத்திற்கு அடித்தளம்.

அந்த வகையில் அமெரிக்காவில் சென்று வேலை செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் ஹெச்-1பி விசா மிகவும் அவசியம்.

இந்நிலையில் அக்டோபர் 2014 முதல் செப்டம்பர் 2015ஆம் ஆண்டுக் காலத்தில் அமெரிக்கா அளித்துள்ள மொத்த ஹெச்-1பி விசாவில் 70 சதவீத விசாக்கள் இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது அமெரிக்கத் தூதரக விவகார துறை செயலாளர் மைக்கெல் பாண்ட் தெரிவித்துள்ளார்.

ஹெச்-1பி விசா நெருக்கடிக்கு இதுதான் காரணம்..!

இதன் மூலம் ஓபாமா அரசு தற்போது நடைமுறையில் உள்ள திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த முடிவு செய்துள்ளதையும் அவர் தெரிவித்தார். மைக்கெல் பாண்ட் செவ்வாய்க்கிழமை 5வது தூதரக மாநாட்டில் கலந்துகொண்ட போது செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

மேலும் அக்டோபர் 2014 முதல் செப்டம்பர் 2015ஆம் ஆண்டுக் காலத்தில் அமெரிக்க அரசு இந்தியர்களுக்கு 11,000 ஹெச்-1பி விசா வழங்கியுள்ளது. இக்காலகட்டத்தில் அமெரிக்க உலக நாடுகளுக்கு அளித்த மொத்த விசாவில் 70 சதவீதம் என்பதையும் மைக்கெல் குறிப்பிட்டார்.

அதேபோல் இக்காலகட்டத்தில் உலக நாடுகளுக்கு வழங்கிய மொத்த எல்-1 விசாவில் 30 சதவீதம் இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதையும் அமெரிக்கத் தூதரக விவகார துறை இந்தச் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளது.

இதன் எதிரொலியாகவே அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அமைச்சர்கள் விசா கட்டணத்தை உயர்த்தவும், இந்தியாவிற்கு வழங்கும் விசா எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் புதிய மசோதாவைக் கொண்டு வர வலியுறுத்தினர். தற்போது இந்தப் புதிய மசோதா நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்டர்நெட் மூலம் இப்படியும் பணம் சம்பாதிக்கலாம்.!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indians hold the highest numbers of H-1B visas

The number of H-1B visas issued to Indians remains high and it constitutes 70% of the total H-1B visas issued worldwide by Washington, said visiting US Assistant Secretary of State for Consular Affairs Michele Bond
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X